திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

486 திருவாசக ஆராய்ச்சியுரை நறுவீ யைம்பான் மகளிராடுந் தைஇத் தண்கயம் போலப் பலர் படிந்து" என ஐங்குறு நூற்றிலும். .. (ஐங். 84) (1191) (11 - 134) தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல் '” இன்ன பண்பி னின்றைந்நீ ராடன் எனப்பரிபாடலிலும் வருவன காண்க, அம்பாவாடலாகிய மார் கழி நீராட்டைத் தைந் நீராட்டாகக் கூறிய தென்னையெனின்; நாங்கள் வழங்கும் மாதங்கள் சௌரமாதம், சாந்திரமாதம் சாந் என இருவகைப்படும். சௌரமாதம் சூரிய சம்பந்தமானது. திரமாதம் சந்திரசம்பந்தமானது. சௌரமாதம் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்னும் பன்னிரண்டு இராசிகளிலும் சூரியன் காணப்படும் காலமாகிய மேடமாதம் முதலாகிய பன்னிரண்டுமாம். சாந்திர மாதங்களாவன; சௌரமாதமாகிய மீன மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்தநாள் தொடங்கி அடுத்த மாதத்தில் வரும் அமாவாசை முடியவுள்ள சைத்திரமும், இவ்வாறே அடுத்த அடுத்த சௌரமாதங்களில் வரும் அமாவாசைக்கு அடுத்தநாள் தொடங்குகின்ற வைசாகமும், ஜேட்டமும், ஆஷாடமும், சிராவண மும், பாத்திரவதமும், ஆஸ்வினமும், கார்த்திகயமும், மார்க்கசீரிஷ மும், புஷ்யமும், மாகமும், பால்குனமும் ஆகிய பன்னிரண்டுமாம், வடமொழிப் பெயர்களான இப்பன்னிரண்டும் தமிழ் மொழிக்கண் தற்டவமாயும், தற்சமமாயும், மறுபெயராயும் ஏற்றவாறு திரிந்து சித்திரை வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐப்பசி கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என வழங்குகின்றன. இப்பெயர்கள் ஒவ்வொரு சௌரமாதத்திலும் வகும் பூரணையோடு, தொடர்புடைய நட்சத்திரங்களின் பெயர்களால் வந்தனவாகும். இத்தொடர்பினாலேயே சௌரமாதமாகிய மேடம் முதலிய பன்னி ரண்டு மாதங்களையும் சித்திரை முதலிய சாந்திரமாதப் பெயரால் நம்முன்னோர் வழங்கி வருவாராயினர். அங்ஙனம் வழங்கி வந்தாலும் சௌரமாதமும், சாந்திர மாத மூம் வெவ்வேறானவை என்பதில் தடை யாதுமில்லை. இந்த முறை மையில் ஒவ்வொரு சௌரமாதத்திலும் வரும் அமாவாசை முடிய அதற்கு முந்திய சாந்திரமாதம் முடிவடையும் என்பதும், அடுத்த நாள் அடுத்த சாந்திரமாதம் தொடங்கும் என்பதும் அறியப்படும். இவ்விருவகை மாதங்களிலும் அவ்வம் மாதங்களுக்குரிய நாட்கணக் கின் வேறுபாட்டினால் சில சௌரமாதங்களில் பூரணை முன்னும் அமாவாசை பின்னும் வரலாம். இங்ஙனம் வருவதால் செளர
486 திருவாசக ஆராய்ச்சியுரை நறுவீ யைம்பான் மகளிராடுந் தைஇத் தண்கயம் போலப் பலர் படிந்து என ஐங்குறு நூற்றிலும் . .. ( ஐங் . 84 ) ( 1191 ) ( 11 - 134 ) தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல் ' இன்ன பண்பி னின்றைந்நீ ராடன் எனப்பரிபாடலிலும் வருவன காண்க அம்பாவாடலாகிய மார் கழி நீராட்டைத் தைந் நீராட்டாகக் கூறிய தென்னையெனின் ; நாங்கள் வழங்கும் மாதங்கள் சௌரமாதம் சாந்திரமாதம் சாந் என இருவகைப்படும் . சௌரமாதம் சூரிய சம்பந்தமானது . திரமாதம் சந்திரசம்பந்தமானது . சௌரமாதம் மேடம் இடபம் மிதுனம் கடகம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் என்னும் பன்னிரண்டு இராசிகளிலும் சூரியன் காணப்படும் காலமாகிய மேடமாதம் முதலாகிய பன்னிரண்டுமாம் . சாந்திர மாதங்களாவன ; சௌரமாதமாகிய மீன மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்தநாள் தொடங்கி அடுத்த மாதத்தில் வரும் அமாவாசை முடியவுள்ள சைத்திரமும் இவ்வாறே அடுத்த அடுத்த சௌரமாதங்களில் வரும் அமாவாசைக்கு அடுத்தநாள் தொடங்குகின்ற வைசாகமும் ஜேட்டமும் ஆஷாடமும் சிராவண மும் பாத்திரவதமும் ஆஸ்வினமும் கார்த்திகயமும் மார்க்கசீரிஷ மும் புஷ்யமும் மாகமும் பால்குனமும் ஆகிய பன்னிரண்டுமாம் வடமொழிப் பெயர்களான இப்பன்னிரண்டும் தமிழ் மொழிக்கண் தற்டவமாயும் தற்சமமாயும் மறுபெயராயும் ஏற்றவாறு திரிந்து சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாதி ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி என வழங்குகின்றன . இப்பெயர்கள் ஒவ்வொரு சௌரமாதத்திலும் வகும் பூரணையோடு தொடர்புடைய நட்சத்திரங்களின் பெயர்களால் வந்தனவாகும் . இத்தொடர்பினாலேயே சௌரமாதமாகிய மேடம் முதலிய பன்னி ரண்டு மாதங்களையும் சித்திரை முதலிய சாந்திரமாதப் பெயரால் நம்முன்னோர் வழங்கி வருவாராயினர் . அங்ஙனம் வழங்கி வந்தாலும் சௌரமாதமும் சாந்திர மாத மூம் வெவ்வேறானவை என்பதில் தடை யாதுமில்லை . இந்த முறை மையில் ஒவ்வொரு சௌரமாதத்திலும் வரும் அமாவாசை முடிய அதற்கு முந்திய சாந்திரமாதம் முடிவடையும் என்பதும் அடுத்த நாள் அடுத்த சாந்திரமாதம் தொடங்கும் என்பதும் அறியப்படும் . இவ்விருவகை மாதங்களிலும் அவ்வம் மாதங்களுக்குரிய நாட்கணக் கின் வேறுபாட்டினால் சில சௌரமாதங்களில் பூரணை முன்னும் அமாவாசை பின்னும் வரலாம் . இங்ஙனம் வருவதால் செளர