திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பாலகனார் என்றது உபமன்யு முனிவரை. ஆர் உயர்வின்கண் வந் தது.உபமன்யு முனிவர் பாலகனாயிருக்கும் போது தம் தாய் மாமனா ராகிய வசிட்ட முனிவரது ஆச்சிரமத்தில் காமதேனுவின் இனியபாலை உண்டு வந்தனர். பின் தம் பிதாவாகிய வியாக்கிரபாதர் ஆச்சிரமத் தில் இருந்தபோது பால் கிடையாமையால் அழுதபோது அவர் அன்னை யார், 'நீ சிவபெருமானைப் பூசித்து உனக்கு வேண்டிய பாலைப் பெறுக' என்று கூற அவரும் சிவபெருமானைப் பூசித்து வேண்ட, இறைவன் அப் பாலகனார்க்குத் திருப்பாற்கடலையே வருவித்தருளி என் என்பதைமகா பாரதம் கோயிற் புராணம் முதலியவற்றாலுமறிக. அன்று என்றது "பாலனுக் கருள்கள் செய்த வெம்மடிகள்" (ஞான. 41-7)எனஉபமன்யு முனிவர் பாலகனாயிருந்து பால் வேண்டிய காலத்தைச் சுட்டியது. பாற்கடல் ஈந்தது, 800 'பாலகனுக் காயன்று பாற்கடலிந்து" 'கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுக என் றேவினான் பொற்கயிலை எம்பெருமான் - மேவியசீர் அன்பாற் புலிக் காலன் பாலன்பால் ஆசையினால் தன்பாற்பால் வேண்டுதலுந் தான்" (நாவு. 107-6) (கயிலை பாதி.81) என வருவனவற்றாலுமறிக. 'கோலக் குழற் சடையுங் கொல்லேறும் '" (11 ந் திருமுறை கார் எட்டு 3) என்பதனால் கோலச் சடையற்கே" என்றார், இறைவன் ஒரு கலைப்பிறையைச் சடையில் தாங்கி அதன் கலைக் குறைவினை நீக்கிய தன்மை தோன்ற, சடையற்கே உந்தீபற என்றது. அவ்விறைவன்பால் ஈடுபட்டு அவன் அருட்டிறத்தினை நினைந்து பாடிக்கொண்டே உந்தீபற என்றவாறு. முருகனைக் குமரன் என்றது என்றும் இளையோனாதல் பற்றி. "என்றும் இளையா யழகியாய்" எனப் பிறரும் கூறுதல் காண்க. குமரன் தன் தாதை-குமரனுக்குத் தாதை, "நல்வேலன் தாதை" என்றார் திருப்பொற் சுண்ணத்தும் (3). இதன் கண், ''கோலச் சடையற்கே" "குமரன்றன் தாதைக்கே" என்பவற்றால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க. 311 நல்ல மலரின்மே னான்முக னார்தலை ஒல்லை யரிந்ததென் றுந்தீபற உகிரா லரிந்ததென் றுந்தீபற. 17 ப - ரை. நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை - நல்ல தாமரை மலரின் மேலுள்ள பிரமதேவனுடைய ஐந்து தலைகளுள் நடுத்தலை யினை,ஒல்லை அரிந்தது என்று உந்தீபற - விரைவாக அரிந்தனர் வைர வக் கடவுள் என்று பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக உகிரால் அரிந்தது என்று உந்தீபற - அத்தலையினை வைரவக்கடவுள் அரிந்ததும் கைவிரல் நகத்தால் என்று பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக.
திருவாசக ஆராய்ச்சியுரை பாலகனார் என்றது உபமன்யு முனிவரை . ஆர் உயர்வின்கண் வந் தது.உபமன்யு முனிவர் பாலகனாயிருக்கும் போது தம் தாய் மாமனா ராகிய வசிட்ட முனிவரது ஆச்சிரமத்தில் காமதேனுவின் இனியபாலை உண்டு வந்தனர் . பின் தம் பிதாவாகிய வியாக்கிரபாதர் ஆச்சிரமத் தில் இருந்தபோது பால் கிடையாமையால் அழுதபோது அவர் அன்னை யார் ' நீ சிவபெருமானைப் பூசித்து உனக்கு வேண்டிய பாலைப் பெறுக ' என்று கூற அவரும் சிவபெருமானைப் பூசித்து வேண்ட இறைவன் அப் பாலகனார்க்குத் திருப்பாற்கடலையே வருவித்தருளி என் என்பதைமகா பாரதம் கோயிற் புராணம் முதலியவற்றாலுமறிக . அன்று என்றது பாலனுக் கருள்கள் செய்த வெம்மடிகள் ( ஞான . 41-7 ) எனஉபமன்யு முனிவர் பாலகனாயிருந்து பால் வேண்டிய காலத்தைச் சுட்டியது . பாற்கடல் ஈந்தது 800 ' பாலகனுக் காயன்று பாற்கடலிந்து ' கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுக என் றேவினான் பொற்கயிலை எம்பெருமான் - மேவியசீர் அன்பாற் புலிக் காலன் பாலன்பால் ஆசையினால் தன்பாற்பால் வேண்டுதலுந் தான் ( நாவு . 107-6 ) ( கயிலை பாதி .81 ) என வருவனவற்றாலுமறிக . ' கோலக் குழற் சடையுங் கொல்லேறும் ' ( 11 ந் திருமுறை கார் எட்டு 3 ) என்பதனால் கோலச் சடையற்கே என்றார் இறைவன் ஒரு கலைப்பிறையைச் சடையில் தாங்கி அதன் கலைக் குறைவினை நீக்கிய தன்மை தோன்ற சடையற்கே உந்தீபற என்றது . அவ்விறைவன்பால் ஈடுபட்டு அவன் அருட்டிறத்தினை நினைந்து பாடிக்கொண்டே உந்தீபற என்றவாறு . முருகனைக் குமரன் என்றது என்றும் இளையோனாதல் பற்றி . என்றும் இளையா யழகியாய் எனப் பிறரும் கூறுதல் காண்க . குமரன் தன் தாதை - குமரனுக்குத் தாதை நல்வேலன் தாதை என்றார் திருப்பொற் சுண்ணத்தும் ( 3 ) . இதன் கண் ' ' கோலச் சடையற்கே குமரன்றன் தாதைக்கே என்பவற்றால் ஞானவெற்றி புலப்படுமாறு காண்க . 311 நல்ல மலரின்மே னான்முக னார்தலை ஒல்லை யரிந்ததென் றுந்தீபற உகிரா லரிந்ததென் றுந்தீபற . 17 - ரை . நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை - நல்ல தாமரை மலரின் மேலுள்ள பிரமதேவனுடைய ஐந்து தலைகளுள் நடுத்தலை யினை ஒல்லை அரிந்தது என்று உந்தீபற - விரைவாக அரிந்தனர் வைர வக் கடவுள் என்று பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக உகிரால் அரிந்தது என்று உந்தீபற - அத்தலையினை வைரவக்கடவுள் அரிந்ததும் கைவிரல் நகத்தால் என்று பாடிக்கொண்டு உந்திப்பறப்போமாக .