திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குயிற்பத்து என்க. ழுக்கம். சீலம் பெரிதும் இனிய திருவுத்தரகோசமங்கை "சீலந் திகழும் திருவுத்தரகோசமங்கை" (பொன்னூசல்.8) என வருதல் காண்க. சீலம் பெரிதும் இனிய எனத் திருவுத்தரகோசமங் கையைச் சிறப்பித்தது சிறந்த ஒழுக்க நூல்களான ஆகமங்களை இறை வன் திருவுத்தரகோசமங்கையிலிருந்து அருளிச்செய்தமை பற்றி என்க. 'உத்தர கோச மங்கையு ளிருந்து வித்தக வேடங் காட்டிய இயல்பும்" (கீர்த்தி 48-9) என வந்தமை காண்க. ஞாலம் மிக என்றது உலகம் அறிவினாலும் அன்பினாலும் விளக்கம் மிக என்றவாறு. 349 (0) 857 இதன்கண், "நாயகனை வரக்கூவாய்" என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 3 தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை யாட்கொண்ட வள்ளல் ஊன் பழித் துள்ளம் புகுந்தென் னுணர்வது வாய வொருத்தன் மான்பழித் தாண்டமென் னோக்கி மணாளனை நீவரக் கூவாய். . ப-ரை. தேன் பழ சோலை பயிலும் சிறுகுயிலே - தேன் போலும் இனிமையையுடைய பழங்களையுடைய சோலைகளில் சஞ்சரிக்கின்ற சிறிய குயிலே, இது கேள் - நான் கூறும் இதனைக் கேட்பாயாக. வான் பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் - வானி லுள்ளாரை இகழ்ந்து நீக்கி இம் மண்ணுலகத்தின்கண் வலிய வந்து பக்குவமுடைய ஆன்மாக்களை ஆட்கொண்டருளும் அருட்கொடை யாளனும், ஊன் பழித்து ஊனுடம்பினை வெறுக்கும் வண்ணம் செய்து, உளம்புகுந்து - என் உள்ளத்தின்கட். புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன் - என் அறிவின் கண் அறிவாய் அத்துவிதமான ஒப்பற்றவனும், மான்பழித்து ஆண்ட மெல்நோக்கி மணாளனை மானின் மருண்ட நோக்கத்தினைப் பழித்துத் தன்னுட்படுத்திய மெல் லிய நோக்கத்தினையுடைய உமையம்மைக்குக் கணவனுமாகிய தலை வனை, நீ வரக்கூவாய் - நீ வரும்படி கூவுவாயாக. தேன் பழச்சோலையில் வாழ்கின்ற குயிலே, யான் கூறுகின்ற இத னைக் கேட்பாயாக. வான் பழித்து இம் மண்ணுலகில் வலியவந்து மனி தரை ஆட்கொண்ட அருள்வள்ளலும், ஊனுடம்பினை வெறுத் தொதுக்கச் செய்து என் உள்ளத்தினுட் புகுந்து உணர்வதுவாய ஒருத்தனும், மென்னோக்கி மணாளனுமாகிய தலைவனை வரும்படி நீ கூவி அழைப்பாயாக என்பதாம்.
குயிற்பத்து என்க . ழுக்கம் . சீலம் பெரிதும் இனிய திருவுத்தரகோசமங்கை சீலந் திகழும் திருவுத்தரகோசமங்கை ( பொன்னூசல் .8 ) என வருதல் காண்க . சீலம் பெரிதும் இனிய எனத் திருவுத்தரகோசமங் கையைச் சிறப்பித்தது சிறந்த ஒழுக்க நூல்களான ஆகமங்களை இறை வன் திருவுத்தரகோசமங்கையிலிருந்து அருளிச்செய்தமை பற்றி என்க . ' உத்தர கோச மங்கையு ளிருந்து வித்தக வேடங் காட்டிய இயல்பும் ( கீர்த்தி 48-9 ) என வந்தமை காண்க . ஞாலம் மிக என்றது உலகம் அறிவினாலும் அன்பினாலும் விளக்கம் மிக என்றவாறு . 349 ( 0 ) 857 இதன்கண் நாயகனை வரக்கூவாய் என்பதனால் ஆத்துமவிரக்கம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 3 தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை யாட்கொண்ட வள்ளல் ஊன் பழித் துள்ளம் புகுந்தென் னுணர்வது வாய வொருத்தன் மான்பழித் தாண்டமென் னோக்கி மணாளனை நீவரக் கூவாய் . . - ரை . தேன் பழ சோலை பயிலும் சிறுகுயிலே - தேன் போலும் இனிமையையுடைய பழங்களையுடைய சோலைகளில் சஞ்சரிக்கின்ற சிறிய குயிலே இது கேள் - நான் கூறும் இதனைக் கேட்பாயாக . வான் பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் - வானி லுள்ளாரை இகழ்ந்து நீக்கி இம் மண்ணுலகத்தின்கண் வலிய வந்து பக்குவமுடைய ஆன்மாக்களை ஆட்கொண்டருளும் அருட்கொடை யாளனும் ஊன் பழித்து ஊனுடம்பினை வெறுக்கும் வண்ணம் செய்து உளம்புகுந்து - என் உள்ளத்தின்கட் . புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன் - என் அறிவின் கண் அறிவாய் அத்துவிதமான ஒப்பற்றவனும் மான்பழித்து ஆண்ட மெல்நோக்கி மணாளனை மானின் மருண்ட நோக்கத்தினைப் பழித்துத் தன்னுட்படுத்திய மெல் லிய நோக்கத்தினையுடைய உமையம்மைக்குக் கணவனுமாகிய தலை வனை நீ வரக்கூவாய் - நீ வரும்படி கூவுவாயாக . தேன் பழச்சோலையில் வாழ்கின்ற குயிலே யான் கூறுகின்ற இத னைக் கேட்பாயாக . வான் பழித்து இம் மண்ணுலகில் வலியவந்து மனி தரை ஆட்கொண்ட அருள்வள்ளலும் ஊனுடம்பினை வெறுத் தொதுக்கச் செய்து என் உள்ளத்தினுட் புகுந்து உணர்வதுவாய ஒருத்தனும் மென்னோக்கி மணாளனுமாகிய தலைவனை வரும்படி நீ கூவி அழைப்பாயாக என்பதாம் .