திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அன்னைப்பத்து பொடிப் பூசிற்று - பொடியாகிய பூச்சினையுடையது. பூசிற்று என்ற குறிப்புவினையின் ஆற்றலால் பூண் என்பதற்குப் பூணையுடையது என வும் உடை என்பதற்கு உடையையுடையது எனவும் குறிப்புவினை முற்றுப்பொருள் புலப்பட விரித்துரைக்கப்பட்டது. 845 இருந்தவாறு என்பது இருந்தவா என ஈறுகெட்டது. இருந்த வாறு என்றதன் ஆற்றலால் என்னென்பேன் என்பது வருவிக்கப்பட் டது. வாடும் என்பது செய்யுமென்னும் முற்று. என்னே - ஏகாரம் வினா. வியப்புமாகும். ஆடரப் பூணினையும் தோல் உடையினையும் வெண்பொடிப் பூச் சினையுமுடைய ஒப்பற்ற திருக்கோலம் இருந்த விதத்தை என்னென் பேன் என இறைவன் திருக்கோலத்தை எடுத்தியம்பிய மங்கை அத னைக் கண்டு கண்டு என் உள்ளம் வாடுகின்றதே! இஃது என்னையோ? வென வினாவுமுகத்தால் தனது அவாவினை வெளியிடுவாளாயினள். இதனால் "அன்னையை நோக்கிக் கூறும் பெண் பருவமங்கை என்பது போதரும். அரப்பூண் உலகினை இயக்கும் ஆற்றலையும், தோலுடை காக்கும் ஆற்றலையும், பொடிப்பூச்சு ஒடுக்க ஆற்றலையும் குறிக்கும். முழுமுதல் இறைவனின் பெருந்தன்மைகளை நினைத்து அவனை அடைதல் கூடுமோ வென உள்ளம் வாடியது. 340 இதன்கண், "வேடம் இருந்தவா கண்டு கண்டு என் உள்ளம் வாடு மிது வென்னே'' என்பதனால் ஆத்தும பூரணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 4 நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டிநன் னாடரால் அன்னே யென்னும் பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வரால் அன்னே யென்னும். ப -ரை. நீண்ட கரத்தர் - வேண்டுவார் வேண்டுவதை ஈந் தருளும் நீண்டதிருக்கரங்களை உடையவர்; நெறிதரு குஞ்சியர் - நெறிப் புப் பொருந்திய சடை மயிரினையுடையவர்; அன்னே என்னும் -தாயே என்பாள்; நல் பாண்டி நாடர் -நல்ல பாண்டிநாட்டையுடைய அவ் விறைவர், பரந்து எழு சிந்தையை ஆண்டு அன்பு செய்வர் - பரவி எழுந்து செல்கின்ற உள்ளத்தினை ஆண்டருளி அவ்வுள்ளத்தினிடத்து அன்பு உண்டாகும்படி செய்தருளுவார்: அன்னே என்னும் -தாயே! என்பாள்.
அன்னைப்பத்து பொடிப் பூசிற்று - பொடியாகிய பூச்சினையுடையது . பூசிற்று என்ற குறிப்புவினையின் ஆற்றலால் பூண் என்பதற்குப் பூணையுடையது என வும் உடை என்பதற்கு உடையையுடையது எனவும் குறிப்புவினை முற்றுப்பொருள் புலப்பட விரித்துரைக்கப்பட்டது . 845 இருந்தவாறு என்பது இருந்தவா என ஈறுகெட்டது . இருந்த வாறு என்றதன் ஆற்றலால் என்னென்பேன் என்பது வருவிக்கப்பட் டது . வாடும் என்பது செய்யுமென்னும் முற்று . என்னே - ஏகாரம் வினா . வியப்புமாகும் . ஆடரப் பூணினையும் தோல் உடையினையும் வெண்பொடிப் பூச் சினையுமுடைய ஒப்பற்ற திருக்கோலம் இருந்த விதத்தை என்னென் பேன் என இறைவன் திருக்கோலத்தை எடுத்தியம்பிய மங்கை அத னைக் கண்டு கண்டு என் உள்ளம் வாடுகின்றதே ! இஃது என்னையோ ? வென வினாவுமுகத்தால் தனது அவாவினை வெளியிடுவாளாயினள் . இதனால் அன்னையை நோக்கிக் கூறும் பெண் பருவமங்கை என்பது போதரும் . அரப்பூண் உலகினை இயக்கும் ஆற்றலையும் தோலுடை காக்கும் ஆற்றலையும் பொடிப்பூச்சு ஒடுக்க ஆற்றலையும் குறிக்கும் . முழுமுதல் இறைவனின் பெருந்தன்மைகளை நினைத்து அவனை அடைதல் கூடுமோ வென உள்ளம் வாடியது . 340 இதன்கண் வேடம் இருந்தவா கண்டு கண்டு என் உள்ளம் வாடு மிது வென்னே ' ' என்பதனால் ஆத்தும பூரணம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 4 நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டிநன் னாடரால் அன்னே யென்னும் பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வரால் அன்னே யென்னும் . -ரை . நீண்ட கரத்தர் - வேண்டுவார் வேண்டுவதை ஈந் தருளும் நீண்டதிருக்கரங்களை உடையவர் ; நெறிதரு குஞ்சியர் - நெறிப் புப் பொருந்திய சடை மயிரினையுடையவர் ; அன்னே என்னும் -தாயே என்பாள் ; நல் பாண்டி நாடர் -நல்ல பாண்டிநாட்டையுடைய அவ் விறைவர் பரந்து எழு சிந்தையை ஆண்டு அன்பு செய்வர் - பரவி எழுந்து செல்கின்ற உள்ளத்தினை ஆண்டருளி அவ்வுள்ளத்தினிடத்து அன்பு உண்டாகும்படி செய்தருளுவார் : அன்னே என்னும் -தாயே ! என்பாள் .