திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை சோறு - இறைவனுக்கு நிவேதித்த திருவமுது. இதற்கு வீடு என்று பொருள்கொள்வாருமுளர். அது பொருந்தாது. 'பாதகமே சோறு பற்றினவா" என அடிகள் அருளியமையை, 814 "தழைத்ததோர் ஆத்தியின் கீழ்த்தாபரமணலாற் கூப்பி அழைத்தங்கே ஆவின் பாலைக்கறந்து கொண்டாட்டக்கண்டு பிழைத்ததன் தாதைதாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே" (நாவு.49-3) "நிறைந்த மாமணலைக் கூப்பி நேசமோடாவின் பாலைக் கறந்துகொண்டாட்டக் கண்டு கறுத்த தன்தாதை தாளை எறிந்த மாணிக்கப்போதே எழில் கொள் சண்டீசனென்னச் சிறந்த பேரளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே" (நாவு. 73-5) 'அணிகொளாடையும் பூணணிமாலையமுது செய்தமுதம் பெறுசண்டி" (சுந். 65-2) எனத் தேவாரத்தும், 'அண்டர் பிரானுந் தொண்டர் தமக் கதிபனாக்கி யனைத்துநாம் உண்டகலமு முடுப்பனவுஞ் சூடு வனவு முனக்காகச் சண்டீ சனுமாம் பதந்தந்தோ மென்றங்கவர் பொற்றடமுடிக்குத் துண்டமதிசேர் சடைக்கொன்றை மாலைவாங்கிச் சூட்டினார்" (சண்டீ 56) எனப் பெரியபுராணத்தும், "தாதையைத் தாளற வீசிய சண்டிக் கிவ்வண்டத்தொடு முடனே பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமு மருளிச் சோதி மணிமுடித் தாமமு நாமமுந் தொண்டர்க்கு நாயகமும் பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே" (10) எனத் திருப்பல்லாண்டினும் வருவன காண்க. சோறு எனப் பொதுப்படக் கூறினும் உபலக்கணத்தால் இறை வர்க்குச் சாத்தப்பட்ட பரிவட்டம் பூமாலை புஷ்பம் சந்தனம் முதலி யனவும் கொள்க. 'வாலுகத்தால் நல்லிங்க மாவகுத்து மற்றதன்மேற் பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி மேலுதைத்தங் கோட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கட் பொற்கோயி லுள்ளிருத்திப் பூமாலை போனகமும் நற்கோலம் ஈந்த நலம்போற்றி" எனப் பதினொராந்திருமுறையிலுங் காண்க. (போற்றித் திருக்கலிவெண்பா) பற்றினவாறு என்பது ஈறுகெட்டது. பற்றினவாறு என்பதற்குப் பற்றுதற்கு ஏதுவானவாறு எனப்பொருளுரைக்கப்பட்டது.
திருவாசக ஆராய்ச்சியுரை சோறு - இறைவனுக்கு நிவேதித்த திருவமுது . இதற்கு வீடு என்று பொருள்கொள்வாருமுளர் . அது பொருந்தாது . ' பாதகமே சோறு பற்றினவா என அடிகள் அருளியமையை 814 தழைத்ததோர் ஆத்தியின் கீழ்த்தாபரமணலாற் கூப்பி அழைத்தங்கே ஆவின் பாலைக்கறந்து கொண்டாட்டக்கண்டு பிழைத்ததன் தாதைதாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே ( நாவு.49-3 ) நிறைந்த மாமணலைக் கூப்பி நேசமோடாவின் பாலைக் கறந்துகொண்டாட்டக் கண்டு கறுத்த தன்தாதை தாளை எறிந்த மாணிக்கப்போதே எழில் கொள் சண்டீசனென்னச் சிறந்த பேரளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே ( நாவு . 73-5 ) ' அணிகொளாடையும் பூணணிமாலையமுது செய்தமுதம் பெறுசண்டி ( சுந் . 65-2 ) எனத் தேவாரத்தும் ' அண்டர் பிரானுந் தொண்டர் தமக் கதிபனாக்கி யனைத்துநாம் உண்டகலமு முடுப்பனவுஞ் சூடு வனவு முனக்காகச் சண்டீ சனுமாம் பதந்தந்தோ மென்றங்கவர் பொற்றடமுடிக்குத் துண்டமதிசேர் சடைக்கொன்றை மாலைவாங்கிச் சூட்டினார் ( சண்டீ 56 ) எனப் பெரியபுராணத்தும் தாதையைத் தாளற வீசிய சண்டிக் கிவ்வண்டத்தொடு முடனே பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமு மருளிச் சோதி மணிமுடித் தாமமு நாமமுந் தொண்டர்க்கு நாயகமும் பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே ( 10 ) எனத் திருப்பல்லாண்டினும் வருவன காண்க . சோறு எனப் பொதுப்படக் கூறினும் உபலக்கணத்தால் இறை வர்க்குச் சாத்தப்பட்ட பரிவட்டம் பூமாலை புஷ்பம் சந்தனம் முதலி யனவும் கொள்க . ' வாலுகத்தால் நல்லிங்க மாவகுத்து மற்றதன்மேற் பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி மேலுதைத்தங் கோட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கட் பொற்கோயி லுள்ளிருத்திப் பூமாலை போனகமும் நற்கோலம் ஈந்த நலம்போற்றி எனப் பதினொராந்திருமுறையிலுங் காண்க . ( போற்றித் திருக்கலிவெண்பா ) பற்றினவாறு என்பது ஈறுகெட்டது . பற்றினவாறு என்பதற்குப் பற்றுதற்கு ஏதுவானவாறு எனப்பொருளுரைக்கப்பட்டது .