திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

802 திருவாசக ஆராய்ச்சியுரை கொண்டு உந்திப் பறப்போமாக. அவனுடைய தோள்கள் இருபதும் நெரிந்து போயின என்று பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக என் பதாம். தேரை நிறுத்தி மலை எடுத்தான் என்றது திக்கு விசயத்திற்காகத் தனது தேரைச் செலுத்தியபோது தனது செல்லுகைக்கு இடை யூறாக நின்ற கயிலைமலையைக் கண்டு தனது தேரை நிறுத்திவிட்டு அக் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முயன்றவன் என்றவாறு. எடுத் தான் - வினைப்பெயர், எடுத்தவன் இராவணன். மலையை எடுக்க முயன்ற அளவில் இறைவன் தன் பெருவிரலால் அழுத்த அவன் அக் கைலை மலையின் கீழ் அகப்பட்டுத் தனது பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுண்டான் என்பது வரலாறு. ஈரைந்து பத்து. சிரம் ஈரைந்தும் என்றமையால் இருபதும் என்றது இருபது தோள்களை. ''வரை யெடுத்த வாளரக்கன் வாயாறு திர நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப்-புரையெடுத்த பத்தனைய பொன்முடியுந் தோளிருப துந்நெரிய மெத்தெனவே வைத்த விரல்போற்றி" (11ந் திருமுறை போற்றிக் கலி.16-17) "விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி" (11ந் திருமுறை. கோயில் நான் 40-23-24) ‘‘வந்த வாளரக்கன் புயந்தலைதீரப் புலியூரரனிருக்கும் பொருப்பில்" (கோவை.383) "இறுத்தா யிலங்கைக்கிறையாயவனைத் தலைபத்தொடு தோள் பலவிற்று விழ" (சுந். 4-8) (சுந். 16-7) இலங்கையர் கோன் சிரம்பத்தோடிருபது திண்டோளும் இற்றலற வொற்றை விரல் வெற்பதன்மே லூன்றி" 'கடுத்தவன் தேர் கொண்டோடிக் கபிலாயநன் மாமலையை எடுத்தவனீரைந்துவா யரக்கன் முடிபத்தலற விடுத்தவன்'' "கருதாதவரக்கன் பெருந்தோள்கள் நாலைந்து மீரைந்து முடியுமுடையானை" (சுந். 22-7) (சுந். 38-9) 'இலங்கை வேந்தன் எழில் திகழ் கபிலையெடுப்ப ஆங்கிமவான் மகளஞ்சத், துலங்கு நீண்முடியொருபதுந் தோள்களிருபதுத் நெரித்து " என வருவனவற்றாலுமறிக. (சுந். 68-9) இதன்கண், "சிரம் ஈரைந்தும் இற்றவாறு' ''இருபதும் இற்றது' என்பவற்றால் ஞானவெற்றி புலப்பட்டவாறு காண்க. 19
802 திருவாசக ஆராய்ச்சியுரை கொண்டு உந்திப் பறப்போமாக . அவனுடைய தோள்கள் இருபதும் நெரிந்து போயின என்று பாடிக்கொண்டு உந்திப் பறப்போமாக என் பதாம் . தேரை நிறுத்தி மலை எடுத்தான் என்றது திக்கு விசயத்திற்காகத் தனது தேரைச் செலுத்தியபோது தனது செல்லுகைக்கு இடை யூறாக நின்ற கயிலைமலையைக் கண்டு தனது தேரை நிறுத்திவிட்டு அக் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முயன்றவன் என்றவாறு . எடுத் தான் - வினைப்பெயர் எடுத்தவன் இராவணன் . மலையை எடுக்க முயன்ற அளவில் இறைவன் தன் பெருவிரலால் அழுத்த அவன் அக் கைலை மலையின் கீழ் அகப்பட்டுத் தனது பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுண்டான் என்பது வரலாறு . ஈரைந்து பத்து . சிரம் ஈரைந்தும் என்றமையால் இருபதும் என்றது இருபது தோள்களை . ' ' வரை யெடுத்த வாளரக்கன் வாயாறு திர நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த பத்தனைய பொன்முடியுந் தோளிருப துந்நெரிய மெத்தெனவே வைத்த விரல்போற்றி ( 11 ந் திருமுறை போற்றிக் கலி.16-17 ) விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி ( 11 ந் திருமுறை . கோயில் நான் 40-23-24 ) வந்த வாளரக்கன் புயந்தலைதீரப் புலியூரரனிருக்கும் பொருப்பில் ( கோவை .383 ) இறுத்தா யிலங்கைக்கிறையாயவனைத் தலைபத்தொடு தோள் பலவிற்று விழ ( சுந் . 4-8 ) ( சுந் . 16-7 ) இலங்கையர் கோன் சிரம்பத்தோடிருபது திண்டோளும் இற்றலற வொற்றை விரல் வெற்பதன்மே லூன்றி ' கடுத்தவன் தேர் கொண்டோடிக் கபிலாயநன் மாமலையை எடுத்தவனீரைந்துவா யரக்கன் முடிபத்தலற விடுத்தவன் ' ' கருதாதவரக்கன் பெருந்தோள்கள் நாலைந்து மீரைந்து முடியுமுடையானை ( சுந் . 22-7 ) ( சுந் . 38-9 ) ' இலங்கை வேந்தன் எழில் திகழ் கபிலையெடுப்ப ஆங்கிமவான் மகளஞ்சத் துலங்கு நீண்முடியொருபதுந் தோள்களிருபதுத் நெரித்து என வருவனவற்றாலுமறிக . ( சுந் . 68-9 ) இதன்கண் சிரம் ஈரைந்தும் இற்றவாறு ' ' ' இருபதும் இற்றது ' என்பவற்றால் ஞானவெற்றி புலப்பட்டவாறு காண்க . 19