திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பார்த்தல் - பார்க்கக் கருதுவது; பார்ப்பதென்னே என்பது பார்க்கக்கூடாது என்னும் பொருளில் வந்தது. 792 0-00t இதன் கண், 'பணைமுலை பாகனுக்கு" என்பதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. 302 புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினா ருந்தீபற வானவர் கோனென்றே யுந்தீபற 8 ப -ரை. புரந்தரனார் ஒரு பூ குயில் ஆகி - இந்திரன் தக்கன் வேள் வியில் தண்டனை பெறாது தப்பும் பொருட்டு ஓர் அழகிய குயில் வடிவங் கொண்டு, மரம் தனில் ஏறினார் உந்தீ பற - மரத்தின்மேல் ஏறிமறைந் திருந்தான் என்று கூறிக் கொண்டு உந்திப்பறப்போமாக. வானவர் கோன் என்று உந்தீபற - தேவர்களுக்கெல்லாம் அரசன் இவ்வாறு செய்தான் என்று கூறிக்கொண்டு உந்திப்பறப்போமாக. இந்திரன் தக்கனது வேள்வியில் தப்பியோடுதற்கு ஒரு குயில் வடி வங் கொண்டு ஒரு மரத்தில் ஏறி மறைந்திருந்தான் என்று கூறிக் கொண்டு உந்திப்பறப்போமாக. தேவர்களுக் கெல்லாம் அரசன் இவ் வாறு செய்தான் என்று கூறிக் கொண்டு உந்திப்பறப்போமாக என்பதாம். புரந்தரனார் ஏறினார் என்பனவற்றில் ஆர் இகழ்ச்சிக் குறிப்பு. இந் திரன் குயில் வடிவங்கொண்டு மரத்தில் ஏறி மறைந்தும் வீரபத்திரரின் வாட் படைக்கு இலக்காகி வெட்டுண்டான். இதனை, மடிந்தனன் கூற்றுவ னாக வாசவன் உடைந்தனன் குயிலென உருக்கொண் டும்பரில் அடைந்தனன் அதுபொழு தண்ணல் கண்ணுறி இத் தடிந்தனன் வீட்டினன் தடக்கை வாளினால்" (யாக சங்.28) என்று கந்தபுராணத்து வருதலானறிக. வானவர்கோன் இப்படிச் செய்த இழிவரலையுடையவன் தான் தேவர்களுக்கு அரசனாவான் என்று இழிவரலைச் சிறப்பித்தபடி. இதன்கண், 'புரந்தரனார் குயிலாகி மரந்தனில் ஏறினார்" என்றத னால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. 9
திருவாசக ஆராய்ச்சியுரை பார்த்தல் - பார்க்கக் கருதுவது ; பார்ப்பதென்னே என்பது பார்க்கக்கூடாது என்னும் பொருளில் வந்தது . 792 0-00t இதன் கண் ' பணைமுலை பாகனுக்கு என்பதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . 302 புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினா ருந்தீபற வானவர் கோனென்றே யுந்தீபற 8 -ரை . புரந்தரனார் ஒரு பூ குயில் ஆகி - இந்திரன் தக்கன் வேள் வியில் தண்டனை பெறாது தப்பும் பொருட்டு ஓர் அழகிய குயில் வடிவங் கொண்டு மரம் தனில் ஏறினார் உந்தீ பற - மரத்தின்மேல் ஏறிமறைந் திருந்தான் என்று கூறிக் கொண்டு உந்திப்பறப்போமாக . வானவர் கோன் என்று உந்தீபற - தேவர்களுக்கெல்லாம் அரசன் இவ்வாறு செய்தான் என்று கூறிக்கொண்டு உந்திப்பறப்போமாக . இந்திரன் தக்கனது வேள்வியில் தப்பியோடுதற்கு ஒரு குயில் வடி வங் கொண்டு ஒரு மரத்தில் ஏறி மறைந்திருந்தான் என்று கூறிக் கொண்டு உந்திப்பறப்போமாக . தேவர்களுக் கெல்லாம் அரசன் இவ் வாறு செய்தான் என்று கூறிக் கொண்டு உந்திப்பறப்போமாக என்பதாம் . புரந்தரனார் ஏறினார் என்பனவற்றில் ஆர் இகழ்ச்சிக் குறிப்பு . இந் திரன் குயில் வடிவங்கொண்டு மரத்தில் ஏறி மறைந்தும் வீரபத்திரரின் வாட் படைக்கு இலக்காகி வெட்டுண்டான் . இதனை மடிந்தனன் கூற்றுவ னாக வாசவன் உடைந்தனன் குயிலென உருக்கொண் டும்பரில் அடைந்தனன் அதுபொழு தண்ணல் கண்ணுறி இத் தடிந்தனன் வீட்டினன் தடக்கை வாளினால் ( யாக சங் .28 ) என்று கந்தபுராணத்து வருதலானறிக . வானவர்கோன் இப்படிச் செய்த இழிவரலையுடையவன் தான் தேவர்களுக்கு அரசனாவான் என்று இழிவரலைச் சிறப்பித்தபடி . இதன்கண் ' புரந்தரனார் குயிலாகி மரந்தனில் ஏறினார் என்றத னால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . 9