திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை சித்தத்து இருப்பவர்-மனத்தில் இருப்பவர்."பத்தர் சித்தம் பற்று விடாதவனே" (தே.ஞான். 50-10) என வருதலுங் காண்க. தென் னன் - தென்னாடுடைய சிவன். மற்றைய இடங்களில் உயர்வுபற்றி அர் விகுதி கொடுத்து, இங்கே தென்னன் என அன் விகுதி கொடுத் தது பொருள் மயங்காமைப்பொருட்டு. அத்தர் தந்தை. "தாதையு மத்தனுந் தந்தையும் பிதாவு, மையனு மீன் றோன் றன் பெயராகும்" என்பது பிங்கலந்தை 182. 844 இதன்கண், 'சித்தத் திருப்பர் பெருந்துறை அத்தர் ஆனந்தர்'' என்பவற்றால் ஆத்தும பூரணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 3 339 ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடமி ருந்தவா றன்னே யென்னும் வேடமி ருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் இாடுமிது வென்னே அன்னே யென்னும். ப - ரை. ஆடு அர பூண் - ஆடுகின்ற பாம்பாகிய அணிகலனை யுடையதும், தோல் உடை- புலித்தோலாகிய உடையினையுடையதும், பொடி பூசிற்று திருவெண்ணீறாகிய பூச்சினை யுடையதுமாகிய, ஓர் வேடம் இருந்த ஆறு - ஒப்பற்ற திருக்கோலம் இருந்த தன் மையினை என்னென்பேன்; என்னும் - தாயே என்பாள்; வேடம் இருந்த ஆ கண்டு கண்டு திருக்கோலம் இருந்த விதத் தைப்பார்த்துப் பார்த்து, என் உள்ளம் வாடும் - எனது மனமானது வாடுகின்றது, இது என்னே -- இஃது எதனாலே, அன்னே என்னும் தாயே என்பாள். அன்னே = ஆடரப் பூணினையுடையதும், புலித்தோலையுடையதும், வெண் பொடிப் பூச்சினையுடையதுமாகிய ஒப்பற்ற வேடம் இருந்த தன்மை யினை என்னென்பேன் தாயே என்பாள்; அவ்வேடம் இருந்த விதத் தைப் பார்த்துப் பார்த்து என் மனம் வாடுகின்றது இஃது எதனால் தாயே என்பாள் என்பதாம். அரா என்பது அர எனக் குறுகி நின்றது. அரப்பூண் - அரவாகிய பூண். "புற்றரவே ஆடையுமாய்ப் பூணுமாகி" (தே.நா. 298-6) என வருதல் காண்க, உடைத்தோல் என்பதனை தோல் உடை என மாற்றி புலித்தோல் உடை எனப் பொருள்கொள்க. 'அரை பொரு புலியதள் உடையினன்" "கொல்புலித் தோலாடை யான் ' '(தே.ஞா. 19-6; 182-4) என வருவன காண்க. தோல் எனப் பொதுப்படக் கொள்ளப்படும். "மான் கூறியதனால் மான்தோல் உடையும் தோல் உடையா மகிழ்ந்தார்போலும்'' (234-7) என அப்பரடிகள் அருளியமையுங் காண்க. வெண்பொடியாகிய திருநீறு பொடி -
திருவாசக ஆராய்ச்சியுரை சித்தத்து இருப்பவர் - மனத்தில் இருப்பவர் . பத்தர் சித்தம் பற்று விடாதவனே ( தே.ஞான் . 50-10 ) என வருதலுங் காண்க . தென் னன் - தென்னாடுடைய சிவன் . மற்றைய இடங்களில் உயர்வுபற்றி அர் விகுதி கொடுத்து இங்கே தென்னன் என அன் விகுதி கொடுத் தது பொருள் மயங்காமைப்பொருட்டு . அத்தர் தந்தை . தாதையு மத்தனுந் தந்தையும் பிதாவு மையனு மீன் றோன் றன் பெயராகும் என்பது பிங்கலந்தை 182 . 844 இதன்கண் ' சித்தத் திருப்பர் பெருந்துறை அத்தர் ஆனந்தர் ' ' என்பவற்றால் ஆத்தும பூரணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 3 339 ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடமி ருந்தவா றன்னே யென்னும் வேடமி ருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் இாடுமிது வென்னே அன்னே யென்னும் . - ரை . ஆடு அர பூண் - ஆடுகின்ற பாம்பாகிய அணிகலனை யுடையதும் தோல் உடை- புலித்தோலாகிய உடையினையுடையதும் பொடி பூசிற்று திருவெண்ணீறாகிய பூச்சினை யுடையதுமாகிய ஓர் வேடம் இருந்த ஆறு - ஒப்பற்ற திருக்கோலம் இருந்த தன் மையினை என்னென்பேன் ; என்னும் - தாயே என்பாள் ; வேடம் இருந்த கண்டு கண்டு திருக்கோலம் இருந்த விதத் தைப்பார்த்துப் பார்த்து என் உள்ளம் வாடும் - எனது மனமானது வாடுகின்றது இது என்னே -- இஃது எதனாலே அன்னே என்னும் தாயே என்பாள் . அன்னே = ஆடரப் பூணினையுடையதும் புலித்தோலையுடையதும் வெண் பொடிப் பூச்சினையுடையதுமாகிய ஒப்பற்ற வேடம் இருந்த தன்மை யினை என்னென்பேன் தாயே என்பாள் ; அவ்வேடம் இருந்த விதத் தைப் பார்த்துப் பார்த்து என் மனம் வாடுகின்றது இஃது எதனால் தாயே என்பாள் என்பதாம் . அரா என்பது அர எனக் குறுகி நின்றது . அரப்பூண் - அரவாகிய பூண் . புற்றரவே ஆடையுமாய்ப் பூணுமாகி ( தே.நா. 298-6 ) என வருதல் காண்க உடைத்தோல் என்பதனை தோல் உடை என மாற்றி புலித்தோல் உடை எனப் பொருள்கொள்க . ' அரை பொரு புலியதள் உடையினன் கொல்புலித் தோலாடை யான் ' ' ( தே.ஞா. 19-6 ; 182-4 ) என வருவன காண்க . தோல் எனப் பொதுப்படக் கொள்ளப்படும் . மான் கூறியதனால் மான்தோல் உடையும் தோல் உடையா மகிழ்ந்தார்போலும் ' ' ( 234-7 ) என அப்பரடிகள் அருளியமையுங் காண்க . வெண்பொடியாகிய திருநீறு பொடி -