திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பூவல்லி * மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 781 ப- ரை. மா ஆர ஏறி - குதிரைமேல் பொருந்த ஏறி, மதுரை நகர் புகுந்தருளி - மதுரைமா நகரினுள்ளே வந்தருளி, தே ஆர்ந்த கோலம் திகழ தெய்வத்தன்மை பொருந்திய திருவடிவம் விளங்க, கோ ஆகி வந்து - தலைவனாக வந்து, எம்மை குற்று ஏவல் கொண்டரு ளும் பெருந்துறையான் - எம்மைச் சிறிய தொண்டனாகக் கொண்டரு ளிய திருப்பெருந்துறையையுடைய இறைவனது, பூ ஆர் கழல்பரவி . தாமரை மலர்போன்ற திருவடிகளைப் பாடிக்கொண்டு, பூ கொய்யாமோ - அல்லிமலர்களைப் பறிப்போமாக. அல்லி குதிரைமேல் ஏறி மதுரைமாநகரத்தினுள்ளே புகுந்தருளி, தெய் வத் தன்மை பொருந்திய திருவடிவம் விளங்கத் தலைவனாக வந்து எம்மைக் குற்றேவல் கொண்டருளும் திருப்பெருந்துறையையுடைய இறைவனது தாமரை மலர்போன்ற திருவடிகளைப் பாடிக்கொண்டு அல்லிமலர்களைக் கொய்வோமாக என்பதாம் TNGES மாவார ஏறி என்றது தாம் மதுரைக்குக் கொணர்ந்த குதிரைக் கூட்டத்தின் மத்தியில் மிகச்சிறப்புடைய குதிரையில் அழகுபொருந்த ஏறி என்றவாறு. மதுரை நகர் புகுந்தருளி என்றது தரம் அடிகளுக்கு அருளியவாறு அக்குதிரைக் கூட்டத்தினெடும் அம் மதுரைமா நகரி னுள்ளே தாமே வலிய வந்தருளி என்றவாறு. குதிரை விற்பவர்போல வந்தவிடத்தும் தமது தெய்வீகத் திருக்கோலம் குறிப்பிற் புலப்படு மாறு பெருந்துறையான் வந்தமையின் "தேவார்ந்த கோலம் திகழ" என்றார். இப்படியிலிப்படிவம் யாவருள ரென்ன" எனத் திருவாத வூரடிகள் புராணத்தும் (குதிரையிட்ட. 16)வருதல் காண்க."கோவாகி வந்து" என்றார், தம்முடன் குதிரை கொணர்ந்த கூட்டத்தாருக்குத் தாம் தலைவனாக வந்தமையின் இங்ஙனம் இறைவன் குதிரைகொண்டு மதுரைமாநகரிற் புகுந்தது அடிகள் பொருட்டாதலின் "எம்மைக் குற்றேவல் கொண்டருளும்" என்றார். என்னைக் குற்றேவல் கொண்டருளும் எனக் கூறினும் சிறு மையையுடையேனைத் தொண்டனாகக் கொண்டருளும் கழல் என்றது கொண்டருளிய அவ்விறைவனது கழல் என்றவாறு. ஏறி புகுந்தருளி திகழ வந்து ஏவல் கொண்டருளும் பெருந்துறை யான் கழல் பரவிப் பூவல்லி கொய்யாமோ என முடிக்க. இதன் கண், "எம்மைக் குற்றேவல் கொண்டருளும்"என்பதனால் மாயாவிய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 20 * இப்பாடல் சில பிரதிகளில் மட்டும் காணப்படினும், திருவாச கத் திருப்பதிகத்தொகை குறிக்கும் செய்யுள் பூவல்லிப் பாடல் இருப தென்றே குறிப்பதால் இங்குத் தரப்பட்டுள்ளது.
திருப்பூவல்லி * மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ . 781 ப- ரை . மா ஆர ஏறி - குதிரைமேல் பொருந்த ஏறி மதுரை நகர் புகுந்தருளி - மதுரைமா நகரினுள்ளே வந்தருளி தே ஆர்ந்த கோலம் திகழ தெய்வத்தன்மை பொருந்திய திருவடிவம் விளங்க கோ ஆகி வந்து - தலைவனாக வந்து எம்மை குற்று ஏவல் கொண்டரு ளும் பெருந்துறையான் - எம்மைச் சிறிய தொண்டனாகக் கொண்டரு ளிய திருப்பெருந்துறையையுடைய இறைவனது பூ ஆர் கழல்பரவி . தாமரை மலர்போன்ற திருவடிகளைப் பாடிக்கொண்டு பூ கொய்யாமோ - அல்லிமலர்களைப் பறிப்போமாக . அல்லி குதிரைமேல் ஏறி மதுரைமாநகரத்தினுள்ளே புகுந்தருளி தெய் வத் தன்மை பொருந்திய திருவடிவம் விளங்கத் தலைவனாக வந்து எம்மைக் குற்றேவல் கொண்டருளும் திருப்பெருந்துறையையுடைய இறைவனது தாமரை மலர்போன்ற திருவடிகளைப் பாடிக்கொண்டு அல்லிமலர்களைக் கொய்வோமாக என்பதாம் TNGES மாவார ஏறி என்றது தாம் மதுரைக்குக் கொணர்ந்த குதிரைக் கூட்டத்தின் மத்தியில் மிகச்சிறப்புடைய குதிரையில் அழகுபொருந்த ஏறி என்றவாறு . மதுரை நகர் புகுந்தருளி என்றது தரம் அடிகளுக்கு அருளியவாறு அக்குதிரைக் கூட்டத்தினெடும் அம் மதுரைமா நகரி னுள்ளே தாமே வலிய வந்தருளி என்றவாறு . குதிரை விற்பவர்போல வந்தவிடத்தும் தமது தெய்வீகத் திருக்கோலம் குறிப்பிற் புலப்படு மாறு பெருந்துறையான் வந்தமையின் தேவார்ந்த கோலம் திகழ என்றார் . இப்படியிலிப்படிவம் யாவருள ரென்ன எனத் திருவாத வூரடிகள் புராணத்தும் ( குதிரையிட்ட . 16 ) வருதல் காண்க . கோவாகி வந்து என்றார் தம்முடன் குதிரை கொணர்ந்த கூட்டத்தாருக்குத் தாம் தலைவனாக வந்தமையின் இங்ஙனம் இறைவன் குதிரைகொண்டு மதுரைமாநகரிற் புகுந்தது அடிகள் பொருட்டாதலின் எம்மைக் குற்றேவல் கொண்டருளும் என்றார் . என்னைக் குற்றேவல் கொண்டருளும் எனக் கூறினும் சிறு மையையுடையேனைத் தொண்டனாகக் கொண்டருளும் கழல் என்றது கொண்டருளிய அவ்விறைவனது கழல் என்றவாறு . ஏறி புகுந்தருளி திகழ வந்து ஏவல் கொண்டருளும் பெருந்துறை யான் கழல் பரவிப் பூவல்லி கொய்யாமோ என முடிக்க . இதன் கண் எம்மைக் குற்றேவல் கொண்டருளும் என்பதனால் மாயாவிய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 20 * இப்பாடல் சில பிரதிகளில் மட்டும் காணப்படினும் திருவாச கத் திருப்பதிகத்தொகை குறிக்கும் செய்யுள் பூவல்லிப் பாடல் இருப தென்றே குறிப்பதால் இங்குத் தரப்பட்டுள்ளது .