திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை திருமால் முதலியோர் இறைவனது பொன்போலும் திருவடி களைத்தாமாக அறியும் ஆற்றலுடையரல்லர். அவ்வாறாக நாம் அத்திருவடியை அறிந்து வணங்குவதற்கு முடியுமா? முடியாதே.என் ஆகம் உள்புகுந்து ஆண்டருளினன். அவன் அருள் திறம் இருந்தவா றென்னே! அவன் அணிகலமாகிய பாம்பினைப் பாடிக்கொண்டு நாம் அல்லிமலர்களைக் கொய்வோமாக என்பதாம். 778 திருமாலும் பிரமனும் தேவர்களிற் சிறந்தோரா தலின் "முன்னாய மாலயனும்" என்றார். தானவர் - அசுரர். "தானவர் தயித்தியர் கண்ட கர்... அசுரர்" எனப் பிங்கலந்தையில் (109) வருதல் காண்க. பொன்னார் திருவடி- பொன்போன்ற அரிய திருவடி. "பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்'' (தே. நாவு. 109-1) என வரு தல் காண்க. திருவடியைத் தாமறியாமைக்குத் தற்போதம் ஏதுவா கும். போற்றுவதே என்பதில் ஏகாரம் வினாவும் எதிர்மறையும். ஆகம் - மார்பு: ஈண்டு உள்ளத்தினை உணர்த்தியது: புகுந்து ஆண்டுகொண்டான் - தானே வந்து புகுந்து ஆண்டுகொண்டான். பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே' (கோயின். மூத். 8) பொருளா வெனைப் புகுந்தாண்டு" (திருக்கோவை 13) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. இலங்கு அணியாம் பல்நாகம் - விளங்குகின்ற அணிகலங்களாகிய பல நாகம். "பருமணிமா நாகம் பூண்டான் கண்டாய்" ''பொறி யிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட புண்ணியனை" (தே நாவு. 286-1; 304-9) " கறைக்கொள் மணிகண்டமுந் திண்டோள்களுங் கரங்கள் சிரந்தன்னிலுங் கச்சுமாகப், பொறி கொளரவம் புனைந்தீர் பலவும்'' (சுந்.9-8) என வருவன காண்க. நாகம் -தாருகா வனத்து இருடி. களால் இறைவனை அழிக்குமாறு ஏவிவிடப்பட்ட பாம்பு. நாகத் தினைப் பாடுதல் ''கவித்த கைம்மேல் இட்டு நின்றாடும் அரவம் பாடி" (பொற்.19) என்பதாலுமறிக. நாகம்பாடி என்பதற்கு நாகம் பெற்ற பேற்றினைப் பாடி எனினுமாம். இதன்கண், "என்னாகம் உள்புகுந்தாண்டு கொண்டான்" என்பத னால் மாயாவிசயநீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 292 சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆராத வாசையதா படியே னகமகிழத் தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 17 ப-ரை. தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் - தேர்கள் நிறைந்த வீதிகளையுடைய திருப்பெருந்துறையையுடையவன், சீர் ஆர்
திருவாசக ஆராய்ச்சியுரை திருமால் முதலியோர் இறைவனது பொன்போலும் திருவடி களைத்தாமாக அறியும் ஆற்றலுடையரல்லர் . அவ்வாறாக நாம் அத்திருவடியை அறிந்து வணங்குவதற்கு முடியுமா ? முடியாதே.என் ஆகம் உள்புகுந்து ஆண்டருளினன் . அவன் அருள் திறம் இருந்தவா றென்னே ! அவன் அணிகலமாகிய பாம்பினைப் பாடிக்கொண்டு நாம் அல்லிமலர்களைக் கொய்வோமாக என்பதாம் . 778 திருமாலும் பிரமனும் தேவர்களிற் சிறந்தோரா தலின் முன்னாய மாலயனும் என்றார் . தானவர் - அசுரர் . தானவர் தயித்தியர் கண்ட கர் ... அசுரர் எனப் பிங்கலந்தையில் ( 109 ) வருதல் காண்க . பொன்னார் திருவடி- பொன்போன்ற அரிய திருவடி . பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் ' ' ( தே . நாவு . 109-1 ) என வரு தல் காண்க . திருவடியைத் தாமறியாமைக்குத் தற்போதம் ஏதுவா கும் . போற்றுவதே என்பதில் ஏகாரம் வினாவும் எதிர்மறையும் . ஆகம் - மார்பு : ஈண்டு உள்ளத்தினை உணர்த்தியது : புகுந்து ஆண்டுகொண்டான் - தானே வந்து புகுந்து ஆண்டுகொண்டான் . பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே ' ( கோயின் . மூத் . 8 ) பொருளா வெனைப் புகுந்தாண்டு ( திருக்கோவை 13 ) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . இலங்கு அணியாம் பல்நாகம் - விளங்குகின்ற அணிகலங்களாகிய பல நாகம் . பருமணிமா நாகம் பூண்டான் கண்டாய் ' ' பொறி யிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட புண்ணியனை ( தே நாவு . 286-1 ; 304-9 ) கறைக்கொள் மணிகண்டமுந் திண்டோள்களுங் கரங்கள் சிரந்தன்னிலுங் கச்சுமாகப் பொறி கொளரவம் புனைந்தீர் பலவும் ' ' ( சுந்.9-8 ) என வருவன காண்க . நாகம் -தாருகா வனத்து இருடி . களால் இறைவனை அழிக்குமாறு ஏவிவிடப்பட்ட பாம்பு . நாகத் தினைப் பாடுதல் ' ' கவித்த கைம்மேல் இட்டு நின்றாடும் அரவம் பாடி ( பொற் .19 ) என்பதாலுமறிக . நாகம்பாடி என்பதற்கு நாகம் பெற்ற பேற்றினைப் பாடி எனினுமாம் . இதன்கண் என்னாகம் உள்புகுந்தாண்டு கொண்டான் என்பத னால் மாயாவிசயநீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 292 சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆராத வாசையதா படியே னகமகிழத் தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ . 17 - ரை . தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் - தேர்கள் நிறைந்த வீதிகளையுடைய திருப்பெருந்துறையையுடையவன் சீர் ஆர்