திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை செய்தல் எனினுமாம். "கூருகிர் சாடிய மார்பும்” என்புழி சாடிய என்பதற்கு விரும்பியாங்கு வடுச்செய்த (கலி. 91-11 நச். உரை) என உரைத்தமையுங் காண்க. வேள்விகட்கெல்லாம் முதல்வனாகிய சிவனையின்றித் தக்கன் வேள்விசெய்தமையால் அது முற்றுப்பெறாது சிதைவுபட்டொழிந்தமையின் "சாடிய வேள்வி சரிந்திட" என்றார். (பெ.பு.பக்கம் 1550). 788 "தக்கன் வேள்வி மிக்க வெரியா ரெழிலழிக்கும் மெழிலம்பலத்தோன்" (கோவை.340) 'தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்ளியை வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறை கெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே” (திருமந். 353) என வருவனவற்றாலுமறிக. வீரபத்திரர் இறைவன் ஆணைப்படி தக்க யாகத்தைத் தாக்கி நிலை குலைத்தனர் என்பது வரலாறு. இதனை, "எண்பட்ட தக்கன் அருக்கனெச்சன் இந்து அனல் விண்பட்ட பூதப்படை வீரபத்திரரால் புண்பட்ட வா பாடி" என அடிகள் அருளியவாறுங் காண்க. வீரபத்திரர் சாடத் தேவர்கள் ஓடியமை, "ஏடுலாந் தொடையல் வீரன் இத்திற: இவரை முன்னஞ் சாடினான் அது கண் டங்கட் சார்தரும் இமையொர் பாரும் ஓடினார்? விடுத்தனன் கதிரவன் வெருவி ஓடலும் "அட்டிடு கூற்றுவன் அலமந்தோடலும்" அலமந் தோடிய திண்டிறல் அங்கியை" (பூவல்லி.4) (கந்த. யாக.சங்.23) (யாக.சங்.25) (யாக.சங்.27) (யாக.சங்.29) டீ எனக் கந்தபுராணத்தும் வருவன காண்க. ஓடியவாறு பாடி என்பது ஓடியவா பாடி என ஈறுகெட்டது. பிழைக்குமாறு தேவர்கள் ஓடின ராயினும் பிழைத்திலர். உருத்திரர் சர்வசங்கார காரராகிய இறைவரது சாரூபத்தை யோகத்தாற் பெற்றவர். அவர் பதினொரு கோடியினர். அப் பதி னொரு கோடியினர்க்கும் தலைவர்களாகப் பதினொருவர் உளர். அவர்; மகாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசா னன், விசயன், வீமதேவன், பவோற்பவன், காபாலி, செளமியன், என்பவர். இவர்களுக்குத் தலைவர் ஸ்ரீகண்ட உருத்திரர். இவர்கள் யாவர்க்கும் தலைவன் சிவபெருமான். இதுபற்றியே இறைவனை 'உருத்திரநாதன்' என்றார். உருத்திரம்- மிக்கவெகுளி; சர்வசங்காரம்
திருவாசக ஆராய்ச்சியுரை செய்தல் எனினுமாம் . கூருகிர் சாடிய மார்பும் என்புழி சாடிய என்பதற்கு விரும்பியாங்கு வடுச்செய்த ( கலி . 91-11 நச் . உரை ) என உரைத்தமையுங் காண்க . வேள்விகட்கெல்லாம் முதல்வனாகிய சிவனையின்றித் தக்கன் வேள்விசெய்தமையால் அது முற்றுப்பெறாது சிதைவுபட்டொழிந்தமையின் சாடிய வேள்வி சரிந்திட என்றார் . ( பெ.பு.பக்கம் 1550 ) . 788 தக்கன் வேள்வி மிக்க வெரியா ரெழிலழிக்கும் மெழிலம்பலத்தோன் ( கோவை .340 ) ' தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்ளியை வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறை கெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே ( திருமந் . 353 ) என வருவனவற்றாலுமறிக . வீரபத்திரர் இறைவன் ஆணைப்படி தக்க யாகத்தைத் தாக்கி நிலை குலைத்தனர் என்பது வரலாறு . இதனை எண்பட்ட தக்கன் அருக்கனெச்சன் இந்து அனல் விண்பட்ட பூதப்படை வீரபத்திரரால் புண்பட்ட வா பாடி என அடிகள் அருளியவாறுங் காண்க . வீரபத்திரர் சாடத் தேவர்கள் ஓடியமை ஏடுலாந் தொடையல் வீரன் இத்திற : இவரை முன்னஞ் சாடினான் அது கண் டங்கட் சார்தரும் இமையொர் பாரும் ஓடினார் ? விடுத்தனன் கதிரவன் வெருவி ஓடலும் அட்டிடு கூற்றுவன் அலமந்தோடலும் அலமந் தோடிய திண்டிறல் அங்கியை ( பூவல்லி .4 ) ( கந்த . யாக.சங் .23 ) ( யாக.சங் .25 ) ( யாக.சங் .27 ) ( யாக.சங் .29 ) டீ எனக் கந்தபுராணத்தும் வருவன காண்க . ஓடியவாறு பாடி என்பது ஓடியவா பாடி என ஈறுகெட்டது . பிழைக்குமாறு தேவர்கள் ஓடின ராயினும் பிழைத்திலர் . உருத்திரர் சர்வசங்கார காரராகிய இறைவரது சாரூபத்தை யோகத்தாற் பெற்றவர் . அவர் பதினொரு கோடியினர் . அப் பதி னொரு கோடியினர்க்கும் தலைவர்களாகப் பதினொருவர் உளர் . அவர் ; மகாதேவன் அரன் உருத்திரன் சங்கரன் நீலலோகிதன் ஈசா னன் விசயன் வீமதேவன் பவோற்பவன் காபாலி செளமியன் என்பவர் . இவர்களுக்குத் தலைவர் ஸ்ரீகண்ட உருத்திரர் . இவர்கள் யாவர்க்கும் தலைவன் சிவபெருமான் . இதுபற்றியே இறைவனை ' உருத்திரநாதன் ' என்றார் . உருத்திரம்- மிக்கவெகுளி ; சர்வசங்காரம்