திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அன்னைப்பத்து 849 இறைவன் பாய்பரி மேல் கொண்டது குதிரை கொண்டு வந்தகா லத்து என்க. 'சீரார் பெருந்துறையான், பந்தம் பரியப் பரிமேற் கொண்டான்" (அம். 3) 'ஞாலமிகப் பரிமேற்கொண்டு நமையாண் டான்" (பொன்னூசல் 8) என வருவன காண்க. உள்ளம் கவர்வர்-மனத்தினைக் கவர்வர் ''உள்ளம் சுவர்கள்வன்" எனத் தேவாரத்தும் (ஞான 1-1) வருதல் காண்க. ஆல்-அசை. இதன்கண் "பள்ளிக்குப்பாயத்தர் உள்ளங் கவர்வரால்" என்பத னால் ஆத்துமபூரணம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 3 43 தாளி யறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை யாள்வரால் அன்னே யென்னும் ஆளெம்மை யாளு மடிகளார் தங்கையில் தாளமிருந்தவா றன்னே யென்னும். 7 ப - ரை? தாளி அறுகினர் - தாளையுடைத்தாகிய அறுகம் புல்லி னாலாகிய மாலையை அணிந்தவர்; சந்தன சாந்தினர் - சந்தனக் கல வையை அணிந்தவர், ஆள் எம்மை ஆள்வர் - அடிமையாக எம்மை ஆண்டருளுவர், அன்னே என்னும் - தாயே என்பாள்; ஆள் எம்மை ஆளும் அடிகளார்தம் கையில் - எம்மை ஆண்டருளும் அவ்விறைவ ருடைய திருக்கரத்தில், தாளம் இருந்த ஆறு - தாளம் இருந்தபடி யாதோ? அன்னே என்னும் -தாயே என்பாள். இறைவர் தாளி அறுகம் புல்லினாலாகிய மாலையை அணிந்தவர்; சந்தனச் சாந்தினர்; அடிமையாக எம்மை ஆண்டருளுவர், தாயே என்பாள்; எம்மை ஆண்டருளும் அவ்விறைவருடைய திருக்கரத்தில் தாளம் இருந்தபடி யாதோ? தாயே, என்பாள் என்பதாம். தாளி அறுகு - அறுகின் வகைகளுள் ஒன்று. சந்தனச் சாந்து- நறுமணப்பொருள்கள் கலந்தரைத்த சந்தனக் குழம்பு. ஆள்-அடிமை. தாளம் - இசையை யறுத்து ஒற்றும் ஒலிக்கருவி. "எம்மிறை நல் வீணை வாசிக்கும்மே" (தேவாரம்) 'மழலை யாழ் சிலம்ப வந்தகம் புகுந் தோன் மருவிடந் திருவிடை மருதே" திருவிசைப்பா என்பவற்றால் இறைவர் இசைபாடுதலுடைமையின் அதற்குரிய தாளவரையறை யினை உணர்த்தும் தாளக் கருவியையுடையராயினர். தண்டுந்தாளமுங் குழலும் தண்ணுமைக் கருவியும் புறவில் கொண்ட பூதமுமுடையார் கோலமும் பலபலவுடையார் (ஞான.230-6) 84
அன்னைப்பத்து 849 இறைவன் பாய்பரி மேல் கொண்டது குதிரை கொண்டு வந்தகா லத்து என்க . ' சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற் கொண்டான் ( அம் . 3 ) ' ஞாலமிகப் பரிமேற்கொண்டு நமையாண் டான் ( பொன்னூசல் 8 ) என வருவன காண்க . உள்ளம் கவர்வர் - மனத்தினைக் கவர்வர் ' ' உள்ளம் சுவர்கள்வன் எனத் தேவாரத்தும் ( ஞான 1-1 ) வருதல் காண்க . ஆல் - அசை . இதன்கண் பள்ளிக்குப்பாயத்தர் உள்ளங் கவர்வரால் என்பத னால் ஆத்துமபூரணம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 3 43 தாளி யறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை யாள்வரால் அன்னே யென்னும் ஆளெம்மை யாளு மடிகளார் தங்கையில் தாளமிருந்தவா றன்னே யென்னும் . 7 - ரை ? தாளி அறுகினர் - தாளையுடைத்தாகிய அறுகம் புல்லி னாலாகிய மாலையை அணிந்தவர் ; சந்தன சாந்தினர் - சந்தனக் கல வையை அணிந்தவர் ஆள் எம்மை ஆள்வர் - அடிமையாக எம்மை ஆண்டருளுவர் அன்னே என்னும் - தாயே என்பாள் ; ஆள் எம்மை ஆளும் அடிகளார்தம் கையில் - எம்மை ஆண்டருளும் அவ்விறைவ ருடைய திருக்கரத்தில் தாளம் இருந்த ஆறு - தாளம் இருந்தபடி யாதோ ? அன்னே என்னும் -தாயே என்பாள் . இறைவர் தாளி அறுகம் புல்லினாலாகிய மாலையை அணிந்தவர் ; சந்தனச் சாந்தினர் ; அடிமையாக எம்மை ஆண்டருளுவர் தாயே என்பாள் ; எம்மை ஆண்டருளும் அவ்விறைவருடைய திருக்கரத்தில் தாளம் இருந்தபடி யாதோ ? தாயே என்பாள் என்பதாம் . தாளி அறுகு - அறுகின் வகைகளுள் ஒன்று . சந்தனச் சாந்து நறுமணப்பொருள்கள் கலந்தரைத்த சந்தனக் குழம்பு . ஆள் - அடிமை . தாளம் - இசையை யறுத்து ஒற்றும் ஒலிக்கருவி . எம்மிறை நல் வீணை வாசிக்கும்மே ( தேவாரம் ) ' மழலை யாழ் சிலம்ப வந்தகம் புகுந் தோன் மருவிடந் திருவிடை மருதே திருவிசைப்பா என்பவற்றால் இறைவர் இசைபாடுதலுடைமையின் அதற்குரிய தாளவரையறை யினை உணர்த்தும் தாளக் கருவியையுடையராயினர் . தண்டுந்தாளமுங் குழலும் தண்ணுமைக் கருவியும் புறவில் கொண்ட பூதமுமுடையார் கோலமும் பலபலவுடையார் ( ஞான.230-6 ) 84