திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

848 திருவாசக ஆராய்ச்சியுரை திருமாலின் தோலாகிய சட்டையையுடைய அவர் பாய்ந்து செல் லும் குதிரையின்மேல் எழுந்தருளி வந்து, என் உள்ளம் கவர்வர்- என் மனத்தைக் கவர்ந்துகொள்வர். அன்னே என்னும் - தாயே என் பாள்: இறைவர் வெள்ளைக் கலிங்கத்தையுடையவர், வெண்மையாகிய முக்குறியாகத் தரிக்கப்பட்ட திருநீற்றையுடையவர், அறிதுயில்செய் யும் திருமாலின் தோலாகிய சட்டையையுடையவர், தாயே, என் பாள்: பள்ளிக் குப்பாயத்தையுடைய அவ்விறைவர் குதிரைமேல் எழுந்தருளிவந்து என்மனத்தைக் கவர்ந்துகொள்வர் தாயே என்பாள் என்பதாம். கலிங்கம் - கலிங்க நாட்டிற் செய்த ஆடை-"நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம்" (சிலப் 22 - 21) என்பது காண்க. வெண்திரு முண் டம் - முக்குறியாகத் தரிக்கப்பட்ட திருவெண்ணீற்றுப் பூச்சு. இனி முண்டத்தினை நெற்றி எனக் கொள்வார். வெண் திரு என்பதனைத் திருவெண்நீறு என்பர். இனி வெண்டிரு முண்டத்தர் என்பதற்கு அழகிய நகு வெண்டலையையுடையவர் எனப் பொருளுரைப்பாரு முளர். இவ்வுரையில் வெண்முண்டத்திற்குத் திரு என்பது வேண்டா கூற்றாகும். பள்ளிக் குப்பாயத்தர் என்றது அறிதுயில் செய்யும் திருமாலின் தோலாகிய சட்டையையுடையவர் என்றவாறு. இதனை. எளியரை வலியர் வாட்டின் வலியரை இருநீர் வைப்பின் அளியறத் தெய்வம் வாட்டும் எனுமுரைக் கமைய அன்றே தெளியுமா வலியைச் செற்றேற் செகுத்துரிக் கவயம் போர்த்த வளியுளர் கச்சிகாவல் வயிரவர்க் கன்பு செய்வாம்" என்னும் காஞ்சிப் புராணத்தால் அறிக. "வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும் அஞ்சனப் புகையென ஆலமாமெனச் செஞ்சுடர்ப் படிவமேல் செறித்த மாமணிக் கஞ்சுகக் கடவுள்பொற் கழல்களேத்துவாம்." என்னும் கந்தபுராணமும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. இறை வனுக்கும் வைரவர்க்கும் வேறுபாடின்மையின் பள்ளிக் குப்பாயத்தர் என இறைவன்மேலேற்றிக் கூறினார். வைரவக்கடவுள் சிவபிரானின் வேறல்லாத தன்மையினை, "விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகங்கை தரித்ததோர் கோலகால டைரவனாகி" (நாவு.73-6) "நிறைவாந் தன்மை வாமனனார் மாகாயத்து திரங்கொண்டார்" (நாவு.309-1) எனத் தேவாரத்து வருவனவற்றாலுமறிக.
848 திருவாசக ஆராய்ச்சியுரை திருமாலின் தோலாகிய சட்டையையுடைய அவர் பாய்ந்து செல் லும் குதிரையின்மேல் எழுந்தருளி வந்து என் உள்ளம் கவர்வர் என் மனத்தைக் கவர்ந்துகொள்வர் . அன்னே என்னும் - தாயே என் பாள் : இறைவர் வெள்ளைக் கலிங்கத்தையுடையவர் வெண்மையாகிய முக்குறியாகத் தரிக்கப்பட்ட திருநீற்றையுடையவர் அறிதுயில்செய் யும் திருமாலின் தோலாகிய சட்டையையுடையவர் தாயே என் பாள் : பள்ளிக் குப்பாயத்தையுடைய அவ்விறைவர் குதிரைமேல் எழுந்தருளிவந்து என்மனத்தைக் கவர்ந்துகொள்வர் தாயே என்பாள் என்பதாம் . கலிங்கம் - கலிங்க நாட்டிற் செய்த ஆடை- நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம் ( சிலப் 22 - 21 ) என்பது காண்க . வெண்திரு முண் டம் - முக்குறியாகத் தரிக்கப்பட்ட திருவெண்ணீற்றுப் பூச்சு . இனி முண்டத்தினை நெற்றி எனக் கொள்வார் . வெண் திரு என்பதனைத் திருவெண்நீறு என்பர் . இனி வெண்டிரு முண்டத்தர் என்பதற்கு அழகிய நகு வெண்டலையையுடையவர் எனப் பொருளுரைப்பாரு முளர் . இவ்வுரையில் வெண்முண்டத்திற்குத் திரு என்பது வேண்டா கூற்றாகும் . பள்ளிக் குப்பாயத்தர் என்றது அறிதுயில் செய்யும் திருமாலின் தோலாகிய சட்டையையுடையவர் என்றவாறு . இதனை . எளியரை வலியர் வாட்டின் வலியரை இருநீர் வைப்பின் அளியறத் தெய்வம் வாட்டும் எனுமுரைக் கமைய அன்றே தெளியுமா வலியைச் செற்றேற் செகுத்துரிக் கவயம் போர்த்த வளியுளர் கச்சிகாவல் வயிரவர்க் கன்பு செய்வாம் என்னும் காஞ்சிப் புராணத்தால் அறிக . வெஞ்சினப் பரியழன் மீது போர்த்திடும் அஞ்சனப் புகையென ஆலமாமெனச் செஞ்சுடர்ப் படிவமேல் செறித்த மாமணிக் கஞ்சுகக் கடவுள்பொற் கழல்களேத்துவாம் . என்னும் கந்தபுராணமும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது . இறை வனுக்கும் வைரவர்க்கும் வேறுபாடின்மையின் பள்ளிக் குப்பாயத்தர் என இறைவன்மேலேற்றிக் கூறினார் . வைரவக்கடவுள் சிவபிரானின் வேறல்லாத தன்மையினை விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகங்கை தரித்ததோர் கோலகால டைரவனாகி ( நாவு.73-6 ) நிறைவாந் தன்மை வாமனனார் மாகாயத்து திரங்கொண்டார் ( நாவு.309-1 ) எனத் தேவாரத்து வருவனவற்றாலுமறிக .