திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அன்னைப்பத்து ளத்திலாயினும், மால் அயன் காண்கிலார் - அவரைத் திருமாலும் பிரமனும் காணமாட்டாராயினர். என்ன அதிசயம் - இஃது என்ன வியப்பு; அன்னே என்னும் - தாயே என்பாள். திருவுத்தரகோசமங்கைப்பதியிலுள்ள இறைவன் நிலைபெற்று எழுந்தருளியிருப்பது என் மனத்திலாகும், தாயே என்பாள். அவ் விறைவன் நிலைபெற்று எழுந்தருளியிருப்பது அடியேன் உள்ளத்திலா யினும் திருமாலும் பிரமனும் காணமாட்டாதவராயினர். இஃது என்ன அதிசயம்! தாயே, என்பாள் என்பதாம். உன்னற்கரிய என்பதனாற் சொல்லுதற்கரிய என்பதும் கொள் ளப்படும். உன்னற்கரிய சீர் என்பது உத்தரகோசமங்கையிலுள்ளா ரோடியையும். சீர்-புகழ். உத்தரகோசமங்கை என்பது உத்தர மங்கை எனக் குறுகியது. உத்தரகோசமங்கைப் பதியையுடையார் அதனை விடுத்து என்நெஞ்சிலேயே நிலைபெற்றிருப்பாராயினர் என இறைவன் தம்பாலியைந்து அருளுமாற்றைக் கூறிய நயம் வியக்கத்தக் கது. மன்னுவது என்நெஞ்சில் என்றஆற்றலால் அவர் பொருந்தியிருப் பது என் நெஞ்சிலாயினும் எனப் பொருளுரைக்கப்பட்டது. மால் அயன் காணாமை தற்போதமுண்மையால் என்க. 'காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங் கடிகமலத் திருந்தயனுங் காணாவண்ணம், சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளியை' 847 என வருவனவுங் காண்க. (தே.நா.214-10) இதன்கண், "உத்தர மங்கையர் மன்னுவது என்நெஞ்சில்" என்பதனால் ஆத்துமபூரணம் என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க. 342 வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர் பள்ளிக்குப் பாமத்தர் அன்னே யென்னும் பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென் உள்ளங் கவர்வரால் அன்னே யென்னும். ப-ரை : வெள்ளை கலிங்கத்தர் - இறைவர் வெண்மையான ஆடை யைத் தரித்தவரும்; வெண் திரு முண்டத்தர் - வெண்மையாகிய அழ கிய முக்குறியாகத் தரிக்கப்பட்ட திருநீற்றுப் பூச்சினையுடையவரும், பள்ளிகுப்பாயத்தர் - அறிதுயில் செய்யும் திருமாலின் தோலாகிய சட்டையையுடையவருமாவர். அன்னே என்னும் - தாயே என்பாள். பள்ளி குப்பாயத்தர் பாய் பரி மேல் கொண்டு - அறி துயில் செய்யும்
அன்னைப்பத்து ளத்திலாயினும் மால் அயன் காண்கிலார் - அவரைத் திருமாலும் பிரமனும் காணமாட்டாராயினர் . என்ன அதிசயம் - இஃது என்ன வியப்பு ; அன்னே என்னும் - தாயே என்பாள் . திருவுத்தரகோசமங்கைப்பதியிலுள்ள இறைவன் நிலைபெற்று எழுந்தருளியிருப்பது என் மனத்திலாகும் தாயே என்பாள் . அவ் விறைவன் நிலைபெற்று எழுந்தருளியிருப்பது அடியேன் உள்ளத்திலா யினும் திருமாலும் பிரமனும் காணமாட்டாதவராயினர் . இஃது என்ன அதிசயம் ! தாயே என்பாள் என்பதாம் . உன்னற்கரிய என்பதனாற் சொல்லுதற்கரிய என்பதும் கொள் ளப்படும் . உன்னற்கரிய சீர் என்பது உத்தரகோசமங்கையிலுள்ளா ரோடியையும் . சீர் - புகழ் . உத்தரகோசமங்கை என்பது உத்தர மங்கை எனக் குறுகியது . உத்தரகோசமங்கைப் பதியையுடையார் அதனை விடுத்து என்நெஞ்சிலேயே நிலைபெற்றிருப்பாராயினர் என இறைவன் தம்பாலியைந்து அருளுமாற்றைக் கூறிய நயம் வியக்கத்தக் கது . மன்னுவது என்நெஞ்சில் என்றஆற்றலால் அவர் பொருந்தியிருப் பது என் நெஞ்சிலாயினும் எனப் பொருளுரைக்கப்பட்டது . மால் அயன் காணாமை தற்போதமுண்மையால் என்க . ' காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங் கடிகமலத் திருந்தயனுங் காணாவண்ணம் சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளியை ' 847 என வருவனவுங் காண்க . ( தே.நா.214-10 ) இதன்கண் உத்தர மங்கையர் மன்னுவது என்நெஞ்சில் என்பதனால் ஆத்துமபூரணம் என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க . 342 வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர் பள்ளிக்குப் பாமத்தர் அன்னே யென்னும் பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென் உள்ளங் கவர்வரால் அன்னே யென்னும் . - ரை : வெள்ளை கலிங்கத்தர் - இறைவர் வெண்மையான ஆடை யைத் தரித்தவரும் ; வெண் திரு முண்டத்தர் - வெண்மையாகிய அழ கிய முக்குறியாகத் தரிக்கப்பட்ட திருநீற்றுப் பூச்சினையுடையவரும் பள்ளிகுப்பாயத்தர் - அறிதுயில் செய்யும் திருமாலின் தோலாகிய சட்டையையுடையவருமாவர் . அன்னே என்னும் - தாயே என்பாள் . பள்ளி குப்பாயத்தர் பாய் பரி மேல் கொண்டு - அறி துயில் செய்யும்