திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 489 ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ் சோதியாகிய இறை வனை யாம் புகழ்ந்து பாடக் கேட்டும் மாதே துயில்கின்றாயோ? நின் செவிகள்தாம் கேட்கும் தன்மையில்லாத வலிய செவிகளோ? என்று துயிலெழுப்ப வந்தவர் வினாவுதலும் அதற்கு விடை யாதுமின்மை யால் வீட்டினுள்ளே சென்றவர்கள் தம் தோழியின் நிலைகண்டு, 'வீதி யினிடத்து மாதேவனுடைய திருவடிகளை யாங்கள் புகழ்ந்து வாழ்த் திய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று கேட்ட அளவில், படுக்கையி னின்றும் புரண்டு விம்மி விம்மி யழுது தன்னை மறந்து இவ்வாறு யாதொன்றுஞ் செய்ய இயலாதவளாய் பரவசமாய்க் கிடந்தாள். இஃதென்ன வியப்பு! வியப்பு! எம் தோழியின் பத்தித் திறம் இதுவா? எம்பாவாய்! எங்களுக்கும் இவள் போன்ற பத்தித்திறத்தை அருளுதி' (என வேண்டுதல் செய்து, பரவசமுள்ள அவளைத் தெளிவித்து அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்) என்பதாம். ''ஆதியும் அந்தமுமில்லா வரும்பதி, சோதிப்பரஞ்சுடர் " திரு மந்திரம் 2453. ஆதியும் அந்தமும் இல்லா என்றது, முதலும் முடி வும் இல்லாத என்றவாறு. இலா என்பது, ஈறுகெட்ட பெயரெச்சம். இல்லாச் சோதி என இயையும். ஆதியும் அந்தமுமில்லா அரும் பெருஞ் சோதியை என்பது, திருமாலும், பிரமனும் அடி முடி யறியா வண்ணம் இறைவன் பேரொளிப் பிழம்பாக நின்றமையைக் குறிப் பினால் உணர்த்தியதாகும். யாம் என்றது, துயிலுணர்த்தச் சென்ற மகளிரைக் குறித்தது. மாதேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதி வாய்க் கேட்டலும் என மேல் வருவதனால், யாம் பாட என்பதற்கு யாம் மாதேவன் திருவடிகளைப் புகழ்ந்து வாழ்த்திய வாழ்த்துப் பாடல்களை வீதியினிடத்துப்பாட என்பது பொருளாகக் கொள்க. கேட்டேயும் - கேட்டுக்கொண்டும், வாள்- ஒளி "வாளொளியாகும் என்பது தொல்காப்பியம் (உரி. 71). தடங்கண் - அகற்சியையுடைய கண் . ஒளியும் அகற்சியும் கண்ணிற்கு நல்லிலக்கணங்களாகும். ஈசற் கியான்வைத்த வன்பி கன்றனவன் வாங்கியவென் பாசத்திற் காரென் றவன்றில் லையினொளி போன்றவன் றோள் பூசத் திருநீ றெனவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த் தையிற்பெரு நீளம் பெருங்கண்களே " (109) என அடிகள் திருக்கோவையாரில் அருளியமையுங் காண்க. மாது என்றது, எம் தோழியென மேல் கூறப்படும் இவர்கள் தோழியை. வாட்டடங்கண் மாதே என்றது, தோழியை மகிழ்வித்து முகங்கொள்ளுமாறு கூறியது. இவ்வாறே ஏனைத் திருப்பாடல்களுக் கும் கொள்க.
திருவெம்பாவை 489 ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ் சோதியாகிய இறை வனை யாம் புகழ்ந்து பாடக் கேட்டும் மாதே துயில்கின்றாயோ ? நின் செவிகள்தாம் கேட்கும் தன்மையில்லாத வலிய செவிகளோ ? என்று துயிலெழுப்ப வந்தவர் வினாவுதலும் அதற்கு விடை யாதுமின்மை யால் வீட்டினுள்ளே சென்றவர்கள் தம் தோழியின் நிலைகண்டு ' வீதி யினிடத்து மாதேவனுடைய திருவடிகளை யாங்கள் புகழ்ந்து வாழ்த் திய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று கேட்ட அளவில் படுக்கையி னின்றும் புரண்டு விம்மி விம்மி யழுது தன்னை மறந்து இவ்வாறு யாதொன்றுஞ் செய்ய இயலாதவளாய் பரவசமாய்க் கிடந்தாள் . இஃதென்ன வியப்பு ! வியப்பு ! எம் தோழியின் பத்தித் திறம் இதுவா ? எம்பாவாய் ! எங்களுக்கும் இவள் போன்ற பத்தித்திறத்தை அருளுதி ' ( என வேண்டுதல் செய்து பரவசமுள்ள அவளைத் தெளிவித்து அழைத்துக்கொண்டு புறப்பட்டனர் ) என்பதாம் . ' ' ஆதியும் அந்தமுமில்லா வரும்பதி சோதிப்பரஞ்சுடர் திரு மந்திரம் 2453. ஆதியும் அந்தமும் இல்லா என்றது முதலும் முடி வும் இல்லாத என்றவாறு . இலா என்பது ஈறுகெட்ட பெயரெச்சம் . இல்லாச் சோதி என இயையும் . ஆதியும் அந்தமுமில்லா அரும் பெருஞ் சோதியை என்பது திருமாலும் பிரமனும் அடி முடி யறியா வண்ணம் இறைவன் பேரொளிப் பிழம்பாக நின்றமையைக் குறிப் பினால் உணர்த்தியதாகும் . யாம் என்றது துயிலுணர்த்தச் சென்ற மகளிரைக் குறித்தது . மாதேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதி வாய்க் கேட்டலும் என மேல் வருவதனால் யாம் பாட என்பதற்கு யாம் மாதேவன் திருவடிகளைப் புகழ்ந்து வாழ்த்திய வாழ்த்துப் பாடல்களை வீதியினிடத்துப்பாட என்பது பொருளாகக் கொள்க . கேட்டேயும் - கேட்டுக்கொண்டும் வாள்- ஒளி வாளொளியாகும் என்பது தொல்காப்பியம் ( உரி . 71 ) . தடங்கண் - அகற்சியையுடைய கண் . ஒளியும் அகற்சியும் கண்ணிற்கு நல்லிலக்கணங்களாகும் . ஈசற் கியான்வைத்த வன்பி கன்றனவன் வாங்கியவென் பாசத்திற் காரென் றவன்றில் லையினொளி போன்றவன் றோள் பூசத் திருநீ றெனவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த் தையிற்பெரு நீளம் பெருங்கண்களே ( 109 ) என அடிகள் திருக்கோவையாரில் அருளியமையுங் காண்க . மாது என்றது எம் தோழியென மேல் கூறப்படும் இவர்கள் தோழியை . வாட்டடங்கண் மாதே என்றது தோழியை மகிழ்வித்து முகங்கொள்ளுமாறு கூறியது . இவ்வாறே ஏனைத் திருப்பாடல்களுக் கும் கொள்க .