திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை சோலை திருவுத்தரகோசமங்கை தங்கு - தென்னை மரங்கள் அசை கின்ற சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கைத் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, உலவு சோதி தனி உருவம் வந்தருளி - பரந்த ஒளிபொருந்திய ஒப்பற்ற திருவுருவத்தையுடைய இறைவன் வலிய எழுந்தருளி வந்து, எங்கள் பிறப்பு அறுத்திட்டு - எங்கள் பிறவித் துன்பத்தை நீக்கி, எந்தரமும் ஆட்கொள்வான் - தகுதியில்லாத எங் கள் நிலைமையிலும் ஆட்கொள்ளும் பொருட்டு, பங்கு உலவு கோதை யும் தானும் - தனது இடப்பக்கத்திற் பொருந்திய உமையம்மையும் தானுமாக, பணிகொண்ட - எங்களை ஏவல் கொண்டருளிய கொங்கு உலவு கொன்றை சடையான் குணம்பரவி - தாதுபொருந்திய கொன்றை மலர்மாலையை அணிந்த சடைமுடியையுடைய இறைவ னது இறைமைக் குணங்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டு, பொன்னூ சல் ஆடாமோ - பொன்னூசலை ஆடுவோமாக. 840 பூண்முலையீர்! திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கின்ற ஒளிபொருந்திய ஒப்பற்ற திருவுருவத்தையுடைய இறைவன் வலிய எழுந்தருளி வந்து எங்கள் பிறவித்துன்பத்தை நீக்கித் தகுதியில்லாத எங்கள் நிலைமையிலும் ஆட்கொள்ளும் பொருட்டு உமையம்மையும் தானுமாகப் பணிகொண்ட இறைவனது இறைமைக் குணங்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டு பொன்னூசல் ஆடுவோமாக என்பதாம். உலவுசோதித் தனி உருவம் என்றது பரந்த ஒளி பொருந்திய ஒப் பற்ற திருவுருவத்தையுடைய இறைவன் என்றவாறு. உலவுதல்- பரத்தல். இப்பொருட்டாதல் “கடலுலாய் நிமிர்தர"(சிறுபாண்.150) என்பதிலும் காண்க. எந்தரம் என்றது தகுதியில்லாத எங்கள் நிலைமையிலும் என்றவாறு. ஆட்கொள்வான்- ஆட்கொள்ளும் பொருட்டு, வானீற்று வினையெச்சம். பங்கு - இடப்பாகம்; கோதை- மாலை. ஈண்டு ஆகுபெயராய் உமையம்மையை உணர்த்திற்று, பங் குலவு கோதையும் தானும் பணிகொண்ட எனக்கூறினும் பங்குலவு கோதையாகிய திருவருட்சத்தி பதிந்த இடத்துத் தான் வெளிப் பட்டுப் பணிகொண்ட எனப்பொருள் உரைத்துக் கொள்க. கொன் றைச் சடையான் 'கமழ்கொன்றை துன்று மலங்கலைச் சூழ்ந்த சிற்றம் பலத்தான்'' (கோவை. 24) எனவருவன காண்க. பொங்குமுலை - மிக் கெழுகின்ற முலை எனினுமாம். இதன்கண், "தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட்டு எந் தரமும் ஆட்கொள்வான் பங்குலவு கோதையும் தானும் பணி கொண்ட" என்றதனால் அருட்சுத்தி போதருதல் காண்க. 9
திருவாசக ஆராய்ச்சியுரை சோலை திருவுத்தரகோசமங்கை தங்கு - தென்னை மரங்கள் அசை கின்ற சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கைத் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற உலவு சோதி தனி உருவம் வந்தருளி - பரந்த ஒளிபொருந்திய ஒப்பற்ற திருவுருவத்தையுடைய இறைவன் வலிய எழுந்தருளி வந்து எங்கள் பிறப்பு அறுத்திட்டு - எங்கள் பிறவித் துன்பத்தை நீக்கி எந்தரமும் ஆட்கொள்வான் - தகுதியில்லாத எங் கள் நிலைமையிலும் ஆட்கொள்ளும் பொருட்டு பங்கு உலவு கோதை யும் தானும் - தனது இடப்பக்கத்திற் பொருந்திய உமையம்மையும் தானுமாக பணிகொண்ட - எங்களை ஏவல் கொண்டருளிய கொங்கு உலவு கொன்றை சடையான் குணம்பரவி - தாதுபொருந்திய கொன்றை மலர்மாலையை அணிந்த சடைமுடியையுடைய இறைவ னது இறைமைக் குணங்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டு பொன்னூ சல் ஆடாமோ - பொன்னூசலை ஆடுவோமாக . 840 பூண்முலையீர் ! திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருக்கின்ற ஒளிபொருந்திய ஒப்பற்ற திருவுருவத்தையுடைய இறைவன் வலிய எழுந்தருளி வந்து எங்கள் பிறவித்துன்பத்தை நீக்கித் தகுதியில்லாத எங்கள் நிலைமையிலும் ஆட்கொள்ளும் பொருட்டு உமையம்மையும் தானுமாகப் பணிகொண்ட இறைவனது இறைமைக் குணங்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டு பொன்னூசல் ஆடுவோமாக என்பதாம் . உலவுசோதித் தனி உருவம் என்றது பரந்த ஒளி பொருந்திய ஒப் பற்ற திருவுருவத்தையுடைய இறைவன் என்றவாறு . உலவுதல் பரத்தல் . இப்பொருட்டாதல் கடலுலாய் நிமிர்தர ( சிறுபாண் .150 ) என்பதிலும் காண்க . எந்தரம் என்றது தகுதியில்லாத எங்கள் நிலைமையிலும் என்றவாறு . ஆட்கொள்வான்- ஆட்கொள்ளும் பொருட்டு வானீற்று வினையெச்சம் . பங்கு - இடப்பாகம் ; கோதை மாலை . ஈண்டு ஆகுபெயராய் உமையம்மையை உணர்த்திற்று பங் குலவு கோதையும் தானும் பணிகொண்ட எனக்கூறினும் பங்குலவு கோதையாகிய திருவருட்சத்தி பதிந்த இடத்துத் தான் வெளிப் பட்டுப் பணிகொண்ட எனப்பொருள் உரைத்துக் கொள்க . கொன் றைச் சடையான் ' கமழ்கொன்றை துன்று மலங்கலைச் சூழ்ந்த சிற்றம் பலத்தான் ' ' ( கோவை . 24 ) எனவருவன காண்க . பொங்குமுலை - மிக் கெழுகின்ற முலை எனினுமாம் . இதன்கண் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட்டு எந் தரமும் ஆட்கொள்வான் பங்குலவு கோதையும் தானும் பணி கொண்ட என்றதனால் அருட்சுத்தி போதருதல் காண்க . 9