திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தோணோக்கம் ஆடாமோ என முடிக்க. இனி, தில்லையம்பலவன் ஆண்டுகொண்டான் அவன் குணம்பரவித் தோணோக்கம் ஆடாமோ எனமாறிக் கூட்டி முடிப்பினுமமையும். துன்று - நெருங்கிய. குழல் - கூந்தல். மகளிர் அழகினைக் கூந்தன் மேலிட்டுக் குழலினீர் என்றார். ஆடாமோ என்பதில் மோ முன்னிலை யசை. ஆடுவாம் என்பது ஆடாம் என மருவிற்று. ஆடாமோ வூசல்'' (சில. 29 ஊசல்வரி) என்புழிப்போல. 807 இதன்கண், "பிறந்திறந்தாழாமே ஆண்டுகொண்டான்" என்பத னால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 315 பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் செருப்புற்ற சீரடி வாய்க்கலக மூனமுதம் விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங் கருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ. 2 ப - ரை. பொருள்பற்றி செய்கின்ற பூசனைகள் போல் விளங்க- பூசனைக்குரிய பொருள்களைக்கொண்டு சைவாகம விதிப்படி செய்கின்ற வழிபாடுகள்போல் விளங்கும்படி, செருப்பு உற்ற சீர் அடி- செருப்புப் பொருந்திய சிறந்த பாதமாகிய மார்ச்சனியும், வாய் கலசம் - வாயா கிய அபிடேக கலச தீர்த்தமும், ஊன் அமுதம் விருப்புற்று - இறைச்சி யாகிய நைவேத்தியமும் ஆகிய இவற்றைக்கொண்டு கண்ணப்பநாய னார் செய்த வழிபாட்டினைக் காளத்தியப்பர் விரும்பி ஏற்றுக் கொண்டு, வேடனார் சேடு அறிய - அக்கண்ணப்பநாயனாரது பெருமை யினை உலகம் அறியும் வண்ணம், மெய்குளிர்ந்து - தமது திருமேனி குளிர்ச்சியடைந்து, அங்கு அருள் பெற்று நின்ற ஆறு - அவ்விடத்துத் திருவருள் செய்த அவ்வருட்பேற்றினை அவ் வேடனார் பெற்றுநின்ற விதத்தைப் பாடிக்கொண்டு, தோணோக்கம் ஆடாமோ - தோணோக் கம் என்னும் விளையாட்டினை ஆடுவோமாக. பூசனைக்குரிய பொருள்களைக்கொண்டு சைவாகம விதிப்படி செய் கின்ற பூசனையைப் போல விளங்கும்படி செருப்புற்ற சீரடியும் வாய்க் கலசமும் ஊனமுதமும் ஆகியவற்றைக்கொண்டு கண்ணப்பநாயனா ரால் செய்த வழிபாட்டினைக் காளத்தியப்பர் விரும்பி ஏற்றுக் கொண்டு. அவர் பெருமையினை உலகம் அறியும் வண்ணம் தமது திரு மேனி குளிர்ச்சியடைந்து அவ்விடத்தே திருவருள்செய்ய அவ்வருட் பேற்றினை அவ்வேடனார் பெற்றுநின்ற விதத்தைப் பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம்.
திருத்தோணோக்கம் ஆடாமோ என முடிக்க . இனி தில்லையம்பலவன் ஆண்டுகொண்டான் அவன் குணம்பரவித் தோணோக்கம் ஆடாமோ எனமாறிக் கூட்டி முடிப்பினுமமையும் . துன்று - நெருங்கிய . குழல் - கூந்தல் . மகளிர் அழகினைக் கூந்தன் மேலிட்டுக் குழலினீர் என்றார் . ஆடாமோ என்பதில் மோ முன்னிலை யசை . ஆடுவாம் என்பது ஆடாம் என மருவிற்று . ஆடாமோ வூசல் ' ' ( சில . 29 ஊசல்வரி ) என்புழிப்போல . 807 இதன்கண் பிறந்திறந்தாழாமே ஆண்டுகொண்டான் என்பத னால் பிரபஞ்சசுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 315 பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் செருப்புற்ற சீரடி வாய்க்கலக மூனமுதம் விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங் கருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ . 2 - ரை . பொருள்பற்றி செய்கின்ற பூசனைகள் போல் விளங்க பூசனைக்குரிய பொருள்களைக்கொண்டு சைவாகம விதிப்படி செய்கின்ற வழிபாடுகள்போல் விளங்கும்படி செருப்பு உற்ற சீர் அடி- செருப்புப் பொருந்திய சிறந்த பாதமாகிய மார்ச்சனியும் வாய் கலசம் - வாயா கிய அபிடேக கலச தீர்த்தமும் ஊன் அமுதம் விருப்புற்று - இறைச்சி யாகிய நைவேத்தியமும் ஆகிய இவற்றைக்கொண்டு கண்ணப்பநாய னார் செய்த வழிபாட்டினைக் காளத்தியப்பர் விரும்பி ஏற்றுக் கொண்டு வேடனார் சேடு அறிய - அக்கண்ணப்பநாயனாரது பெருமை யினை உலகம் அறியும் வண்ணம் மெய்குளிர்ந்து - தமது திருமேனி குளிர்ச்சியடைந்து அங்கு அருள் பெற்று நின்ற ஆறு - அவ்விடத்துத் திருவருள் செய்த அவ்வருட்பேற்றினை அவ் வேடனார் பெற்றுநின்ற விதத்தைப் பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடாமோ - தோணோக் கம் என்னும் விளையாட்டினை ஆடுவோமாக . பூசனைக்குரிய பொருள்களைக்கொண்டு சைவாகம விதிப்படி செய் கின்ற பூசனையைப் போல விளங்கும்படி செருப்புற்ற சீரடியும் வாய்க் கலசமும் ஊனமுதமும் ஆகியவற்றைக்கொண்டு கண்ணப்பநாயனா ரால் செய்த வழிபாட்டினைக் காளத்தியப்பர் விரும்பி ஏற்றுக் கொண்டு . அவர் பெருமையினை உலகம் அறியும் வண்ணம் தமது திரு மேனி குளிர்ச்சியடைந்து அவ்விடத்தே திருவருள்செய்ய அவ்வருட் பேற்றினை அவ்வேடனார் பெற்றுநின்ற விதத்தைப் பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம் .