திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குயிற்பத்து 855 எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, தென்பாண்டி நாடனை - தெற் கின்கணுள்ள பாண்டி நாட்டையுடையவளை, குயிலே சீரிய வாயால் கூவாய் - குயிலே சிறந்த வாயினால் கூவி அழைப்பாயாக. He tout குயிலே, ஏழுலகும் துதிக்கும்படி எவ்வுருவும் தன்னுருவமாய் அமைந்து, தென்னிலங்கையின்கணுள்ள வண்டோதரிக்குத் தன் பேரரு ளினால் இன்பத்தைக் கொடுத்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி யிருக்கின்ற பெருமானும், தென்பாண்டி நாட்டையுடையவனுமாகிய இறைவனை, குயிலே உன் சீரிய வாயினாற் கூவி அழைப்பாயாக என் பதாம். ஏர்-அழகு. எவ்வுருவுந் தன்னுருவாய் என்றது தம்மைத் தியா னிப்பவர் எவ்வுருவில் தியானிக்கின்றனரோ அவ்வுருவில் தான் அமைந்து நின்று அவர்க்கு அருள்பவன் என்றவாறு. இதனை, 'யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வ மாகியாங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்'' எனச் சிவஞானசித்தியாரிலும், "மண்ணவ ரமரர் யாரை வணங்கினு மவைகளெல்லாம் நண்ணிய பரமன் றாளினால்'' எனக் கந்தபுராணத்தும், (மேருப்படலம் 5) "அன்பா னினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின்" (குறள். 3 பரிமேல) எனத் திருக்குறளுரையினும் வருவனவற்றாலுமறிக. ALOR SUDete, din ஆர்கலி-நிறைந்த ஓசை. மிக்க ஆரவாரம் (புற. 91-3 உரை.) ஈண்டு அதனையுடைய கடலுக்கு ஆகுபெயர். ஆர்கலி சூழ் இலங்கை என்க. "கடல்சூழிலங்கை" (சிலப். 30-160) எனப் பிறரும் கூறுதல் காண்க. தென்னிலங்கை வண்டோதரி என்க. சிறிய வயிற்றினை யுடையவள் எனப் பொருள்படும் மந்தோதரி என்பது மண்தோதரி எனவும், மண்டோதரி எனவும், வண்டோதரி எனவும் வழங்குவதா யிற்று. வண்டோதரி-இராவணன் மனைவி. வண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்தமை, ga "எங்கள் பரமன் பெருந்துறை யாதி அந்நாள் எவ் உந்து திரைக் கடலைக் கடந்தன் றோங்குமதி லிலங்கையதனிற் பந்தணை மெல்விரலாட் கருளும் பரிசறிவார்" (திருவார்த்தை -5) என்பதனாலுமறிக. இன்பமளித்த என்றதனால் வண்டோதரி இறை வனிடத்தும் பேரன்புடையவள் என்பதும் அவ்வன்பினால் தான் விரும் பிய பேற்றைச் சிவன்பாற் பெற்றாள் என்பதும் இனிது விளங்கும்.
குயிற்பத்து 855 எழுந்தருளியிருக்கின்ற பெருமானை தென்பாண்டி நாடனை - தெற் கின்கணுள்ள பாண்டி நாட்டையுடையவளை குயிலே சீரிய வாயால் கூவாய் - குயிலே சிறந்த வாயினால் கூவி அழைப்பாயாக . He tout குயிலே ஏழுலகும் துதிக்கும்படி எவ்வுருவும் தன்னுருவமாய் அமைந்து தென்னிலங்கையின்கணுள்ள வண்டோதரிக்குத் தன் பேரரு ளினால் இன்பத்தைக் கொடுத்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி யிருக்கின்ற பெருமானும் தென்பாண்டி நாட்டையுடையவனுமாகிய இறைவனை குயிலே உன் சீரிய வாயினாற் கூவி அழைப்பாயாக என் பதாம் . ஏர் - அழகு . எவ்வுருவுந் தன்னுருவாய் என்றது தம்மைத் தியா னிப்பவர் எவ்வுருவில் தியானிக்கின்றனரோ அவ்வுருவில் தான் அமைந்து நின்று அவர்க்கு அருள்பவன் என்றவாறு . இதனை ' யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வ மாகியாங்கே மாதொரு பாகனார் தாம் வருவர் ' ' எனச் சிவஞானசித்தியாரிலும் மண்ணவ ரமரர் யாரை வணங்கினு மவைகளெல்லாம் நண்ணிய பரமன் றாளினால் ' ' எனக் கந்தபுராணத்தும் ( மேருப்படலம் 5 ) அன்பா னினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ( குறள் . 3 பரிமேல ) எனத் திருக்குறளுரையினும் வருவனவற்றாலுமறிக . ALOR SUDete din ஆர்கலி - நிறைந்த ஓசை . மிக்க ஆரவாரம் ( புற . 91-3 உரை . ) ஈண்டு அதனையுடைய கடலுக்கு ஆகுபெயர் . ஆர்கலி சூழ் இலங்கை என்க . கடல்சூழிலங்கை ( சிலப் . 30-160 ) எனப் பிறரும் கூறுதல் காண்க . தென்னிலங்கை வண்டோதரி என்க . சிறிய வயிற்றினை யுடையவள் எனப் பொருள்படும் மந்தோதரி என்பது மண்தோதரி எனவும் மண்டோதரி எனவும் வண்டோதரி எனவும் வழங்குவதா யிற்று . வண்டோதரி - இராவணன் மனைவி . வண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்தமை ga எங்கள் பரமன் பெருந்துறை யாதி அந்நாள் எவ் உந்து திரைக் கடலைக் கடந்தன் றோங்குமதி லிலங்கையதனிற் பந்தணை மெல்விரலாட் கருளும் பரிசறிவார் ( திருவார்த்தை -5 ) என்பதனாலுமறிக . இன்பமளித்த என்றதனால் வண்டோதரி இறை வனிடத்தும் பேரன்புடையவள் என்பதும் அவ்வன்பினால் தான் விரும் பிய பேற்றைச் சிவன்பாற் பெற்றாள் என்பதும் இனிது விளங்கும் .