திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

854 திருவாசக ஆராய்ச்சியுரை நின்ற பழமைத்து; இன்னும், ஆதியும் முக்குணங்களும் சிறிதும் இல்லா தவன்; அழிவில்லாதவன்; அவ்வியல்பினன் இங்கு வரும் வண்ணம் நீ கூவி அழைப்பாயாக என்பதாம். கீதம் - இசை. இசைப்பாட்டு எனினுமமையும். கேட்டியேல் என் றதன் ஆற்றலால் நான் சொல்வதைக் கேட்டு எனக்கு உதவி செய் குவையாயின் என உரைக்கப்பட்டது. பாதமிரண்டும் பாதாளம் ஏழினுக்கும் அப்பாலாகவுள்ளன; மணிமுடி சொல்லிறந்து நின்ற தொன்மைத்து என்க. "பாதாளமேழினும் கீழ் சொற்கழிவு பாத மலர். போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே" (திரு வெம்பா.10) என வருதல் காண்க. தொன்மைத்து என்றது தொன்மை என நின்றது. இறைவன் * தொன்மையனாதலின் முடிசொல்லிறந்து நின்ற தொன்மைத்து என்றார். ஆதி-தோற்றம். குணம்-முக்குணம். இத்திருப்பாட்டு, தன்னால் விரும்பப்பட்ட இறைவனது இயல்பி னைக் கூறி அவ்விறைவன் வருமாறு கூவும்படி தலைவி குயிலைப் பார்த் துச் சொல்வதுபோல அமைந்துள்ளது. பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவை கோதி ஏனோர்க்கு மினிதாக மொழியு மெழி லிளங்குயிலே தேனாரும் பொழில் புடைசூழ் திருத்தோணி புரத்தமரர் கோனாரை யென்னிடத்தே வரவொருகாற் கூவாயே" (60-8) எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியமையுங் காண்க. இதன் கண் 'வரக்கூவாய்" என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 1 347 ஏர்தரு மேழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய் ஆர்கலி சூழ்தென் னிலங்கை யழகமர் வண்டோ தரிக்குப் பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். ப-ரை. ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த - அழகு பொருந்திய ஏழுல கத்தவரும் துதிக்க, எ உருவும் தன் உருவாய் - எந்த வடிவமும் தன் வடிவமாய் அமைந்து, ஆர் கலி சூழ் தென் இலங்கை - கடல் சூழ்ந்த தெற்கின்கணுள்ள இலங்கையில் வாழும், அழகு அமர் வண்டோ தரிக்கு - அழகு அமைந்த இராவணன் மனைவியாகிய வண்டோதரிக்கு. பேர் அருள் இன்பம் அளித்த - தன் பெருங் கருணையால் இன்பத் தைக் கொடுத்த, பெருந்துறை மேய பிரானை - திருப்பெருந்துறையில் தொன்மை யாண்மையனே. நீத்.22
854 திருவாசக ஆராய்ச்சியுரை நின்ற பழமைத்து ; இன்னும் ஆதியும் முக்குணங்களும் சிறிதும் இல்லா தவன் ; அழிவில்லாதவன் ; அவ்வியல்பினன் இங்கு வரும் வண்ணம் நீ கூவி அழைப்பாயாக என்பதாம் . கீதம் - இசை . இசைப்பாட்டு எனினுமமையும் . கேட்டியேல் என் றதன் ஆற்றலால் நான் சொல்வதைக் கேட்டு எனக்கு உதவி செய் குவையாயின் என உரைக்கப்பட்டது . பாதமிரண்டும் பாதாளம் ஏழினுக்கும் அப்பாலாகவுள்ளன ; மணிமுடி சொல்லிறந்து நின்ற தொன்மைத்து என்க . பாதாளமேழினும் கீழ் சொற்கழிவு பாத மலர் . போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே ( திரு வெம்பா .10 ) என வருதல் காண்க . தொன்மைத்து என்றது தொன்மை என நின்றது . இறைவன் * தொன்மையனாதலின் முடிசொல்லிறந்து நின்ற தொன்மைத்து என்றார் . ஆதி - தோற்றம் . குணம் - முக்குணம் . இத்திருப்பாட்டு தன்னால் விரும்பப்பட்ட இறைவனது இயல்பி னைக் கூறி அவ்விறைவன் வருமாறு கூவும்படி தலைவி குயிலைப் பார்த் துச் சொல்வதுபோல அமைந்துள்ளது . பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவை கோதி ஏனோர்க்கு மினிதாக மொழியு மெழி லிளங்குயிலே தேனாரும் பொழில் புடைசூழ் திருத்தோணி புரத்தமரர் கோனாரை யென்னிடத்தே வரவொருகாற் கூவாயே ( 60-8 ) எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியமையுங் காண்க . இதன் கண் ' வரக்கூவாய் என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 1 347 ஏர்தரு மேழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய் ஆர்கலி சூழ்தென் னிலங்கை யழகமர் வண்டோ தரிக்குப் பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய் . - ரை . ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த - அழகு பொருந்திய ஏழுல கத்தவரும் துதிக்க உருவும் தன் உருவாய் - எந்த வடிவமும் தன் வடிவமாய் அமைந்து ஆர் கலி சூழ் தென் இலங்கை - கடல் சூழ்ந்த தெற்கின்கணுள்ள இலங்கையில் வாழும் அழகு அமர் வண்டோ தரிக்கு - அழகு அமைந்த இராவணன் மனைவியாகிய வண்டோதரிக்கு . பேர் அருள் இன்பம் அளித்த - தன் பெருங் கருணையால் இன்பத் தைக் கொடுத்த பெருந்துறை மேய பிரானை - திருப்பெருந்துறையில் தொன்மை யாண்மையனே . நீத் .22