திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பிரமன் திருமால் என்ற இருவரும் தம் அறியாமையால் யாம் பரமம் யாம் பரமம் என்று தம்முட் கூறிப் போர்புரிந்த அவர்களது உள்ளத்துடிப்பு அடங்கும் வண்ணம் பரமசிவனார் அழலுருவாய் அங்கு அளவு கடந்து பரம்பொருளாகி நின்ற விதத்தினைப் பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம். 824 je in nalo என்ற இருவரும் - என்றிருவரும் என ஈறுகெட்டது. என்ற-என்று சொல்லப்படுகின்ற. பரமம் - மேலான பொருள். என்ற அவர்கள்- என்றவர்கள் என ஈறு கெட்டது. பதைப்பு - உள்ளத்துடிப்பு. என்றது யாமே பரம்பொருள் என்பதனை நிலைபெறச் செய்யும் பொருட்டு உள் ளத்திற்றோன்றுகின்ற எழுச்சி. அங்கு என்றது தம்முட் போர்செய்த பிரமன் அரி என்ற இருவருக்கும் மத்தியில் என்றவாறு. அளவிறத் தல் - அடி முடி அறியப்படாது நீண்டு செல்லுதல், பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் நின்றமை, அலரவனும் மாலவனும் அறியாமே யழலுருவாய் நிலமுதற் கீழ்அண்டமுற நின்றது தான் என்னேடீ நிலமுதற் கீழ்அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ" என இத் திருவாசகத்தும், (சாழல் 6) சேணியலு நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக் காணியல்பை யறிவிலராய்க் கனல் வண்ணரடியிணைக்கீழ் நாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே'' பைங்கண் வாளரவணையவனொடு பனிமலரோனுங் காணா அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்சிநின்றார். (ஞான.322-9) (ஞான.350-9) 'பேழ்வா யரவி னணையானும் பெரியமலர் மேலுறைவானும் தாழாதுன்றன் சரண்பணியத் தழலாய்நின்ற தத்துவனே (சுந்.52-8) எனத் தேவாரத்தும், "பிரமனும் மாலும் பிரானேநான் என்னப் பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே டரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரனடி தேடி யரற்றுகின்றாரே" எனத் திருமந்திரத்தும் வருவன காண்க. நின்றவாறு என்பது நின்றவா என ஈறு கெட்டது. இதனால் அயன் அரிகள் பரம்பொருள் அல்லர் என்பது தெரிவித்தவாறாம். (372) இதன்கண், "பதைப்பொடுங்க" என்பதனால் பிரபஞ்சசுத்தி என் னும் பதிகநுதலிய பொருள் போந்தவாறு காண்க. 12
திருவாசக ஆராய்ச்சியுரை பிரமன் திருமால் என்ற இருவரும் தம் அறியாமையால் யாம் பரமம் யாம் பரமம் என்று தம்முட் கூறிப் போர்புரிந்த அவர்களது உள்ளத்துடிப்பு அடங்கும் வண்ணம் பரமசிவனார் அழலுருவாய் அங்கு அளவு கடந்து பரம்பொருளாகி நின்ற விதத்தினைப் பாடிக்கொண்டு தோணோக்கம் ஆடுவோமாக என்பதாம் . 824 je in nalo என்ற இருவரும் - என்றிருவரும் என ஈறுகெட்டது . என்ற - என்று சொல்லப்படுகின்ற . பரமம் - மேலான பொருள் . என்ற அவர்கள் என்றவர்கள் என ஈறு கெட்டது . பதைப்பு - உள்ளத்துடிப்பு . என்றது யாமே பரம்பொருள் என்பதனை நிலைபெறச் செய்யும் பொருட்டு உள் ளத்திற்றோன்றுகின்ற எழுச்சி . அங்கு என்றது தம்முட் போர்செய்த பிரமன் அரி என்ற இருவருக்கும் மத்தியில் என்றவாறு . அளவிறத் தல் - அடி முடி அறியப்படாது நீண்டு செல்லுதல் பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் நின்றமை அலரவனும் மாலவனும் அறியாமே யழலுருவாய் நிலமுதற் கீழ்அண்டமுற நின்றது தான் என்னேடீ நிலமுதற் கீழ்அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ என இத் திருவாசகத்தும் ( சாழல் 6 ) சேணியலு நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக் காணியல்பை யறிவிலராய்க் கனல் வண்ணரடியிணைக்கீழ் நாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே ' ' பைங்கண் வாளரவணையவனொடு பனிமலரோனுங் காணா அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்சிநின்றார் . ( ஞான.322-9 ) ( ஞான.350-9 ) ' பேழ்வா யரவி னணையானும் பெரியமலர் மேலுறைவானும் தாழாதுன்றன் சரண்பணியத் தழலாய்நின்ற தத்துவனே ( சுந்.52-8 ) எனத் தேவாரத்தும் பிரமனும் மாலும் பிரானேநான் என்னப் பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே டரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரனடி தேடி யரற்றுகின்றாரே எனத் திருமந்திரத்தும் வருவன காண்க . நின்றவாறு என்பது நின்றவா என ஈறு கெட்டது . இதனால் அயன் அரிகள் பரம்பொருள் அல்லர் என்பது தெரிவித்தவாறாம் . ( 372 ) இதன்கண் பதைப்பொடுங்க என்பதனால் பிரபஞ்சசுத்தி என் னும் பதிகநுதலிய பொருள் போந்தவாறு காண்க . 12