திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவுந்தியார் 783 வில்லு என்பதில் உகரம் சாரியை. இறைவன் வில்லாகக் கொண் டது மேருமலையை என்க. ''கல்லா னிழன்மலை, வில்லா ரருளிய, பொல்லாரிணைமலர், நல்லார் புனைவரே.'' என்னும் சிவஞான போத மங்கல வாழ்த்து உரையுள் மலை வில்லா ரென்பது மேருவை வில்லாக உடையர் எனக்கொண்டு, கல்லானிழலி லெழுந்தருளி யிருந்து வீடுபேறும், மலையை வில்லாகவளைத்துப் பகைவரை வென்று போகமும் அளித்தருளியோரெனினுமமையும் எனச் சிவஞானயோகி கள் உரைத்ததுங் காண்க. இறைவன் முப்புரங்களை அழித்தகாலத்து மேருவையே வில்லாக வளைத்தனர் என்பது, மேருவே வில்லா மேவலர் புரங்கண் மூன் றெரித்த கையனே" (அருட் 7) என்பதனால் அறியப்படும். வில்லு வளைந்தது மாத்திரமன்றி அதனின்றும் அம்பு ஒன்றும் எய்யப்பெறாமலே புரம் வெந்தது என்பார், "ஒருங்குடன் வெந்தவாறு" என்றார். உந்திப் பறத்தல் - துள்ளிப்பறத்தல், பற என இருத்தலினாலே பறப்போமாக என உரைக்கப்பட்டது. உடன் என்றது வில்லு வளைந்தவுடன் என்றவாறு. ஒருங்குவேதல் - முப்புரங் களும் முற்றும் நீறாதல். வெந்த என்ற வினையினால் முப்புரங்களைத் தீயினால் அழித்தமை பெறப்படும். சிவபெருமான் தேவர் வேண்டத் திரிபுரம் எரித்தமையை, "கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூனெயிலு முடன் றக்கான் முகம் போல வொண்கதிர் தெறுதலின், (கலி.2-4-5) ‘ஓங்குமலைப் பெருவிற் பாம்பு ஞாண் கொளீஇ யொருகணை கொண்டு மூவெயி லுடற்றிப் பெரு விற லமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல்" (புற.55-1-4) திரிபுர மெரியத் தேவர் வேண்ட வெரிமுகப் பேரம் பேவல் கேட்ப வுமையவ ளொருதிற னாக வோங்கிய விமையவ னாடிய கொடு பொட்டி யாடலும்" 'விண்வாய்ச் செயிரொன்று முப்புரஞ் செற்றவன்" (திருக்கோவை 18) " எயிற் குல மூன்றிருந்த யெய்த வெய்தவன்" (36) "திரிபுரங்கள் தீயெழத் திண்சிலை கைக்கொண்ட போரானை'' என வருவனவற்றாலுமறிக. (சில.6-40-3) (தே.நாவு.267-8) இதன்கண், ''உளைந்தன முப்புரம் ஒருங்குடன் வெந்தவா" என்பத னால் ஞானவெற்றியாமாறு காண்க. 1
திருவுந்தியார் 783 வில்லு என்பதில் உகரம் சாரியை . இறைவன் வில்லாகக் கொண் டது மேருமலையை என்க . ' ' கல்லா னிழன்மலை வில்லா ரருளிய பொல்லாரிணைமலர் நல்லார் புனைவரே . ' ' என்னும் சிவஞான போத மங்கல வாழ்த்து உரையுள் மலை வில்லா ரென்பது மேருவை வில்லாக உடையர் எனக்கொண்டு கல்லானிழலி லெழுந்தருளி யிருந்து வீடுபேறும் மலையை வில்லாகவளைத்துப் பகைவரை வென்று போகமும் அளித்தருளியோரெனினுமமையும் எனச் சிவஞானயோகி கள் உரைத்ததுங் காண்க . இறைவன் முப்புரங்களை அழித்தகாலத்து மேருவையே வில்லாக வளைத்தனர் என்பது மேருவே வில்லா மேவலர் புரங்கண் மூன் றெரித்த கையனே ( அருட் 7 ) என்பதனால் அறியப்படும் . வில்லு வளைந்தது மாத்திரமன்றி அதனின்றும் அம்பு ஒன்றும் எய்யப்பெறாமலே புரம் வெந்தது என்பார் ஒருங்குடன் வெந்தவாறு என்றார் . உந்திப் பறத்தல் - துள்ளிப்பறத்தல் பற என இருத்தலினாலே பறப்போமாக என உரைக்கப்பட்டது . உடன் என்றது வில்லு வளைந்தவுடன் என்றவாறு . ஒருங்குவேதல் - முப்புரங் களும் முற்றும் நீறாதல் . வெந்த என்ற வினையினால் முப்புரங்களைத் தீயினால் அழித்தமை பெறப்படும் . சிவபெருமான் தேவர் வேண்டத் திரிபுரம் எரித்தமையை கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூனெயிலு முடன் றக்கான் முகம் போல வொண்கதிர் தெறுதலின் ( கலி.2-4-5 ) ஓங்குமலைப் பெருவிற் பாம்பு ஞாண் கொளீஇ யொருகணை கொண்டு மூவெயி லுடற்றிப் பெரு விற லமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல் ( புற.55-1-4 ) திரிபுர மெரியத் தேவர் வேண்ட வெரிமுகப் பேரம் பேவல் கேட்ப வுமையவ ளொருதிற னாக வோங்கிய விமையவ னாடிய கொடு பொட்டி யாடலும் ' விண்வாய்ச் செயிரொன்று முப்புரஞ் செற்றவன் ( திருக்கோவை 18 ) எயிற் குல மூன்றிருந்த யெய்த வெய்தவன் ( 36 ) திரிபுரங்கள் தீயெழத் திண்சிலை கைக்கொண்ட போரானை ' ' என வருவனவற்றாலுமறிக . ( சில.6-40-3 ) ( தே.நாவு.267-8 ) இதன்கண் ' ' உளைந்தன முப்புரம் ஒருங்குடன் வெந்தவா என்பத னால் ஞானவெற்றியாமாறு காண்க . 1