திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவுந்தியார் செய்யும் இறைவனுக்கு மிக்க வெகுளியுடைமை பற்றி உருத்திரன் என்னும் பெயர் உண்டாயிற்று. நாதனுக்கு வெற்றி என ஒருசொல் வருவித்து முடிக்க. இதன்கண், "சாடியவேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடியவாபாடி' என்பதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. 299 ஆவா திருமா லவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென் றுந்தீபற சதுர் முகன் தாதையென் றுந்தீபற 789 9. 5 ப- ரை. அன்று திருமால் அவிப்பாகம் கொண்டு - அக்காலத்தில் தக்கன் வேள்வியில் திருமால் தனக்குரிய அவிப்பாகத்தைப் பெற்று உண்டும், சாவாது இருந்தான் என்று உந்தீபற -வீரபத்திரரால் அழிந் தொழியாமல் இறைவன் அருளால் காக்கப்பட்டான் என்று பாடிக் கொண்டு உந்திப்பறப்போமாக; ஆ ஆ - இறைவன் திருவருள் இருந்த வாறென்னே; சதுர்முகன் தாதை என்று உந்தீ பற - நான்முகப் பிர மனது தாதையாகிய திருமால் சாவாதிருந்தான் என்று பாடிக் கொண்டு உந்திப் பறப்போமாக. "ஒய்யென் றையன் சீற்றமொ டங்கண் உங்காரஞ் செய்யுங் காலத் தோவியம் என்னச் செயநீங்கிக் அக்காலத்தில் தக்கன் வேள்வியில் திருமால் தனக்குரிய அவிப் பாகத்தை உண்டும் வீரபத்திரரால் அழிந்தொழியாமல் இறைவன் திருவருளால் காக்கப்பட்டான் என்று பாடிக்கொண்டு உத்திப்பறப் போமாக; பிரமன் தாதையாகிய திருமால் சாவாதிருந்தான் என்று பாடிக் கொண்டு உந்திப் பறப்போமாக என்பதாம். ஆவா என்பது அவிப்பாகத்தை உண்டு வீரபத்திரரால் அழிவெய் தும் நிலைமையடைந்த திருமால் இறைவனது அசரீரிவாக்கால் அந் நிலைமையினின்றும் தப்பியமையைக்குறிப்பதால், ஆவாவென்பதுவியப் பின்கட்குறிப்பு. தக்கன்வேள்வியில் அவியுண்டமை சாதற்கேதுவாகும். அதனை 'சாவ முன்னாள் தக்கன் வேள்வித்தகர்தின்று" என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாற்றான் அறிக.கொண்டும் என்னும் உப் மை தொக்கது. சதுர்முகத் தாதையாகிய திருமால் அவிப்பாகம் கொண் டும் அன்று சாவாதிருந்தான் எனக் கூறப்படினும் அத்திருமால் வீர பத்திரரால் தண்டிக்கப்பட்டும் "உங்காரம் செய்து உறுக்கப்பட்டும்" செயலற்று நின்ற காலை, வீரபத்திரர் அவ்வளவில் அமையாது சுடுஞ் சினங் கொள்ளுதலும், இறைவனது அசரீரிவாக்கு வீரபத்திரரைத் தடுத்தமையால் சாவாதருளினான் என்பது கருத்தாகக் கொள்க.
திருவுந்தியார் செய்யும் இறைவனுக்கு மிக்க வெகுளியுடைமை பற்றி உருத்திரன் என்னும் பெயர் உண்டாயிற்று . நாதனுக்கு வெற்றி என ஒருசொல் வருவித்து முடிக்க . இதன்கண் சாடியவேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடியவாபாடி ' என்பதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . 299 ஆவா திருமா லவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென் றுந்தீபற சதுர் முகன் தாதையென் றுந்தீபற 789 9 . 5 ப- ரை . அன்று திருமால் அவிப்பாகம் கொண்டு - அக்காலத்தில் தக்கன் வேள்வியில் திருமால் தனக்குரிய அவிப்பாகத்தைப் பெற்று உண்டும் சாவாது இருந்தான் என்று உந்தீபற -வீரபத்திரரால் அழிந் தொழியாமல் இறைவன் அருளால் காக்கப்பட்டான் என்று பாடிக் கொண்டு உந்திப்பறப்போமாக ; - இறைவன் திருவருள் இருந்த வாறென்னே ; சதுர்முகன் தாதை என்று உந்தீ பற - நான்முகப் பிர மனது தாதையாகிய திருமால் சாவாதிருந்தான் என்று பாடிக் கொண்டு உந்திப் பறப்போமாக . ஒய்யென் றையன் சீற்றமொ டங்கண் உங்காரஞ் செய்யுங் காலத் தோவியம் என்னச் செயநீங்கிக் அக்காலத்தில் தக்கன் வேள்வியில் திருமால் தனக்குரிய அவிப் பாகத்தை உண்டும் வீரபத்திரரால் அழிந்தொழியாமல் இறைவன் திருவருளால் காக்கப்பட்டான் என்று பாடிக்கொண்டு உத்திப்பறப் போமாக ; பிரமன் தாதையாகிய திருமால் சாவாதிருந்தான் என்று பாடிக் கொண்டு உந்திப் பறப்போமாக என்பதாம் . ஆவா என்பது அவிப்பாகத்தை உண்டு வீரபத்திரரால் அழிவெய் தும் நிலைமையடைந்த திருமால் இறைவனது அசரீரிவாக்கால் அந் நிலைமையினின்றும் தப்பியமையைக்குறிப்பதால் ஆவாவென்பதுவியப் பின்கட்குறிப்பு . தக்கன்வேள்வியில் அவியுண்டமை சாதற்கேதுவாகும் . அதனை ' சாவ முன்னாள் தக்கன் வேள்வித்தகர்தின்று என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாற்றான் அறிக.கொண்டும் என்னும் உப் மை தொக்கது . சதுர்முகத் தாதையாகிய திருமால் அவிப்பாகம் கொண் டும் அன்று சாவாதிருந்தான் எனக் கூறப்படினும் அத்திருமால் வீர பத்திரரால் தண்டிக்கப்பட்டும் உங்காரம் செய்து உறுக்கப்பட்டும் செயலற்று நின்ற காலை வீரபத்திரர் அவ்வளவில் அமையாது சுடுஞ் சினங் கொள்ளுதலும் இறைவனது அசரீரிவாக்கு வீரபத்திரரைத் தடுத்தமையால் சாவாதருளினான் என்பது கருத்தாகக் கொள்க .