திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

818 திருவாசக ஆராய்ச்சியுரை "நாரண னடித்த வெழுவாய்த் தருக்கத் தறிவுநிலை போகி யருச்சனை விடுத்த வெள்ளமுர ணரக்கர் கள்ளமதின் மூன்றும் சிறுநகை கொண்ட வொருபெருந் தீயி னேழுயர் வானம் பூழிபடக் சுருக்கி யருச்சனை விடாதங் கொருப்படு மூவரி லிருவரைக் காவன் மருவுத லீந்து மற்றொரு வற்கு வைத்த நட மறிந்து குடமுழ விசைப்பப் பெறுமரு ணல்கி யொருநா ளருச்சனை புரிநாடலர்க்கும் அரும்பெற லுளதாம் பெரும் பதங் காட்டி யெரியிடை மாய்ந்த கனல்விழி யரக்கர்க் குலவாப் பொன்னுல கடைதர வைத்த சுந்தரக் கடவுள்" (25-15-37) எனக் கல்லாடனாரும் கூறினும் எல்லாரும் இறைவாயிலின் கடைத் தலைக்கண் நின்றவரேயாவர். புரமெரித்த அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயிற் கடைகாவல் கொண்டவா போற்றி' (போற்றித் திருக்கலி வெண்பா 28-30) எனப் பதினோராந்திருமுறையினும் வருதல் காண்க. கண்ணுதல் - கண்ணையுடைத்தாகிய நுதல் (கோவை. 10 பேர்.) மபப் கடைத்தலை - முதற்கோபுரவாயில். கடைத்தலை நிற்றல் - இறை வன் அருள் பெற்று வாயில் காப்பவராய் நிற்றல். நின்றதன் பின் மாண்டனர் என இயைக்க. மண்மிசை என்பதனை இந்திரர் பிரமர் களுக்கும் இயைக்க. பிருதிவி அண்டம் நூறுகோடி விரிவினையுடையதாகும். அது பற்றி அண்டந்தோறும் இந்திரரும் பிரமரும் மாலவரும் பலராவர் என்க. மண்மிசைமால் என்பதற்குப் பூமியை உண்டமால் என்று உரைப் பாருமுளர். அது பொருந்தாது. என்னை? மண்மிசை என்பதற்குப் பிருதிவியண்டங்களில் என்பது பொருளாதலின். பூமியை உண்டமால் ஒருவரன்றிப் பலரின்மையுமறிக. இந்திரர் பிரமர் மால் என்பவர் களின் கற்பகாலமாகிய வாழ்நாள் வேறுபாடுபற்றி எண்ணிலியிந்திரர் எத்தனையோ பிரமர்கள் மால்பலர் என அளவு வேறுபடக் கூறப் பட்டது. எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்கள் மால் பலர் மாண்டனர் என்க.
818 திருவாசக ஆராய்ச்சியுரை நாரண னடித்த வெழுவாய்த் தருக்கத் தறிவுநிலை போகி யருச்சனை விடுத்த வெள்ளமுர ணரக்கர் கள்ளமதின் மூன்றும் சிறுநகை கொண்ட வொருபெருந் தீயி னேழுயர் வானம் பூழிபடக் சுருக்கி யருச்சனை விடாதங் கொருப்படு மூவரி லிருவரைக் காவன் மருவுத லீந்து மற்றொரு வற்கு வைத்த நட மறிந்து குடமுழ விசைப்பப் பெறுமரு ணல்கி யொருநா ளருச்சனை புரிநாடலர்க்கும் அரும்பெற லுளதாம் பெரும் பதங் காட்டி யெரியிடை மாய்ந்த கனல்விழி யரக்கர்க் குலவாப் பொன்னுல கடைதர வைத்த சுந்தரக் கடவுள் ( 25-15-37 ) எனக் கல்லாடனாரும் கூறினும் எல்லாரும் இறைவாயிலின் கடைத் தலைக்கண் நின்றவரேயாவர் . புரமெரித்த அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயிற் கடைகாவல் கொண்டவா போற்றி ' ( போற்றித் திருக்கலி வெண்பா 28-30 ) எனப் பதினோராந்திருமுறையினும் வருதல் காண்க . கண்ணுதல் - கண்ணையுடைத்தாகிய நுதல் ( கோவை . 10 பேர் . ) மபப் கடைத்தலை - முதற்கோபுரவாயில் . கடைத்தலை நிற்றல் - இறை வன் அருள் பெற்று வாயில் காப்பவராய் நிற்றல் . நின்றதன் பின் மாண்டனர் என இயைக்க . மண்மிசை என்பதனை இந்திரர் பிரமர் களுக்கும் இயைக்க . பிருதிவி அண்டம் நூறுகோடி விரிவினையுடையதாகும் . அது பற்றி அண்டந்தோறும் இந்திரரும் பிரமரும் மாலவரும் பலராவர் என்க . மண்மிசைமால் என்பதற்குப் பூமியை உண்டமால் என்று உரைப் பாருமுளர் . அது பொருந்தாது . என்னை ? மண்மிசை என்பதற்குப் பிருதிவியண்டங்களில் என்பது பொருளாதலின் . பூமியை உண்டமால் ஒருவரன்றிப் பலரின்மையுமறிக . இந்திரர் பிரமர் மால் என்பவர் களின் கற்பகாலமாகிய வாழ்நாள் வேறுபாடுபற்றி எண்ணிலியிந்திரர் எத்தனையோ பிரமர்கள் மால்பலர் என அளவு வேறுபடக் கூறப் பட்டது . எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்கள் மால் பலர் மாண்டனர் என்க .