திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொன்னூசல் மாது - உமையம்மை. ஆடுதல் - பொருந்துதல், கொன்றைச் சடையான் - கொன்றைமாலையைச் சடைமுடியின் கண் உடையான் எனினுமாம். கொங்குலவு கொன்றைச் சடையான்." (ஊசல் 9) "தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்" (பூவல்லி 5) "தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான்" (திருவாரூர் மும். 20) தேனாருந் தண் பூங்கொன்றைச் செஞ்சடையவர்" (பெரிய, எறி பத். 57) என வருவனவுங் காண்க. அடியாருள் நாயேனைக் கோதாட்டி ஆட்கொண்டு என மாறிக் கூட்டிப்பொருள் கொள்க. கோதாட்டு தல் - பாராட்டத்தகாதவரைப் பாராட்டுதல். என் பிறவித் தீது ஓடாவண்ணம் என்றது என்பிறவித்துன்பத்தின்கண் மீட்டும் யான் ஓடிச்செல்லாவண்ணம் என்றவாறு. பிறவியறவே பிறவித் துன்பமும் அறுதலின் "தீதோடா வண்ணம் பிறப்பறுப்பான்" என்றார். "துறந் தவர் தம்மைப் பிறவியறுத்திடும் பித்தன் கண்டீரே' (திருமந்.1616). பாகத்தன் சடையான் பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடி என இயையும். இறைவன் குண்டலங்கள் ஆறு கட்டிகளையுடையன வாய் அமைந்திருக்கும். அவ்வாறுகட்டிகளும் ஆறு அத்துவாக்களைக் குறிப்பன என்பர், அத்துவாக்கள் ஆறும் உயிர்கள்போகங்களை அனுப வித்து மேற்கதியடைதற்கு வழியாகும். அன்பால் கசிந்துபாடி இயைக்க. போது - போதாலாகிய மாலையைக் குறித்தது. " என 835 இதன்கண், "அடியாருள் நாயேனை ஆட்கொண்டு பிறப்பறுப் பான்" என்பதனால் அருட்சுத்தி போந்தவாறு காண்க. 333 உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் அன்னத்தின் மேலேறி ஆடு மணிமயில்போல் என்னத்தன் என்னையுமாட் கொண்டான் எழில்பாடிப் பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசலாடாமோ. 6 ப-ரை. பூண் பொன் ஒத்த முலையீர் - ஆபரணங்களை அணிந்த பொன்னை ஒத்த தனங்களையுடைய மங்கையரே, திருவுத்தரகோச மங்கை மன்னி பொலிந்திருந்த -திருவுத்தரகோசமங்கையில் நிலை பெற்று அழகாக எழுந்தருளியிருக்கின்ற, உன்னற்கு அரிய மா மறை யோன் - நினைத்தற்கரிய பெருமையையுடைய அந்தணனும், தன்புகழே பன்னி பணிந்து இறைஞ்ச - தன் பொருள்சேர் புகழினைப்பாடிப் பணிந்து வணங்க, பாவங்கள் பற்று அறுப்பான் - அவர்களது தீவினை களைத் தொடர்பின்றி ஒழித்தருள்பவனும், என் அத்தன் - என்தத்தை யாயுள்ளவனும், என்னையும் ஆட்கொண்டான் - ஒன்றும் போதா நாயேனையும் அடிமை கொண்டவனுமாகிய இறைவனது, எழில்பாடி- பேரழகினைப் புகழ்ந்து பாடிக்கொண்டு, அன்னத்தின்மேல் ஏறி ஆடும்
திருப்பொன்னூசல் மாது - உமையம்மை . ஆடுதல் - பொருந்துதல் கொன்றைச் சடையான் - கொன்றைமாலையைச் சடைமுடியின் கண் உடையான் எனினுமாம் . கொங்குலவு கொன்றைச் சடையான் . ( ஊசல் 9 ) தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் ( பூவல்லி 5 ) தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் ( திருவாரூர் மும் . 20 ) தேனாருந் தண் பூங்கொன்றைச் செஞ்சடையவர் ( பெரிய எறி பத் . 57 ) என வருவனவுங் காண்க . அடியாருள் நாயேனைக் கோதாட்டி ஆட்கொண்டு என மாறிக் கூட்டிப்பொருள் கொள்க . கோதாட்டு தல் - பாராட்டத்தகாதவரைப் பாராட்டுதல் . என் பிறவித் தீது ஓடாவண்ணம் என்றது என்பிறவித்துன்பத்தின்கண் மீட்டும் யான் ஓடிச்செல்லாவண்ணம் என்றவாறு . பிறவியறவே பிறவித் துன்பமும் அறுதலின் தீதோடா வண்ணம் பிறப்பறுப்பான் என்றார் . துறந் தவர் தம்மைப் பிறவியறுத்திடும் பித்தன் கண்டீரே ' ( திருமந் .1616 ) . பாகத்தன் சடையான் பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடி என இயையும் . இறைவன் குண்டலங்கள் ஆறு கட்டிகளையுடையன வாய் அமைந்திருக்கும் . அவ்வாறுகட்டிகளும் ஆறு அத்துவாக்களைக் குறிப்பன என்பர் அத்துவாக்கள் ஆறும் உயிர்கள்போகங்களை அனுப வித்து மேற்கதியடைதற்கு வழியாகும் . அன்பால் கசிந்துபாடி இயைக்க . போது - போதாலாகிய மாலையைக் குறித்தது . என 835 இதன்கண் அடியாருள் நாயேனை ஆட்கொண்டு பிறப்பறுப் பான் என்பதனால் அருட்சுத்தி போந்தவாறு காண்க . 333 உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் அன்னத்தின் மேலேறி ஆடு மணிமயில்போல் என்னத்தன் என்னையுமாட் கொண்டான் எழில்பாடிப் பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசலாடாமோ . 6 - ரை . பூண் பொன் ஒத்த முலையீர் - ஆபரணங்களை அணிந்த பொன்னை ஒத்த தனங்களையுடைய மங்கையரே திருவுத்தரகோச மங்கை மன்னி பொலிந்திருந்த -திருவுத்தரகோசமங்கையில் நிலை பெற்று அழகாக எழுந்தருளியிருக்கின்ற உன்னற்கு அரிய மா மறை யோன் - நினைத்தற்கரிய பெருமையையுடைய அந்தணனும் தன்புகழே பன்னி பணிந்து இறைஞ்ச - தன் பொருள்சேர் புகழினைப்பாடிப் பணிந்து வணங்க பாவங்கள் பற்று அறுப்பான் - அவர்களது தீவினை களைத் தொடர்பின்றி ஒழித்தருள்பவனும் என் அத்தன் - என்தத்தை யாயுள்ளவனும் என்னையும் ஆட்கொண்டான் - ஒன்றும் போதா நாயேனையும் அடிமை கொண்டவனுமாகிய இறைவனது எழில்பாடி பேரழகினைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அன்னத்தின்மேல் ஏறி ஆடும்