திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தோணோக்கம் "நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறுகோடி நாராயண ரங்ஙனே ஏறுகங்கை மண வெண்ணி லிந்திரர் ஈறிலாத நல் லீசனொருவனே' எனத் தேவாரத்து வருதல் காண்க. திரிபுரத்தசுரர் மூவரும் அணுக்கன் தொண்டராய் முதற்கோபுர வாயிலிற் காவலராய் அருள்பெற்று அழிவற்றவராக, சுவர்க்கலோக சத்தியலோக வைகுண்டலோக அதிபர்களான இந்திரர்களும் பிரமர் களும் மாலவர்களும் தம் வாழ்க்கை முடிவில் அழியவேண்டியவராயி னர் என்பது கருதியே இராக்கதர் கடைத்தலை நின்றதன்பின் இந் திரர் பிரமர்களும் மால்பலர் மாண்டனர் என்று அருளிச் செய்தார். 322 819 இதன்கண், "எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் மண் மிசை மால்பலர் மாண்டனர்" என்பதனால் பிரபஞ்ச சுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 9 பங்கய மாயிரம் பூவினிலோர் பூக்குறையத் தங்க ணிடந்தரன் சேவடி மேற் சாத்தலுமே சங்கர னெம்பிரான் சக்கரமாற் கருளியவா றெங்கும் பரவிநாம் தோணோக்க மாடாமோ. ப-ரை. ஆயிரம் பங்கயம் பூவினில் ஓர் பூ குறைய -ஆயிரந் தாமரை மலர்களில் ஒரு மலர் குறைவுபடுதலும், தம் கண் இடந்து- அவற்றோடொக்கும் தமது திருக்கண்களில் ஒன்றைத் தோண்டிஎடுத்து, அரன் சே அடிமேல் சாத்தலும் சிவபெருமானது திருவடியின் மீது சாத்திய அளவில், சங்கரன் எம்பிரான் - சங்கரனாகிய எம்மிறை வன், சக்கரம் மாற்கு அருளிய ஆறு - சக்கரப் படையிளைத் திருமாற் குக் கொடுத்தருளிய விதத்தை எங்கும் பரவி -எவ்விடத்திலும் புகழ்ந்து பேசிக்கொண்டு, தோணோக்கம் ஆடாமோ - தோணோக்கம் ஆடுவோமாக. ஆயிரம் தாமரை மலர்களில் ஒருமலர் குறைதலும் அக்குறையை நீக்கும் பொருட்டுத் திருமால் தன் கண்களில் ஒன்றைத் தோண்டி இறைவன் திருவடிமேல் சாத்துதலும், சங்கரனாகிய இறைவன் அத்திரு மாற்குச் சக்கரத்தைக் கொடுத்தருளிய விதத்தை எங்கும் புகழ்ந்து பேசிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக ாக என்பதாம். பங்கயம் - சேற்றில் முளைப்பது. பங்க+ஜம்; பங்கம் - சேறு. ஐம் - தோன்றுவது, வடமொழி. பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக்குறைய என்றது திருமால் சக்கரம் வேண்டி ஆயிரந் தாமரை மலர்களைக்
திருத்தோணோக்கம் நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறுகோடி நாராயண ரங்ஙனே ஏறுகங்கை மண வெண்ணி லிந்திரர் ஈறிலாத நல் லீசனொருவனே ' எனத் தேவாரத்து வருதல் காண்க . திரிபுரத்தசுரர் மூவரும் அணுக்கன் தொண்டராய் முதற்கோபுர வாயிலிற் காவலராய் அருள்பெற்று அழிவற்றவராக சுவர்க்கலோக சத்தியலோக வைகுண்டலோக அதிபர்களான இந்திரர்களும் பிரமர் களும் மாலவர்களும் தம் வாழ்க்கை முடிவில் அழியவேண்டியவராயி னர் என்பது கருதியே இராக்கதர் கடைத்தலை நின்றதன்பின் இந் திரர் பிரமர்களும் மால்பலர் மாண்டனர் என்று அருளிச் செய்தார் . 322 819 இதன்கண் எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் மண் மிசை மால்பலர் மாண்டனர் என்பதனால் பிரபஞ்ச சுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 9 பங்கய மாயிரம் பூவினிலோர் பூக்குறையத் தங்க ணிடந்தரன் சேவடி மேற் சாத்தலுமே சங்கர னெம்பிரான் சக்கரமாற் கருளியவா றெங்கும் பரவிநாம் தோணோக்க மாடாமோ . - ரை . ஆயிரம் பங்கயம் பூவினில் ஓர் பூ குறைய -ஆயிரந் தாமரை மலர்களில் ஒரு மலர் குறைவுபடுதலும் தம் கண் இடந்து அவற்றோடொக்கும் தமது திருக்கண்களில் ஒன்றைத் தோண்டிஎடுத்து அரன் சே அடிமேல் சாத்தலும் சிவபெருமானது திருவடியின் மீது சாத்திய அளவில் சங்கரன் எம்பிரான் - சங்கரனாகிய எம்மிறை வன் சக்கரம் மாற்கு அருளிய ஆறு - சக்கரப் படையிளைத் திருமாற் குக் கொடுத்தருளிய விதத்தை எங்கும் பரவி -எவ்விடத்திலும் புகழ்ந்து பேசிக்கொண்டு தோணோக்கம் ஆடாமோ - தோணோக்கம் ஆடுவோமாக . ஆயிரம் தாமரை மலர்களில் ஒருமலர் குறைதலும் அக்குறையை நீக்கும் பொருட்டுத் திருமால் தன் கண்களில் ஒன்றைத் தோண்டி இறைவன் திருவடிமேல் சாத்துதலும் சங்கரனாகிய இறைவன் அத்திரு மாற்குச் சக்கரத்தைக் கொடுத்தருளிய விதத்தை எங்கும் புகழ்ந்து பேசிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக ாக என்பதாம் . பங்கயம் - சேற்றில் முளைப்பது . பங்க + ஜம் ; பங்கம் - சேறு . ஐம் - தோன்றுவது வடமொழி . பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக்குறைய என்றது திருமால் சக்கரம் வேண்டி ஆயிரந் தாமரை மலர்களைக்