திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

307 திருவுந்தியார் நான்மறை யோனு மகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 797 ப -ரை: மகத்து இயமான்பட - யாகத்திலே தலைவனாகிய தக் கன் இறந்துபட, நான்மறையோனும் போம்வழி தேடுமாறு உந்தீபற அவன் பிதாவாகிய பிரமனும் தான் தப்பிப் போகும் வழியைத் தேடுமாற்றைக் கூறிக்கொண்டு உந்திப் பறப்போம். வேள்வியில் புரந் தரன் போம்வழி தேடுமாறு உந்தீபற அவ்யாகத்தில் இந்திரன் தான் தப்பிப்போகும் வழியைத் தேடுமாற்றைக் கூறிக்கொண்டு உந்திப் பறப்போம். யாகத்திலே தலைவனாகிய தக்கன் இறந்துபட, அவன் பிதாவாகிய பிரமனும் தான் தப்பியோடும் வழியைத் தேடுமாற்றைக் கூறிக் கொண்டு உந்திப் பறப்போம். அவ்யாகத்தில் இந்திரன் தான் தப்பிப் போகும் வழியைத் தேடுமாற்றைக் கூறிக்கொண்டு உந்திப் பறப் போமாக என்பதாம். மகம் - வேள்வி. இயமான் வடமொழித்திரிபு; யாகத்தைச் செய் பவன் என்றவாறு. நான்மறையோனும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பும்,மகத்து இயமானன்பட்டமையைத் தழுவிநிற்றலின் இறந்தது தழீஇய எச்சவும்மையுமாம். நான்மறையோனும் போகும்வழி தேடு மாறு எனக் கூட்டுக. போம் வழி தேடுமாறு என்பதனை புரந்தரன் என்பதனோடும் சேர்த்து, வேள்வியில் புரந்தரன் போம்வழி தேடு மாறுந்தீபற என இயைத்துப் பொருள் கொள்க. பிரமனும் தான் தப்பிப் போகும் வழி தேடிய பொழுது வீரபத்திரரால் குட்டப்பட் டான். ''நாமகள் நாசி சிரம் பிரமன்" (தோணோ. 11) என வருதலுங் காண்க. இந்திரன் போம் வழிதேடிக் குயிலுருக் கொண்டு ஓட வீரபத் திரரின் வாட்படையால் வெட்டப்பட்டான். இதன்கண்,"போம்வழி தேடுமாறு" என்பதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. 308 சூரிய னார்தொண்டை வாயினிற் பற்ளை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 14 ப-ரை. சூரியனார் தொண்டை வாயினில் பற்களை சூரிய னுாடைய கொல்வைக் கனிபோன்ற சிவந்த வாயிலுள்ள பற்களை நெரித்து வாரிய ஆறு உந்தீபற -நெரித்து உதிரச்செய்த விதத்தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக; வேள்வி மயங்கிற்று என்று
307 திருவுந்தியார் நான்மறை யோனு மகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியி லுந்தீபற . 797 -ரை : மகத்து இயமான்பட - யாகத்திலே தலைவனாகிய தக் கன் இறந்துபட நான்மறையோனும் போம்வழி தேடுமாறு உந்தீபற அவன் பிதாவாகிய பிரமனும் தான் தப்பிப் போகும் வழியைத் தேடுமாற்றைக் கூறிக்கொண்டு உந்திப் பறப்போம் . வேள்வியில் புரந் தரன் போம்வழி தேடுமாறு உந்தீபற அவ்யாகத்தில் இந்திரன் தான் தப்பிப்போகும் வழியைத் தேடுமாற்றைக் கூறிக்கொண்டு உந்திப் பறப்போம் . யாகத்திலே தலைவனாகிய தக்கன் இறந்துபட அவன் பிதாவாகிய பிரமனும் தான் தப்பியோடும் வழியைத் தேடுமாற்றைக் கூறிக் கொண்டு உந்திப் பறப்போம் . அவ்யாகத்தில் இந்திரன் தான் தப்பிப் போகும் வழியைத் தேடுமாற்றைக் கூறிக்கொண்டு உந்திப் பறப் போமாக என்பதாம் . மகம் - வேள்வி . இயமான் வடமொழித்திரிபு ; யாகத்தைச் செய் பவன் என்றவாறு . நான்மறையோனும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பும் மகத்து இயமானன்பட்டமையைத் தழுவிநிற்றலின் இறந்தது தழீஇய எச்சவும்மையுமாம் . நான்மறையோனும் போகும்வழி தேடு மாறு எனக் கூட்டுக . போம் வழி தேடுமாறு என்பதனை புரந்தரன் என்பதனோடும் சேர்த்து வேள்வியில் புரந்தரன் போம்வழி தேடு மாறுந்தீபற என இயைத்துப் பொருள் கொள்க . பிரமனும் தான் தப்பிப் போகும் வழி தேடிய பொழுது வீரபத்திரரால் குட்டப்பட் டான் . ' ' நாமகள் நாசி சிரம் பிரமன் ( தோணோ . 11 ) என வருதலுங் காண்க . இந்திரன் போம் வழிதேடிக் குயிலுருக் கொண்டு ஓட வீரபத் திரரின் வாட்படையால் வெட்டப்பட்டான் . இதன்கண் போம்வழி தேடுமாறு என்பதனால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . 308 சூரிய னார்தொண்டை வாயினிற் பற்ளை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற . 14 - ரை . சூரியனார் தொண்டை வாயினில் பற்களை சூரிய னுாடைய கொல்வைக் கனிபோன்ற சிவந்த வாயிலுள்ள பற்களை நெரித்து வாரிய ஆறு உந்தீபற -நெரித்து உதிரச்செய்த விதத்தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக ; வேள்வி மயங்கிற்று என்று