திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப-ரை. புத்தன் முதலாய புல் அறிவின் பல்சமயம் -புத்தன் முதலியோரால் ஆக்கப்பட்ட அற்ப அறிவினையுடைய பல சமயத்த வர்களும், தத்தம் மதங்களில் தட்டுளுப்பு பட்டு நிற்க - தங்கள் தங் கள் மதங்களிலே தடுமாற்றம் அடைந்து நிற்க, சித்தம் சிவம் ஆக்கி- எனது உள்ளத்தைச் சிவனாகிய தன்னுடையதாக்கி, செய்தனவே தவம் ஆக்கும் - யான் செய்தவைகளைத் தவச்செயல்களாக்கும்படி பணித் தருளிய, அத்தன் கருணையினால் - எனது தந்தையாகிய இறைவனது திருவருளினால் மகிழ்ந்து, தோணோக்கம் ஆடாமோ - நாம் தோணோக் கம் ஆடுவோமாக. 812 புத்தன் முதலியோரால் ஆக்கப்பட்ட அற்ப அறிவினையுடைய பல சமயத்தவர்களும் தங்கள் தங்கள் மதங்களில் தடுமாற்றம் எய்தி நிற்க, எனது சித்தத்தைச் சிவமாக்கி யான் செய்தவைகளைத் தவச் செயல்களாகும்படி பணித்தருளிய அத்தன்கருணையினால் தோணோக்க மாடுவோமாக என்பதாம். புத்தன் முதலாய பல்சமயம் எனப் புத்த சமயத்தை முதற்கண் வைத்தது அச்சமயமே ஏனைச்சமயங்கள் எல்லாவற்றிலும் மிக்கு நின் றமை பற்றியாகும். தட்டுளுப்பு - தடுமாற்றம். இறை உயிர், உலகு என்னும் முப்பொருள்களின் முடிந்த உணர்வின்றிப் புல்லறிவினை யுடைமையால் வீடுபேறு காணாது தட்டுளுப்புப்பட்டு நிற்பாராயினர். சித்தம் சிவமாக்குதல் - இடைவிடாத சிவத் தியானத்தினால் சித்தம் சிவனுடைமையாதல். அங்ஙனமாகவே அச்சித்தத்தால் நினைந்து செய்யப்படும் செயல்களெல்லாம் தவச்செயல்களாதலின் செய் தனவே தவமாக்கும் என்றார். 'சிவமாக்கி' எனவும்'தவமாக்கும்' என வும் அத்தன் செயலாகக் கூறியது தற்போத முனைப்பு இல்லாமை பற்றியாகும். கருணையினால் மகிழ்ந்து என ஒருசொல் வருவித்துரைக் கப்பட்டது. இதன்கண், ''சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத் தன்'' என்பதனால் பிரபஞ்ச சுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 6 319 தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப ஈசன் திரு வருளால் தேவர்தொழப் பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். 200 ப-ரை. மாணி -பிரமசாரியாகிய விசாரசருமர், வேதியன் சாதியும் - அந்தணர் குலத்தவனும், தாதை தனை - தனக்குத் தந்தை யும், சிவகருமம் சிதைத்தானை - தான் செய்யும் சிவபூசைக்கு இடை யூறு செய்தவனுமாகிய எச்சதத்தன் என்பவனை, தாள் இரண்டும்
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை . புத்தன் முதலாய புல் அறிவின் பல்சமயம் -புத்தன் முதலியோரால் ஆக்கப்பட்ட அற்ப அறிவினையுடைய பல சமயத்த வர்களும் தத்தம் மதங்களில் தட்டுளுப்பு பட்டு நிற்க - தங்கள் தங் கள் மதங்களிலே தடுமாற்றம் அடைந்து நிற்க சித்தம் சிவம் ஆக்கி எனது உள்ளத்தைச் சிவனாகிய தன்னுடையதாக்கி செய்தனவே தவம் ஆக்கும் - யான் செய்தவைகளைத் தவச்செயல்களாக்கும்படி பணித் தருளிய அத்தன் கருணையினால் - எனது தந்தையாகிய இறைவனது திருவருளினால் மகிழ்ந்து தோணோக்கம் ஆடாமோ - நாம் தோணோக் கம் ஆடுவோமாக . 812 புத்தன் முதலியோரால் ஆக்கப்பட்ட அற்ப அறிவினையுடைய பல சமயத்தவர்களும் தங்கள் தங்கள் மதங்களில் தடுமாற்றம் எய்தி நிற்க எனது சித்தத்தைச் சிவமாக்கி யான் செய்தவைகளைத் தவச் செயல்களாகும்படி பணித்தருளிய அத்தன்கருணையினால் தோணோக்க மாடுவோமாக என்பதாம் . புத்தன் முதலாய பல்சமயம் எனப் புத்த சமயத்தை முதற்கண் வைத்தது அச்சமயமே ஏனைச்சமயங்கள் எல்லாவற்றிலும் மிக்கு நின் றமை பற்றியாகும் . தட்டுளுப்பு - தடுமாற்றம் . இறை உயிர் உலகு என்னும் முப்பொருள்களின் முடிந்த உணர்வின்றிப் புல்லறிவினை யுடைமையால் வீடுபேறு காணாது தட்டுளுப்புப்பட்டு நிற்பாராயினர் . சித்தம் சிவமாக்குதல் - இடைவிடாத சிவத் தியானத்தினால் சித்தம் சிவனுடைமையாதல் . அங்ஙனமாகவே அச்சித்தத்தால் நினைந்து செய்யப்படும் செயல்களெல்லாம் தவச்செயல்களாதலின் செய் தனவே தவமாக்கும் என்றார் . ' சிவமாக்கி ' எனவும்'தவமாக்கும் ' என வும் அத்தன் செயலாகக் கூறியது தற்போத முனைப்பு இல்லாமை பற்றியாகும் . கருணையினால் மகிழ்ந்து என ஒருசொல் வருவித்துரைக் கப்பட்டது . இதன்கண் ' ' சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத் தன் ' ' என்பதனால் பிரபஞ்ச சுத்தி என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 6 319 தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப ஈசன் திரு வருளால் தேவர்தொழப் பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம் . 200 - ரை . மாணி -பிரமசாரியாகிய விசாரசருமர் வேதியன் சாதியும் - அந்தணர் குலத்தவனும் தாதை தனை - தனக்குத் தந்தை யும் சிவகருமம் சிதைத்தானை - தான் செய்யும் சிவபூசைக்கு இடை யூறு செய்தவனுமாகிய எச்சதத்தன் என்பவனை தாள் இரண்டும்