திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இறைவர் நீண்டதிருக்கரத்தையுடையவர்; நெறித்த குஞ்சியை யுடையவர்; பாண்டிநாட்டையுடையவர், தாயே என்பாள்; பாண்டி நாட்டையுடைய அவ்விறைவர் பரந்து எழுகின்ற எனது உள்ளத்தினை ஆண்டருளி அதனிடத்துத் தன்பால் அன்பு உண்டாகும் வண்ணம் செய்தருளுவர் தாயே என்பாள் என்பதாம். 846 நீண்ட கரம் - முழந்தாளிலே பொருந்திய நீண்டகை "தாடோய் தடக்கை'' (புற. 90-10) என வருதலும் காண்க. இது புருஷரின் உத் தம இலக்கணத்தைக் குறிப்பதாகும். இதனை ஆஜானுபாகு என்பர் வட நூலார். நீண்டகரத்தர் கொடையாளராயிருப்பது இயல்பாதலின் "வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருளும்" என்பது வருவிக்கப்பட் டது. "வேண்டுவார் வேண்டுவதே யீவான் கண்டாய்" எனத் தேவா ரத்து (நாவு.236-1) வருதலுங் காண்க. நெறிதருகுஞ்சி - நெறிப்புப்பொருந்திய சடைமயிர். குஞ்சி -ஆண் மயிர். இதனை. கஞ்சிதேய்ப் புண்டகில் கமழும் பூந்துகில் வஞ்சிதேய்ப் புண்டன மருங்குலாரடி பஞ்சிதேய்ப் புண்டன பணியத் தாக்கலாற் குஞ்சிதேய்ப் புண்டன குமரர் கூட்டமே" (நாட்டுப்.50) எனக் கந்தபுராணத்து வருதலானுமறிக. 'குஞ்சி பித்தை யோரி குழல்கார், பங்கி கேசஞ் சுரியல் கதுப்புத், தளைநவிர் பிச்சஞ் சிகை யாண் பான்மயிர்" எனப் பிங்கலந்தையில் வருதலுங்காண்க. பரந்தெழு சிந்தை- பொறிவாயிலாகப் புலன்கள் தொறும் விரிந்து எழுந்து செல்கின்ற உள்ளம். ஆண்டு என்றது அதனை அடக்கி ஆண்டு என்றவாறு. இதன் கண், "பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வர்" என்பத னால் ஆத்துமபூரணம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 1604 341 உன்னற் கரியசீ ருத்தர மங்கையர் மன்னுவ தென்னெஞ்சில் அன்னே யென்னும் மன்னுவ தென்னெஞ்சில் மாலயன் காண்கிலார் என்ன அதிசயம் அன்னே யென்னும். 5 ப .ரை: உன்னற்கு அரியசீர் உத்தர மங்கையர் - நினைத்தற்கரிய புகழினையுடைய திருவுத்தரகோசமங்கையையுடையவர், மன்னுவது என் நெஞ்சில் -நிலைபெற்று எழுந்தருளியிருப்பது என் உள்ளத்திலா கும். அன்னே என்னும் - தாயே என்பாள்; மன்னுவது என் நெஞ்சில்- அவ்விறைவர் நிலைபெற்று எழுந்தருளியிருப்பது அடியேனது உள்
திருவாசக ஆராய்ச்சியுரை இறைவர் நீண்டதிருக்கரத்தையுடையவர் ; நெறித்த குஞ்சியை யுடையவர் ; பாண்டிநாட்டையுடையவர் தாயே என்பாள் ; பாண்டி நாட்டையுடைய அவ்விறைவர் பரந்து எழுகின்ற எனது உள்ளத்தினை ஆண்டருளி அதனிடத்துத் தன்பால் அன்பு உண்டாகும் வண்ணம் செய்தருளுவர் தாயே என்பாள் என்பதாம் . 846 நீண்ட கரம் - முழந்தாளிலே பொருந்திய நீண்டகை தாடோய் தடக்கை ' ' ( புற . 90-10 ) என வருதலும் காண்க . இது புருஷரின் உத் தம இலக்கணத்தைக் குறிப்பதாகும் . இதனை ஆஜானுபாகு என்பர் வட நூலார் . நீண்டகரத்தர் கொடையாளராயிருப்பது இயல்பாதலின் வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருளும் என்பது வருவிக்கப்பட் டது . வேண்டுவார் வேண்டுவதே யீவான் கண்டாய் எனத் தேவா ரத்து ( நாவு.236-1 ) வருதலுங் காண்க . நெறிதருகுஞ்சி - நெறிப்புப்பொருந்திய சடைமயிர் . குஞ்சி -ஆண் மயிர் . இதனை . கஞ்சிதேய்ப் புண்டகில் கமழும் பூந்துகில் வஞ்சிதேய்ப் புண்டன மருங்குலாரடி பஞ்சிதேய்ப் புண்டன பணியத் தாக்கலாற் குஞ்சிதேய்ப் புண்டன குமரர் கூட்டமே ( நாட்டுப் .50 ) எனக் கந்தபுராணத்து வருதலானுமறிக . ' குஞ்சி பித்தை யோரி குழல்கார் பங்கி கேசஞ் சுரியல் கதுப்புத் தளைநவிர் பிச்சஞ் சிகை யாண் பான்மயிர் எனப் பிங்கலந்தையில் வருதலுங்காண்க . பரந்தெழு சிந்தை- பொறிவாயிலாகப் புலன்கள் தொறும் விரிந்து எழுந்து செல்கின்ற உள்ளம் . ஆண்டு என்றது அதனை அடக்கி ஆண்டு என்றவாறு . இதன் கண் பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வர் என்பத னால் ஆத்துமபூரணம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 1604 341 உன்னற் கரியசீ ருத்தர மங்கையர் மன்னுவ தென்னெஞ்சில் அன்னே யென்னும் மன்னுவ தென்னெஞ்சில் மாலயன் காண்கிலார் என்ன அதிசயம் அன்னே யென்னும் . 5 .ரை : உன்னற்கு அரியசீர் உத்தர மங்கையர் - நினைத்தற்கரிய புகழினையுடைய திருவுத்தரகோசமங்கையையுடையவர் மன்னுவது என் நெஞ்சில் -நிலைபெற்று எழுந்தருளியிருப்பது என் உள்ளத்திலா கும் . அன்னே என்னும் - தாயே என்பாள் ; மன்னுவது என் நெஞ்சில் அவ்விறைவர் நிலைபெற்று எழுந்தருளியிருப்பது அடியேனது உள்