திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

798 திருவாசக ஆராய்ச்சியுரை உந்தீ பற - தக்கன்வேள்வி கலங்கிற்று என்று பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக. சூரியனுடைய வாயிலுள்ள பற்களை நெரித்து உதிரச்செய்த விதத் தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக என்பதாம்; தக்கன் வேள்வி கலங்கிற்று என்று பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக என்பதாம். சூரியனார் என்பதில் ஆர்விகுதி இழித்தற்கண் வந்தது. தொண்டை வாய் - தொண்டைக் கனிபோன்ற சிவந்தவாய். மகளிர் உதட்டிற்குத் தொண்டைக் கனியை உவமை கூறுதல் மரபாயினும் இங்கே ஒப் புமை பற்றி வாயின் சிவப்பிற்கு இது உவமை கூறப்பட்டது. இனி தொண்டைவாய் என்பதுதொண்டை வாயோடு தொடர்ந்த வாய் எனினுமாம். வாரி நெரித்தவாறு என்பதை நெரித்து வாரியவாறு என விகுதி பிரித்துக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. வீரபத்திரக் கடவுள் சூரியனின் பற்களை உதிர்த்தமையை, "அடித்தலங் கொடுமதி அதனைத் தேய்த்தபின் விடுத்தனன் கதிரவன் வெருவி ஓடலும் இடித்தெனக் சவளிடை எற்றி னானவன் உடுத்திரள் உதிர்ந்தென உகுப்பத் தந்தமே" (கந்த. யாக. சங்.25) "இரவிகளு ளொருவர் பல்லிறுத்துக் கொண்டார்'' (நாவு.309-9) என்பதனாலுமறிக. இதன்கண், "வேள்வி மயங்கிற்று" என்பதனால் ஞானவெற்றி புலப் படுமாறு காண்க. 15 309 தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கள் மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற. ப -ரை. தக்கன் மக்களை சூழ நின்று - தக்கனை மக்கள் சூழநின் றும். தக்கனார் அன்றே தலை இழந்தார் - தக்கன் வேள்வி இயற்றிய அப்பொழுதே தனது தலையை இழந்தான் என்று கூறிக்கொண்டு, உந்தீபற -உந்திப்பறப்போமாக. வேள்வி மடிந்தது என்று உந்தீபற யாகம் அழிந்தது என்று கூறிக்கொண்டு உந்திப் பறப்போமாக. தக்கன் தன் மக்களாற் சூழப்பட்டிருந்தும் தக்கன் வேள்வி இயற் றிய அப்பொழுதே தலையிழந்தான் என்று உந்திப்பறப்போமாக; வேள்வியும் அழிந்தது என்று உந்திப்பறப்போமாக என்பதாம்.
798 திருவாசக ஆராய்ச்சியுரை உந்தீ பற - தக்கன்வேள்வி கலங்கிற்று என்று பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக . சூரியனுடைய வாயிலுள்ள பற்களை நெரித்து உதிரச்செய்த விதத் தைப் பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக என்பதாம் ; தக்கன் வேள்வி கலங்கிற்று என்று பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக என்பதாம் . சூரியனார் என்பதில் ஆர்விகுதி இழித்தற்கண் வந்தது . தொண்டை வாய் - தொண்டைக் கனிபோன்ற சிவந்தவாய் . மகளிர் உதட்டிற்குத் தொண்டைக் கனியை உவமை கூறுதல் மரபாயினும் இங்கே ஒப் புமை பற்றி வாயின் சிவப்பிற்கு இது உவமை கூறப்பட்டது . இனி தொண்டைவாய் என்பதுதொண்டை வாயோடு தொடர்ந்த வாய் எனினுமாம் . வாரி நெரித்தவாறு என்பதை நெரித்து வாரியவாறு என விகுதி பிரித்துக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது . வீரபத்திரக் கடவுள் சூரியனின் பற்களை உதிர்த்தமையை அடித்தலங் கொடுமதி அதனைத் தேய்த்தபின் விடுத்தனன் கதிரவன் வெருவி ஓடலும் இடித்தெனக் சவளிடை எற்றி னானவன் உடுத்திரள் உதிர்ந்தென உகுப்பத் தந்தமே ( கந்த . யாக . சங் .25 ) இரவிகளு ளொருவர் பல்லிறுத்துக் கொண்டார் ' ' ( நாவு.309-9 ) என்பதனாலுமறிக . இதன்கண் வேள்வி மயங்கிற்று என்பதனால் ஞானவெற்றி புலப் படுமாறு காண்க . 15 309 தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கள் மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற . -ரை . தக்கன் மக்களை சூழ நின்று - தக்கனை மக்கள் சூழநின் றும் . தக்கனார் அன்றே தலை இழந்தார் - தக்கன் வேள்வி இயற்றிய அப்பொழுதே தனது தலையை இழந்தான் என்று கூறிக்கொண்டு உந்தீபற -உந்திப்பறப்போமாக . வேள்வி மடிந்தது என்று உந்தீபற யாகம் அழிந்தது என்று கூறிக்கொண்டு உந்திப் பறப்போமாக . தக்கன் தன் மக்களாற் சூழப்பட்டிருந்தும் தக்கன் வேள்வி இயற் றிய அப்பொழுதே தலையிழந்தான் என்று உந்திப்பறப்போமாக ; வேள்வியும் அழிந்தது என்று உந்திப்பறப்போமாக என்பதாம் .