திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 487 மாதமாகிய தனுமாதத்தில் அமாவாசை முன்னும் பூரணை பின்னும் வருமானால் அமாவாசைக்கு அடுத்த நாள் புஷ்யமாதம் (தைமாதம்) ஆகிய சாந்திர மாதம் தொடங்கிவிடும். எனவே அம்மாதத்துப் பூரணை விழவுடன் முடியும் ஆதிரை விழவும் அம்பாவாடலும் சாந் திர புஷ்ய மாதத்தில் வந்ததாகும். அதுபற்றியே பரிபாடல் முத லிய சங்க நூல்களில் புஷ்ய மாதத்தின் தமிழ்ப் பெயராகிய தை என்பதனோடு சேர்த்து அம்பாவாடல் தைந்நீர் எனப்பட்டது. இனி தனு மாதத்தில் பூரணை முன்னும் அமாவாசை பின்னும் வருமாயின் அம்மாதத்து அமாவாசை முடிய மார்க்க சீரிஷமாகிய சாந்திரமாதமும் முடிவடையும். அதற்குட்பட்ட பூரணையொடு தொடர்புடைய ஆதிரை விழவும் அதனோடு தொடங்கப்படும் அம் பாவாடலும் முடிவடையும். ஆகவே, மார்க்க சீரிஷத்தின் திரிவு பெயராகிய மார்கழி மாதத்தில் வந்த அம்பாவாடல் மார்கழி நீர் எனப்பட்டது. அடிகள் காலத்தில் அம்பாவாடல் மார்கழியில் வந்தமையால் அதனை "மார்கழி நீர் என அருளினர், பரிபாடல் முதலிய சங்க நூல்கள் பாடியகாலத்து புஷ்யமாகிய தையில் வந்தமையால் தைந்நீர் என்றனர். எனவே தனமாதத்தில் வரும் ஆதிரை நாளோடு முடி வடையும் அம்பாவாடல் சாந்திர மாதத்தொடர்பினால் சிலகாலத் துத் தைந்நீர் எனவும், சிலகாலத்து மார்கழி நீர் எனவும் வழங்குவதா யிற்று. இவற்றால் இவ்விரண்டும் ஒன்று என்பதே துணிபாகும். "
திருவெம்பாவை 487 மாதமாகிய தனுமாதத்தில் அமாவாசை முன்னும் பூரணை பின்னும் வருமானால் அமாவாசைக்கு அடுத்த நாள் புஷ்யமாதம் ( தைமாதம் ) ஆகிய சாந்திர மாதம் தொடங்கிவிடும் . எனவே அம்மாதத்துப் பூரணை விழவுடன் முடியும் ஆதிரை விழவும் அம்பாவாடலும் சாந் திர புஷ்ய மாதத்தில் வந்ததாகும் . அதுபற்றியே பரிபாடல் முத லிய சங்க நூல்களில் புஷ்ய மாதத்தின் தமிழ்ப் பெயராகிய தை என்பதனோடு சேர்த்து அம்பாவாடல் தைந்நீர் எனப்பட்டது . இனி தனு மாதத்தில் பூரணை முன்னும் அமாவாசை பின்னும் வருமாயின் அம்மாதத்து அமாவாசை முடிய மார்க்க சீரிஷமாகிய சாந்திரமாதமும் முடிவடையும் . அதற்குட்பட்ட பூரணையொடு தொடர்புடைய ஆதிரை விழவும் அதனோடு தொடங்கப்படும் அம் பாவாடலும் முடிவடையும் . ஆகவே மார்க்க சீரிஷத்தின் திரிவு பெயராகிய மார்கழி மாதத்தில் வந்த அம்பாவாடல் மார்கழி நீர் எனப்பட்டது . அடிகள் காலத்தில் அம்பாவாடல் மார்கழியில் வந்தமையால் அதனை மார்கழி நீர் என அருளினர் பரிபாடல் முதலிய சங்க நூல்கள் பாடியகாலத்து புஷ்யமாகிய தையில் வந்தமையால் தைந்நீர் என்றனர் . எனவே தனமாதத்தில் வரும் ஆதிரை நாளோடு முடி வடையும் அம்பாவாடல் சாந்திர மாதத்தொடர்பினால் சிலகாலத் துத் தைந்நீர் எனவும் சிலகாலத்து மார்கழி நீர் எனவும் வழங்குவதா யிற்று . இவற்றால் இவ்விரண்டும் ஒன்று என்பதே துணிபாகும் .