திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தோணோக்கம் 813 சேதிப்ப - அவனுடைய தாள்கள் இரண்டனையும் வெட்டி வீழ்த்த. ஈசன் திருவருளால் தீது இல் - சிவபெருமானது திருவருளால் அச் செயல் தீதற்றதாக, தேவர்தொழ - தேவர்கள் தன்னை வணங்கும் படியாக, பாதகமே சோறு பற்றின ஆ-அவர் செய்த கொலைப் பாதகமே இறைவனது நிர்மாலியமாகிய அன்னத்தினைப் பெற்றுக் கொள்ளும் சண்டேசுவரபதவியைக் கொடுத்ததன்மையினைப் பாடி, தோணோக்கம் ஆடாமோ - தோணோக்கம் ஆடுவோமாக. பிரமசாரியாகிய விசாரசருமர், அந்தணர் குலத்தவனும் தமக் குத் தந்தையும் தாம்செய்யும் சிவகருமத்தினைச் சிதைத்தவனுமாகிய எச்சதத்தன் என்பவனை அவனுடைய தாள்கள் இரண்டனையும் வெட்டி வீழ்த்த, ஈசன் திருவருளால் அச்செயல் தீதற்றதாக, தேவர் கள் தம்மை வணங்கும்படி அவர்செய்த கொலைப் பாதகமும் இறைவ னது நிர்மாலியமாகிய அன்னத்தினைப் பெற்றுக்கொள்ளும் சண்டே சுவரர் பதவியைக் கொடுத்த தன்மையினைப்பாடித் தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம். தீதில்லை என்பதில் ஐ - சாரியை. அதனை ஈசனருளால் என்பதன் பின்சேர்த்து, தீதில்லையாக என ஒரு சொல் வருவித்துப் பொருளுரைக் கப்பட்டது. மாணி - பிரமசாரி. சிவகருமம் - சிவபூசை. சிதைத்தானை தாதைதனை என்பனவற்றிலுள்ள இரண்டாம் வேற்றுமைகள் ஒன்றா கக் கொண்டு பொருளுரைக்கப்பட்டது. சிதைத்தானும் தாதையு மாகிய எனவுரைக்க. சாதியும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. சேதிப்ப தீதில்லையாக தொழ பற்றின வா என முடியும். அந்தண னும் தாதையுமாகிய எச்சனது தாள்களை வெட்டி வீழ்த்தியது பாத கச் செயலாயினும் அவன்சிவபூசைக்கு இடையூறு செய்தானாகலின் அவனைத் தண்டித்தமை மேலாகிய புண்ணியச் செயலாயிற்று; அதனால் தீதில்லையாயிற்று. சண்டீச நாயனார் அரனடிக்கன்பராதலின் அவர் செய்த பாதகம் நன்மையாய் முடிந்தமையை, 'அரனடிக் ன்கர் செய்யும் பாவ மும் அறமதாகும் மரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும் வர முடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி நரரினிற் பாலன் செய்த பாதக நன்மை யாய்த்தே' (சிவஞானசித்தி.சூத்.2 செய்.29) எனச் சிவஞான சித்தியாரில் அருளியமை காண்க. பாதகமே என்பதில் ஏகாரம் வியப்புப் பொருளில் வந்தது.
திருத்தோணோக்கம் 813 சேதிப்ப - அவனுடைய தாள்கள் இரண்டனையும் வெட்டி வீழ்த்த . ஈசன் திருவருளால் தீது இல் - சிவபெருமானது திருவருளால் அச் செயல் தீதற்றதாக தேவர்தொழ - தேவர்கள் தன்னை வணங்கும் படியாக பாதகமே சோறு பற்றின - அவர் செய்த கொலைப் பாதகமே இறைவனது நிர்மாலியமாகிய அன்னத்தினைப் பெற்றுக் கொள்ளும் சண்டேசுவரபதவியைக் கொடுத்ததன்மையினைப் பாடி தோணோக்கம் ஆடாமோ - தோணோக்கம் ஆடுவோமாக . பிரமசாரியாகிய விசாரசருமர் அந்தணர் குலத்தவனும் தமக் குத் தந்தையும் தாம்செய்யும் சிவகருமத்தினைச் சிதைத்தவனுமாகிய எச்சதத்தன் என்பவனை அவனுடைய தாள்கள் இரண்டனையும் வெட்டி வீழ்த்த ஈசன் திருவருளால் அச்செயல் தீதற்றதாக தேவர் கள் தம்மை வணங்கும்படி அவர்செய்த கொலைப் பாதகமும் இறைவ னது நிர்மாலியமாகிய அன்னத்தினைப் பெற்றுக்கொள்ளும் சண்டே சுவரர் பதவியைக் கொடுத்த தன்மையினைப்பாடித் தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம் . தீதில்லை என்பதில் - சாரியை . அதனை ஈசனருளால் என்பதன் பின்சேர்த்து தீதில்லையாக என ஒரு சொல் வருவித்துப் பொருளுரைக் கப்பட்டது . மாணி - பிரமசாரி . சிவகருமம் - சிவபூசை . சிதைத்தானை தாதைதனை என்பனவற்றிலுள்ள இரண்டாம் வேற்றுமைகள் ஒன்றா கக் கொண்டு பொருளுரைக்கப்பட்டது . சிதைத்தானும் தாதையு மாகிய எனவுரைக்க . சாதியும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு . சேதிப்ப தீதில்லையாக தொழ பற்றின வா என முடியும் . அந்தண னும் தாதையுமாகிய எச்சனது தாள்களை வெட்டி வீழ்த்தியது பாத கச் செயலாயினும் அவன்சிவபூசைக்கு இடையூறு செய்தானாகலின் அவனைத் தண்டித்தமை மேலாகிய புண்ணியச் செயலாயிற்று ; அதனால் தீதில்லையாயிற்று . சண்டீச நாயனார் அரனடிக்கன்பராதலின் அவர் செய்த பாதகம் நன்மையாய் முடிந்தமையை ' அரனடிக் ன்கர் செய்யும் பாவ மும் அறமதாகும் மரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும் வர முடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி நரரினிற் பாலன் செய்த பாதக நன்மை யாய்த்தே ' ( சிவஞானசித்தி.சூத் .2 செய் .29 ) எனச் சிவஞான சித்தியாரில் அருளியமை காண்க . பாதகமே என்பதில் ஏகாரம் வியப்புப் பொருளில் வந்தது .