திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
14. திருவுந்தியார்
ஞானவெற்றி
திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது
திருவுந்தியென்பது மகளிர் விளையாட்டிலொன்று. அது நால்வர்
அல்லது ஐவர் சிறுமகளிர் நான்கு அல்லது ஐந்து சக்கரங்களை வட்ட
வடிவமாகநடுவே நின்று சுற்றுதற்கேற்ற இடைவெளியுடையனவாய்க்
காலால் அமைத்துக்கொண்டு அச் சக்கரங்களில் ஒவ்வொருவர் நின்று
தங்களுள் செய்யப்படும் சங்கேத முறைப்படி ஒருவர் சக்கரத்தை
விட்டு இறங்கி உள்ளே சுற்றி வந்து கொண்டிருப்ப மற்றையோர்
அவர் கைக்கெட்டாதவாறு வெளியாயிருக்கும் சக்கரங்களை நோக்கி
உந்திப் பாய்ந்து செல்வர். அங்ஙனம் பாயும்போது நடுவே சுற்றுபவ
ரால் தொடுபட்டவர் உள்ளே வந்து சுற்றவேண்டியவராவர். இது
அவ்விளையாட்டின் முறைமையாகும். அடிகள் தில்லையில் எழுந்தருளி
யிருக்கும்போது ஒரு பொழிலகத்துப்பொய்கை விளையாடும் மகளிரிற்
சிலர் இவ்வுந்தி என்னும் விளையாடலைப் பாடிக்கொண்டு ஆடுதலைக்
கண்ட அடிகள் இறைவனைப் பாடிக்கொண்டு ஆடுவீர்களாக என்று
இத் திருவுந்தியார் என்னும் பகுதியை அவர் கூற்றாக அருளிச் செய்
தனர். இது ஞான வெற்றி என்னும் உட்பொருளையுடையது. அஃதா
வது திருவருட்சத்தியின் சாமர்த்தியத்தாலுளதாகும் வெற்றி. இது
கலித்தாழிசை என்னும் பாவகையால் ஆக்கப்பட்டது.
கலித்தாழிசை
திருச்சிற்றம்பலம்
294 வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புர முந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.
ப-ரை. வில்லு வளைந்தது - மேருவாகிய வில்லு வளைந்தது.
பூசல் விளைந்தது - போர் உண்டாயது; முப்புரம் உளைந்தன -மூன்று
புரங்களும் வருந்தின என்று, உந்தீபற - உந்திப் பறப்போம்; உடன்
ஒருங்கு வெந்த ஆறு உந்தீபற - உடனே முப்புரங்களும் ஒருசேர
வெந்து நீறான விதத்தைக் கூறிக்கொண்டு உந்திப் பறப்போம்.
இறைவனது வில் வளைந்தது; போர் விளைந்தது; முப்புரங்களும்
வருந்தின என்று உந்திப் பறப்போம்; உடனே முப்புரங்களும் சேர
வெந்து நீறான விதத்தைக் கூறிக்கொண்டு உந்திப் பறப்போம் என்பு
தாம்.
14.
திருவுந்தியார்
ஞானவெற்றி
திருத்தில்லையில்
அருளிச்செய்யப்பட்டது
திருவுந்தியென்பது
மகளிர்
விளையாட்டிலொன்று
.
அது
நால்வர்
அல்லது
ஐவர்
சிறுமகளிர்
நான்கு
அல்லது
ஐந்து
சக்கரங்களை
வட்ட
வடிவமாகநடுவே
நின்று
சுற்றுதற்கேற்ற
இடைவெளியுடையனவாய்க்
காலால்
அமைத்துக்கொண்டு
அச்
சக்கரங்களில்
ஒவ்வொருவர்
நின்று
தங்களுள்
செய்யப்படும்
சங்கேத
முறைப்படி
ஒருவர்
சக்கரத்தை
விட்டு
இறங்கி
உள்ளே
சுற்றி
வந்து
கொண்டிருப்ப
மற்றையோர்
அவர்
கைக்கெட்டாதவாறு
வெளியாயிருக்கும்
சக்கரங்களை
நோக்கி
உந்திப்
பாய்ந்து
செல்வர்
.
அங்ஙனம்
பாயும்போது
நடுவே
சுற்றுபவ
ரால்
தொடுபட்டவர்
உள்ளே
வந்து
சுற்றவேண்டியவராவர்
.
இது
அவ்விளையாட்டின்
முறைமையாகும்
.
அடிகள்
தில்லையில்
எழுந்தருளி
யிருக்கும்போது
ஒரு
பொழிலகத்துப்பொய்கை
விளையாடும்
மகளிரிற்
சிலர்
இவ்வுந்தி
என்னும்
விளையாடலைப்
பாடிக்கொண்டு
ஆடுதலைக்
கண்ட
அடிகள்
இறைவனைப்
பாடிக்கொண்டு
ஆடுவீர்களாக
என்று
இத்
திருவுந்தியார்
என்னும்
பகுதியை
அவர்
கூற்றாக
அருளிச்
செய்
தனர்
.
இது
ஞான
வெற்றி
என்னும்
உட்பொருளையுடையது
.
அஃதா
வது
திருவருட்சத்தியின்
சாமர்த்தியத்தாலுளதாகும்
வெற்றி
.
இது
கலித்தாழிசை
என்னும்
பாவகையால்
ஆக்கப்பட்டது
.
கலித்தாழிசை
திருச்சிற்றம்பலம்
294
வளைந்தது
வில்லு
விளைந்தது
பூசல்
உளைந்தன
முப்புர
முந்தீபற
ஒருங்குடன்
வெந்தவா
றுந்தீபற
.
ப
-
ரை
.
வில்லு
வளைந்தது
-
மேருவாகிய
வில்லு
வளைந்தது
.
பூசல்
விளைந்தது
-
போர்
உண்டாயது
;
முப்புரம்
உளைந்தன
-மூன்று
புரங்களும்
வருந்தின
என்று
உந்தீபற
-
உந்திப்
பறப்போம்
;
உடன்
ஒருங்கு
வெந்த
ஆறு
உந்தீபற
-
உடனே
முப்புரங்களும்
ஒருசேர
வெந்து
நீறான
விதத்தைக்
கூறிக்கொண்டு
உந்திப்
பறப்போம்
.
இறைவனது
வில்
வளைந்தது
;
போர்
விளைந்தது
;
முப்புரங்களும்
வருந்தின
என்று
உந்திப்
பறப்போம்
;
உடனே
முப்புரங்களும்
சேர
வெந்து
நீறான
விதத்தைக்
கூறிக்கொண்டு
உந்திப்
பறப்போம்
என்பு
தாம்
.