திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொன்னூசல் தாழ்கடலின் மீதெழுந்து என்றதன் ஆற்றலால் கேவேடராகிச் கெளிறதுபடுத்தமையும், ஆகமம்வாங்கியமையும் சென்றமையும் அவற்றை அருளியமையுங் கொள்க. "கேவெட ராகிக் கெளிறது படுத்து மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந் துற்றவைம் முகங்களாற்பணித் தருளியும்'' 839 (கீர்த். 17-20) என வருதலுங் காண்க. ஞால மிக என்றது இறைவன் வாதவூரடிகளுக்காகக் குதிரை களோடு குதிரை மேற்கொண்டு எழுந்தருளிவந்து பாண்டியனுக்கு அக் குதிரைகளைக் கொடுத்த திருவிளையாடலால் பூவுலகு உயர்வடைய என்றவாறு. வந்து உண்டு மேற்கொண்டு ஆண்டான் என முடிக்க. சீலம் - நல்லொழுக்கம் சீலம் திகழும் உத்தரகோசமங்கை யென் றது நல்லொழுக்க நெறியினையுடையார் விளங்கியொழுகுகின்ற உத் தரகோசமங்கை என்றவாறு. ''சீலம் பெரிதும் இனிய திருவுத்தரகோச மங்கை" (குயில் 3) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க. மாலுக்கரியானை என்றது தேவத்தலைவருள் மிக்கோனாகிய திரு மாலுக்கும் அறிதற்கரிய சிவபெருமானை, (அண்ட. 182) (செத்.1) மாலறியாப் பெற்றியோனே" 'மாற்கறியொணாச் செய்யமேனியனே" என இத்திருவாசகத்தும் வருவன காண்க. வாயார நாம் பாடி என்றது இறைவனை வாயாரப் புகழ்ந்துபாடி என்றவாறு. 'வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி"(திருவெம்பா 15) என வருவன காண்க. பூலித்தல் - பூரித்தல், உடல் புளகித்தல், இதன் கண், "ஞால மிகப்பரிமேற் கொண்டு நம்மையாண்டான்" என்பதினால் அருட்சுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 335 8 தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கை தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமு மாட்கொள்வான் பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் குணம் பரவிப் பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ. ப-ரை. உலவு பூண் பொங்கு முலையீர் - அசைகின்ற பூண்கள் அணிந்த பூரித்த தனங்களையுடைய மங்கையர்களே, தெங்கு உலவு
திருப்பொன்னூசல் தாழ்கடலின் மீதெழுந்து என்றதன் ஆற்றலால் கேவேடராகிச் கெளிறதுபடுத்தமையும் ஆகமம்வாங்கியமையும் சென்றமையும் அவற்றை அருளியமையுங் கொள்க . கேவெட ராகிக் கெளிறது படுத்து மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந் துற்றவைம் முகங்களாற்பணித் தருளியும் ' ' 839 ( கீர்த் . 17-20 ) என வருதலுங் காண்க . ஞால மிக என்றது இறைவன் வாதவூரடிகளுக்காகக் குதிரை களோடு குதிரை மேற்கொண்டு எழுந்தருளிவந்து பாண்டியனுக்கு அக் குதிரைகளைக் கொடுத்த திருவிளையாடலால் பூவுலகு உயர்வடைய என்றவாறு . வந்து உண்டு மேற்கொண்டு ஆண்டான் என முடிக்க . சீலம் - நல்லொழுக்கம் சீலம் திகழும் உத்தரகோசமங்கை யென் றது நல்லொழுக்க நெறியினையுடையார் விளங்கியொழுகுகின்ற உத் தரகோசமங்கை என்றவாறு . ' ' சீலம் பெரிதும் இனிய திருவுத்தரகோச மங்கை ( குயில் 3 ) என அடிகள் பிறிதோரிடத்தும் கூறுதல் காண்க . மாலுக்கரியானை என்றது தேவத்தலைவருள் மிக்கோனாகிய திரு மாலுக்கும் அறிதற்கரிய சிவபெருமானை ( அண்ட . 182 ) ( செத் .1 ) மாலறியாப் பெற்றியோனே ' மாற்கறியொணாச் செய்யமேனியனே என இத்திருவாசகத்தும் வருவன காண்க . வாயார நாம் பாடி என்றது இறைவனை வாயாரப் புகழ்ந்துபாடி என்றவாறு . ' வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ( திருவெம்பா 15 ) என வருவன காண்க . பூலித்தல் - பூரித்தல் உடல் புளகித்தல் இதன் கண் ஞால மிகப்பரிமேற் கொண்டு நம்மையாண்டான் என்பதினால் அருட்சுத்தி என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 335 8 தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கை தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமு மாட்கொள்வான் பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் குணம் பரவிப் பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ . - ரை . உலவு பூண் பொங்கு முலையீர் - அசைகின்ற பூண்கள் அணிந்த பூரித்த தனங்களையுடைய மங்கையர்களே தெங்கு உலவு