திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

836 திருவாசக ஆராய்ச்சியுரை அணி மயில் போல் - அன்னப்பறவையின்மீது ஏறி ஆடுகின்ற அழகினை யுடைத்தாகிய மயிலைப்போல, பொன் ஊசல் ஆடாமோ -அன்னத் தின் வடிவாய் அமைந்த அழகிய ஊசலில் ஏறித் தோகைமயில் போல இருந்து ஆடுவோமாக. பூண் முலையீர் ! திருவுத்தரகோசமங்கையில் மன்னிப் பொலிந் திருந்த அந்தணனும், தன் புகழைப்பாடிப் பணிந்து வணங்கப் பாவங் களைப் பற்றறுப்பவனும், என் தந்தையாயுள்ளவனும், என்னையும் ஆட் கொண்டவனுமாகிய இறைவனது எழிலைப்பாடிக்கொண்டு அன்னத் தின் மேல் ஏறி ஆடும் அணிமயிலைப்போலப் பொன்னூசல் ஆடு வோமாக என்பதாம். உன்னற்கரிய மாமறையோன் என இயையும். உன்னற்கருமை பற்றிச் சொலற்கருமையும் உடன்உரைக்கப்பட்டது. பொலிவு-அழகு, இருந்த என இறந்த காலத்தாற் கூறினும் நிகழ்காலப் பொருள் கொள்க. பன்னுதல் - சொல்லுதல்; பாடுதல். பணிந்து இறைஞ்சுதல்- வீழ்ந்து வழிபடல். பற்று அறுத்தல் - தீவினைகளின் தொடர்பு இல்லா மல் செய்தல், "பணிந்தாரன பாலங்கள் பாற்றவல்லீர்" (தே. நாவு. I-3.) "பரவிநாடொறும் பாடுவார் வினைபற்றறுக்கும் பைஞ்ஞீலியீர்'" (சுந் 36-6) எனவும் வருவன காண்க. அன்னம் ஊசலுக்கும் அணி மயில் மகளிர்க்கும் உவமானம். ஊசற் பலகை அன்னவடிவாக அமைந் தமைபற்றி அன்னத்தின் மேலேறி என உவமை கூறினர். அன்னவடி வான ஊசல் ‘அன்ன ஊசல்' எனப்படும். அணிமயில் - தோகை பொருந்திய அழகிய மயில். மயில் போலும் சாயலையுடைய மகளிரா தலின் 'அணிமயில் போல்' என்றார். மகளிர் மயில் போலும் சாயலு டையராதலை, "மயில்கண் டன்ன மடநடை மகளிர்" "மயின் மயிற் குளிக்குஞ் சாயல்" "மயிலோ ரன்ன சாயல்'' "விளங்கிய லான் மயிலாம்'' (முருகு: 205) (சிறுபாண்.16) (நற்.301-4) (திருக்கோவை 29) என வருவனவற்றாலுமறிக. அத்தன் - பிதா; கடவுள். என்னையும் என் பதில் உம்மை இழிவு சிறப்பு. மாமறையோன் பற்றறுப்பான் அத் தன் ஆட்கொண்டான் எழில் பாடி என்க. எழில் - இறைவன் பேர ழகு பொன்னொத்த பூண் முலையென்றது மார்பகம் முழுவதும் பொற் பூண்கள் அணிந்திருத்தலின் பொற்றிரளை ஒத்துவிளங்கும் முலை. இனி பொன்னொத்த முலை என்பதற்குப் பொன்னை நிறத்தினால் ஒத்த முலை யெனினுமாம். மகளிர் பொன்போலும் மேனியராதல், '"பொன்போன் மேனி குறுமகள் (குறுந். 101:4-5) "பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்' குறுந், 319-6) ****
836 திருவாசக ஆராய்ச்சியுரை அணி மயில் போல் - அன்னப்பறவையின்மீது ஏறி ஆடுகின்ற அழகினை யுடைத்தாகிய மயிலைப்போல பொன் ஊசல் ஆடாமோ -அன்னத் தின் வடிவாய் அமைந்த அழகிய ஊசலில் ஏறித் தோகைமயில் போல இருந்து ஆடுவோமாக . பூண் முலையீர் ! திருவுத்தரகோசமங்கையில் மன்னிப் பொலிந் திருந்த அந்தணனும் தன் புகழைப்பாடிப் பணிந்து வணங்கப் பாவங் களைப் பற்றறுப்பவனும் என் தந்தையாயுள்ளவனும் என்னையும் ஆட் கொண்டவனுமாகிய இறைவனது எழிலைப்பாடிக்கொண்டு அன்னத் தின் மேல் ஏறி ஆடும் அணிமயிலைப்போலப் பொன்னூசல் ஆடு வோமாக என்பதாம் . உன்னற்கரிய மாமறையோன் என இயையும் . உன்னற்கருமை பற்றிச் சொலற்கருமையும் உடன்உரைக்கப்பட்டது . பொலிவு - அழகு இருந்த என இறந்த காலத்தாற் கூறினும் நிகழ்காலப் பொருள் கொள்க . பன்னுதல் - சொல்லுதல் ; பாடுதல் . பணிந்து இறைஞ்சுதல் வீழ்ந்து வழிபடல் . பற்று அறுத்தல் - தீவினைகளின் தொடர்பு இல்லா மல் செய்தல் பணிந்தாரன பாலங்கள் பாற்றவல்லீர் ( தே . நாவு . I - 3 . ) பரவிநாடொறும் பாடுவார் வினைபற்றறுக்கும் பைஞ்ஞீலியீர் ' ( சுந் 36-6 ) எனவும் வருவன காண்க . அன்னம் ஊசலுக்கும் அணி மயில் மகளிர்க்கும் உவமானம் . ஊசற் பலகை அன்னவடிவாக அமைந் தமைபற்றி அன்னத்தின் மேலேறி என உவமை கூறினர் . அன்னவடி வான ஊசல் அன்ன ஊசல் ' எனப்படும் . அணிமயில் - தோகை பொருந்திய அழகிய மயில் . மயில் போலும் சாயலையுடைய மகளிரா தலின் ' அணிமயில் போல் ' என்றார் . மகளிர் மயில் போலும் சாயலு டையராதலை மயில்கண் டன்ன மடநடை மகளிர் மயின் மயிற் குளிக்குஞ் சாயல் மயிலோ ரன்ன சாயல் ' ' விளங்கிய லான் மயிலாம் ' ' ( முருகு : 205 ) ( சிறுபாண் .16 ) ( நற்.301-4 ) ( திருக்கோவை 29 ) என வருவனவற்றாலுமறிக . அத்தன் - பிதா ; கடவுள் . என்னையும் என் பதில் உம்மை இழிவு சிறப்பு . மாமறையோன் பற்றறுப்பான் அத் தன் ஆட்கொண்டான் எழில் பாடி என்க . எழில் - இறைவன் பேர ழகு பொன்னொத்த பூண் முலையென்றது மார்பகம் முழுவதும் பொற் பூண்கள் அணிந்திருத்தலின் பொற்றிரளை ஒத்துவிளங்கும் முலை . இனி பொன்னொத்த முலை என்பதற்குப் பொன்னை நிறத்தினால் ஒத்த முலை யெனினுமாம் . மகளிர் பொன்போலும் மேனியராதல் ' பொன்போன் மேனி குறுமகள் ( குறுந் . 101 : 4-5 ) பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர் ' குறுந் 319-6 ) ****