திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அன்னைப்பத்து கண்ணஞ்சனத்தர் என்றது இறைவர் உமையொரு கூறர் ஆதல் பற்றியாகும். கருணைக்கடலினர் என்றது பேரருளாளர் என்றவாறு. "கருணை வெள்ளப்பிரான்" (கோத். 16) கருணைமா கடலே'' (பிடித். 2) என அடிகள் பிறாண்டும் அருளியமையுங்காண்க. உள்நின்று உருக்கி - உள்ளத்தில் நிலைபெற்று அதனை உருகச்செய்து, "உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா வானந்தக், கண்ணின்று காட்டிக் களிம் பறுத்தானே" எனத் திருமந்திரத்தும் (113) வருதல் காண்க. உலப்பு கேடு எனினுமாம். ஆனந்தக்கண்ணீர் - உண்ணின்று உருக்குதலால் உளதாகும் ஆனந்தம் பற்றிய கண்ணீர். தருவர் என்பது சொரியச் செய்வர் என்னும் பொருள் தந்து நின்றது. ஆல் -அசை. 843 இதன்கண், ''உண்ணின்றுருக்கி யுலப்பிலா வானந்தக் கண்ணீர் தருவர்' என்பதனால் ஆத்தும பூரணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 2 338 நித்த மணாளர் நிரம்ப வழகியர் சித்தத் திருப்பரால் அன்னே யென்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை அந்தரா னந்தரால் அன்னே யென்னும். ப-ரை. நித்த மணாளர் - எப்பொழுதும் மணவாளராயிருப் பவர்; நிரம்ப அழகியார் - மிகவும் அழகினையுடையவர்; சித்தத்து இருப்பர் - எனது மனத்திலே எப்பொழுதும் இருப்பர். அன்னே என் னும் - தாயே என்பாள்: சித்தத்து இருப்பவர் - அங்ஙனம் எனது மனத்தில் இருப்பவர், தென்னன் பெருந்துறை அத்தர் - தென் னாடுடையவரும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவரும் எமது தந்தையும், ஆனந்தர் - இன்பவுருவினருமாவர்; அன்னே என்னும்- தாயே என்பாள். எப்பொழுதும் மணவாளரும் மிக்க அழகினையுடையவருமாகிய இறைவர் எனது மனத்தில் எப்பொழுதும் இருப்பர்; தாயே என்பாள்; அங்ஙனம் எனது மனத்திலே இருப்பவர் தென்னாடுடையவரும் திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவரும் இன்பவுருவினருமாவர் தாயே என்பாள். நித்த மணாளர் - எப்பொழுதும் மணவாளராயிருப்பவர். "நிழ லார் சோலை நெடுங்களத்து நிலாய நித்தமணாளனை""மாசார் பாச மயக்கறுவித்தெனுள், நேசமாகிய நித்தமணாளனை" "நித்த மண வாளளென நிற்கின்றான் காண்" (நாவு. 15-7; 175-8; 265-5) எனத் தேவாரத்தும் வருவன காண்க. மணவாளர் என்பது மணாளர் என மரு வியது. இது இறைவரது மகேஸ்வர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் கலியாண சுந்தரமூர்த்தியைக் குறித்தது. நிரம்ப வழகியர் என்றது பேரழகினையுடையவர் என்றபடி, "பொங்கிய பேரழகு மிக" என பெரியபுராணத்து (காரைக் கால். 2) வருதலுங் காண்க.
அன்னைப்பத்து கண்ணஞ்சனத்தர் என்றது இறைவர் உமையொரு கூறர் ஆதல் பற்றியாகும் . கருணைக்கடலினர் என்றது பேரருளாளர் என்றவாறு . கருணை வெள்ளப்பிரான் ( கோத் . 16 ) கருணைமா கடலே ' ' ( பிடித் . 2 ) என அடிகள் பிறாண்டும் அருளியமையுங்காண்க . உள்நின்று உருக்கி - உள்ளத்தில் நிலைபெற்று அதனை உருகச்செய்து உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா வானந்தக் கண்ணின்று காட்டிக் களிம் பறுத்தானே எனத் திருமந்திரத்தும் ( 113 ) வருதல் காண்க . உலப்பு கேடு எனினுமாம் . ஆனந்தக்கண்ணீர் - உண்ணின்று உருக்குதலால் உளதாகும் ஆனந்தம் பற்றிய கண்ணீர் . தருவர் என்பது சொரியச் செய்வர் என்னும் பொருள் தந்து நின்றது . ஆல் -அசை . 843 இதன்கண் ' ' உண்ணின்றுருக்கி யுலப்பிலா வானந்தக் கண்ணீர் தருவர் ' என்பதனால் ஆத்தும பூரணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 2 338 நித்த மணாளர் நிரம்ப வழகியர் சித்தத் திருப்பரால் அன்னே யென்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை அந்தரா னந்தரால் அன்னே யென்னும் . - ரை . நித்த மணாளர் - எப்பொழுதும் மணவாளராயிருப் பவர் ; நிரம்ப அழகியார் - மிகவும் அழகினையுடையவர் ; சித்தத்து இருப்பர் - எனது மனத்திலே எப்பொழுதும் இருப்பர் . அன்னே என் னும் - தாயே என்பாள் : சித்தத்து இருப்பவர் - அங்ஙனம் எனது மனத்தில் இருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர் - தென் னாடுடையவரும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவரும் எமது தந்தையும் ஆனந்தர் - இன்பவுருவினருமாவர் ; அன்னே என்னும் தாயே என்பாள் . எப்பொழுதும் மணவாளரும் மிக்க அழகினையுடையவருமாகிய இறைவர் எனது மனத்தில் எப்பொழுதும் இருப்பர் ; தாயே என்பாள் ; அங்ஙனம் எனது மனத்திலே இருப்பவர் தென்னாடுடையவரும் திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவரும் இன்பவுருவினருமாவர் தாயே என்பாள் . நித்த மணாளர் - எப்பொழுதும் மணவாளராயிருப்பவர் . நிழ லார் சோலை நெடுங்களத்து நிலாய நித்தமணாளனை மாசார் பாச மயக்கறுவித்தெனுள் நேசமாகிய நித்தமணாளனை நித்த மண வாளளென நிற்கின்றான் காண் ( நாவு . 15-7 ; 175-8 ; 265-5 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . மணவாளர் என்பது மணாளர் என மரு வியது . இது இறைவரது மகேஸ்வர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் கலியாண சுந்தரமூர்த்தியைக் குறித்தது . நிரம்ப வழகியர் என்றது பேரழகினையுடையவர் என்றபடி பொங்கிய பேரழகு மிக என பெரியபுராணத்து ( காரைக் கால் . 2 ) வருதலுங் காண்க .