திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
806
314
திருவாசக ஆராய்ச்சியுரை
என்றும் பிறந்திறந் தாழாமே யாண்டு கொண்டான்
கன்றால் விளவெறிந்தான் பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை யம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர் தோணோக்க மாடாமோ.
ப- ரை. என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டுகொண்
டான் - எக்காலத்தும் பிறந்தும் இறந்தும் துன்பக் கடலில் அழுந்தா
வண்ணம் எம்மை ஆட்கொண்ட இறைவனும், கன்றால் விள எறிந்
தான் பிரமன் காண்பு அரிய - பசுக்கன்றினால் விளாமரத்தினை எறிந்து
இரண்டனையும் அழித்தவனான திருமாலும் பிரமனும் காணுதல் அரிய,
குன்றாத சீர்தில்லை அம்பலவன் - குறைதலில்லாத சிறப்பினையுடைய தில்
லைத் திருச்சிற்றம்பலவனுமாகிய சிவபெருமானது, குணம்பர வி-அருட்
குணத்தினைப் பாடிக்கொண்டு, துன்று ஆர் குழலினீர் தோணோக்கம்
ஆடாமோ - நெருங்குதல் பொருந்திய கூந்தலையுடைய பெண்களே!
நாம் தோணோக்கம் என்னும் விளையாட்டை ஆடுவோமாக.
என்றும் பிறந்து இறந்து துன்பக்கடலில் ஆழாவண்ணம் எம்மை
ஆட்கொண்டருளினவனும், திருமாலும் பிரமனும் காண்பரிய குன்றாத
சிறப்பினையுடைய தில்லையம்பலவனுமாகிய சிவபெருமானது அருட்
குணத்தைப் பாடிக்கொண்டு பெண்களே நாம் தோணோக்கம் ஆடு
வோமாக என்பதாம்.
பிறப்பும் இறப்பும் என்றும் தொடர்ந்து வருதலின் "என்றும்
பிறந்திறந்து" என்றார். ஆழாமே என்ற வினையினால் துன்பக்கடலில்
ஆழாமே எனவுரைக்க. "பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில்"
(அடைக்கலப்.4) என வருதலுங் காண்க. ஆழாமே - மே ஈற்று வினை
யெச்சம்.
கன்றால் விளவெறிந்தான் என்றது, மாமனாகிய கஞ்சனால் தன்
னைக் கொல்லும் பொருட்டு அனுப்பப்பட்ட அசுரர் இருவரில் ஒருவன்
பசுக்கன்றாகவும், மற்றொருவன் விளாமரமாகவும் நிற்க அவர்கள்
சூழ்ச்சியைக் கண்ட கண்ணன் பசுக்கன்றினை விளாமரத்தின் மீது
எறிந்து அவ்விருவரையும் அழித்தான் என்றவாறு. இது திருமாலின்
கிருஷ்ணாவதாரத்தில் நிகழ்ந்தது. விளவெறிந்தான் பிரமன் காண்
பரிய அம்பலவன் என்க.
"வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய"
கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்”
(அம்மானை.4)
(தெள்.10)
என வருவன காண்க. சீர் - புகழுமாம். ஆண்டுகொண்டவனும் தில்லை
யம்பலவனுமாகிய சிவபெருமான் குணம் பரவித் தோணோக்கம்
806
314
திருவாசக
ஆராய்ச்சியுரை
என்றும்
பிறந்திறந்
தாழாமே
யாண்டு
கொண்டான்
கன்றால்
விளவெறிந்தான்
பிரமன்
காண்பரிய
குன்றாத
சீர்த்தில்லை
யம்பலவன்
குணம்பரவித்
துன்றார்
குழலினீர்
தோணோக்க
மாடாமோ
.
ப-
ரை
.
என்றும்
பிறந்து
இறந்து
ஆழாமே
ஆண்டுகொண்
டான்
-
எக்காலத்தும்
பிறந்தும்
இறந்தும்
துன்பக்
கடலில்
அழுந்தா
வண்ணம்
எம்மை
ஆட்கொண்ட
இறைவனும்
கன்றால்
விள
எறிந்
தான்
பிரமன்
காண்பு
அரிய
-
பசுக்கன்றினால்
விளாமரத்தினை
எறிந்து
இரண்டனையும்
அழித்தவனான
திருமாலும்
பிரமனும்
காணுதல்
அரிய
குன்றாத
சீர்தில்லை
அம்பலவன்
-
குறைதலில்லாத
சிறப்பினையுடைய
தில்
லைத்
திருச்சிற்றம்பலவனுமாகிய
சிவபெருமானது
குணம்பர
வி
-
அருட்
குணத்தினைப்
பாடிக்கொண்டு
துன்று
ஆர்
குழலினீர்
தோணோக்கம்
ஆடாமோ
-
நெருங்குதல்
பொருந்திய
கூந்தலையுடைய
பெண்களே
!
நாம்
தோணோக்கம்
என்னும்
விளையாட்டை
ஆடுவோமாக
.
என்றும்
பிறந்து
இறந்து
துன்பக்கடலில்
ஆழாவண்ணம்
எம்மை
ஆட்கொண்டருளினவனும்
திருமாலும்
பிரமனும்
காண்பரிய
குன்றாத
சிறப்பினையுடைய
தில்லையம்பலவனுமாகிய
சிவபெருமானது
அருட்
குணத்தைப்
பாடிக்கொண்டு
பெண்களே
நாம்
தோணோக்கம்
ஆடு
வோமாக
என்பதாம்
.
பிறப்பும்
இறப்பும்
என்றும்
தொடர்ந்து
வருதலின்
என்றும்
பிறந்திறந்து
என்றார்
.
ஆழாமே
என்ற
வினையினால்
துன்பக்கடலில்
ஆழாமே
எனவுரைக்க
.
பொழிகின்ற
துன்பப்
புயல்
வெள்ளத்தில்
(
அடைக்கலப்
.4
)
என
வருதலுங்
காண்க
.
ஆழாமே
-
மே
ஈற்று
வினை
யெச்சம்
.
கன்றால்
விளவெறிந்தான்
என்றது
மாமனாகிய
கஞ்சனால்
தன்
னைக்
கொல்லும்
பொருட்டு
அனுப்பப்பட்ட
அசுரர்
இருவரில்
ஒருவன்
பசுக்கன்றாகவும்
மற்றொருவன்
விளாமரமாகவும்
நிற்க
அவர்கள்
சூழ்ச்சியைக்
கண்ட
கண்ணன்
பசுக்கன்றினை
விளாமரத்தின்
மீது
எறிந்து
அவ்விருவரையும்
அழித்தான்
என்றவாறு
.
இது
திருமாலின்
கிருஷ்ணாவதாரத்தில்
நிகழ்ந்தது
.
விளவெறிந்தான்
பிரமன்
காண்
பரிய
அம்பலவன்
என்க
.
வான்வந்த
தேவர்களும்
மாலயனோ
டிந்திரனும்
கானின்று
வற்றியும்
புற்றெழுந்துங்
காண்பரிய
கனவேயுந்
தேவர்கள்
காண்பரிய
கனைகழலோன்
”
(
அம்மானை
.4
)
(
தெள்
.10
)
என
வருவன
காண்க
.
சீர்
-
புகழுமாம்
.
ஆண்டுகொண்டவனும்
தில்லை
யம்பலவனுமாகிய
சிவபெருமான்
குணம்
பரவித்
தோணோக்கம்