திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை *"பவமின்மை பிறவின்மை பற்றின்மை பெயரின்மை உவமையின்மை யொருவினை யின்மை குறைவிலறி வுடைமை கோத்திரமின்மையென் நிறைவ னிடத்தி லெண்குண மிவையே" எனப் பி கல நிகண்டில் வருதலுங் காண்க. இதன்கண். 'கருணையினால் நஞ்சுதனை ஊணாகவுண்டருளி, தேவர் குழாம் உய்ய ஆட்கொண்டருளும்" என்பதனால் அருட்சுத்தி பெறுமாறு காண்க. 5 834 232 (பிங்கல.2-6) மாதாடு பாகத்த னுத்தர கோசமங்கைத் தாதாடு கொன்றைச் சடையா னடியாருள் கோதாட்டி நாயேனை யாட்கொண்டென் தொல்பிறவித் தீதோடா வண்ணந் நிகழப் பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால் போதாடு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ. ப-ரை. போது ஆடு பூண்முலையீர் - மலர் மாலையசையும் பூண் கள் அணிந்த தனங்களையுடைய மங்கையர்களே, மாது ஆடு பாகத் தன் - உமையம்மை பொருந்திய இடப்பாகத்தையுடையவனும், உத் தரகோசமங்கை தாது ஆடு கொன்றை சடையான் - திருவுத்தர கோசமங்கையில் எழுந்தருளியிருக்கின்ற மகரந்தப்பொடியினையுடைய கொன்றை மலர்மாலையை யணிந்த சடையையுடையானும், அடி யாருள் நாயேனை கோதாட்டி ஆட்கொண்டு - தன்னடியார் நடுவுள் ஒன்றும் போதாநாயேனையும் பொருளாகக் கொண்டு ஆட்கொண் டருளி, என் தொல் பிறவி தீது ஓடாவண்ணம் திகழ பிறப்பு அறுப் பான் - என்னுடைய பழமையான பிறவித்துன்பத்தின்கண் ஓடிச் செல்லாவண்ணம் நான் விளங்க எனது பிறவியை அழித்தவனுமாகிய இறைவனது, காது ஆடு குண்டலங்கள் அன்பால் கசிந்து பாடி - திருச் செவியில் பொருந்திய அசைகின்ற குண்டலங்களை அன்பினால் உள் ளம் நெகிழ்ந்து பாடிக்கொண்டு, பொன்னூசல் ஆடாமோ-பொன் னூசலை ஆடுவோமாக. பூண்முலையீர், மாதாடு பாகத்தனும் திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கின்ற கொன்றைச் சடையையுடையவனும், அடி யாருள் நாயேனைக் கோதாட்டி ஆட்கொண்டருளிப் பழைய பிறவித் துன்பத்தின்கண் யான் ஓடிச் செல்லாவண்ணம் யான் விளங்கப் பிற வியை அறுப்பவனுமாகிய சிவபெருமானது, காதாடு குண்டலங்களை அன்பினால் உளங்கசிந்து பாடிக்கொண்டு பொன்னாசல் ஆடுவோமாக என்பதாம்.
திருவாசக ஆராய்ச்சியுரை * பவமின்மை பிறவின்மை பற்றின்மை பெயரின்மை உவமையின்மை யொருவினை யின்மை குறைவிலறி வுடைமை கோத்திரமின்மையென் நிறைவ னிடத்தி லெண்குண மிவையே எனப் பி கல நிகண்டில் வருதலுங் காண்க . இதன்கண் . ' கருணையினால் நஞ்சுதனை ஊணாகவுண்டருளி தேவர் குழாம் உய்ய ஆட்கொண்டருளும் என்பதனால் அருட்சுத்தி பெறுமாறு காண்க . 5 834 232 ( பிங்கல.2-6 ) மாதாடு பாகத்த னுத்தர கோசமங்கைத் தாதாடு கொன்றைச் சடையா னடியாருள் கோதாட்டி நாயேனை யாட்கொண்டென் தொல்பிறவித் தீதோடா வண்ணந் நிகழப் பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால் போதாடு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ . - ரை . போது ஆடு பூண்முலையீர் - மலர் மாலையசையும் பூண் கள் அணிந்த தனங்களையுடைய மங்கையர்களே மாது ஆடு பாகத் தன் - உமையம்மை பொருந்திய இடப்பாகத்தையுடையவனும் உத் தரகோசமங்கை தாது ஆடு கொன்றை சடையான் - திருவுத்தர கோசமங்கையில் எழுந்தருளியிருக்கின்ற மகரந்தப்பொடியினையுடைய கொன்றை மலர்மாலையை யணிந்த சடையையுடையானும் அடி யாருள் நாயேனை கோதாட்டி ஆட்கொண்டு - தன்னடியார் நடுவுள் ஒன்றும் போதாநாயேனையும் பொருளாகக் கொண்டு ஆட்கொண் டருளி என் தொல் பிறவி தீது ஓடாவண்ணம் திகழ பிறப்பு அறுப் பான் - என்னுடைய பழமையான பிறவித்துன்பத்தின்கண் ஓடிச் செல்லாவண்ணம் நான் விளங்க எனது பிறவியை அழித்தவனுமாகிய இறைவனது காது ஆடு குண்டலங்கள் அன்பால் கசிந்து பாடி - திருச் செவியில் பொருந்திய அசைகின்ற குண்டலங்களை அன்பினால் உள் ளம் நெகிழ்ந்து பாடிக்கொண்டு பொன்னூசல் ஆடாமோ - பொன் னூசலை ஆடுவோமாக . பூண்முலையீர் மாதாடு பாகத்தனும் திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கின்ற கொன்றைச் சடையையுடையவனும் அடி யாருள் நாயேனைக் கோதாட்டி ஆட்கொண்டருளிப் பழைய பிறவித் துன்பத்தின்கண் யான் ஓடிச் செல்லாவண்ணம் யான் விளங்கப் பிற வியை அறுப்பவனுமாகிய சிவபெருமானது காதாடு குண்டலங்களை அன்பினால் உளங்கசிந்து பாடிக்கொண்டு பொன்னாசல் ஆடுவோமாக என்பதாம் .