திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை தேன் பழம் - தேனையுடைய பழம் எனினுமாம். சோலை பயிலுங் குயில் - சோலையிற் சஞ்சரிக்கின்ற குயில், 'கடிபொழில் வாழுங் குயிலே'" (குயிற். 9) "கொந்தணவும் பொழிற்சோலைக் கூங்குயிலே" (குயிற்.10) 'திருந்துசோலைக் கருங்குயில்" (சீவக.1661) என வருவன காண்க. சோலை - மாமரச்சோலை. 858 '"அடைகரை மாஅத் தல்குசினை யொலியத் தளிர்கவி னெய்திய தண்ணறும் பொதும்பிற் சேவலொடு கெழீஇய செங்கணிருங்குயில்" அந்தளிர் மாஅத் தலங்கன் மீமிசைச் (அக.229:18-9) செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்'' என வருவன காண்க. சிறு குயில் - உருவிற் சிறிய குயில். இளங்குயில் எனினுமாம். வான் பழித்து என்றது வானினுள்ளார் ஆட்கொள்ளுதற்குப் பக்குவமுடையரல்லாமையின் அவரை இகழ்ந்து நீக்கி என்றவாறு. 'புவனியிற் போய்ப்பிறவாமையில் நாள்நாம் (நற். 118:1-5) போக்குகின் றோமவ மேயிந்தப்பூமி nåréð tjum eð சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி" (திருப்பள்ளி.10) எனவும், 'வானிடத்தவரும் மண்மேல் வந்து அரன்றனை அருச்சிப்பர்" என சிவஞானசித்தியாரில் வருவனவும் காண்க. ஊன் - ஊனுடம்பு. ஒருத்தன் -ஒப்பற்றவன். ''தில்லைச் சிற்றம் பலத்தொருத்தன்" (கோவை. 9) என் உணர்வதுவாய ஒருத்தன் என்றது என் அறிவின் கண் அறிவாய் அத்துவிதமாய்க் கலந்த ஒப்பற் றவன் என்றவாறு. D “மட மானின் மருண்ட நோக்கினும் மிக்க மருண்ட நோக்கினையுடை மையால் அதனைக் குறைவுபடுத்தித் தன்னுட்படுத்தியமையின் உமையம்மையை "மான்பழித் தாண்ட நோக்கி" என்றார். மான் பிணையியல் வென்றாய்" (கலி. 131-12) எனப் பிறரும் கூறுதல் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. மெல் நோக்கி - மெல்லிய நோக் கினையுடைய உமையம்மை. "மாழை மென் னோக்கி தன் பங்க" எனப் பதினொராந் திருமுறையிலும் (கோயில் திருப்பண். 37) வருதல் காண்க. மணாளனை வரக்கூவாய் - மணவாளனை வரும்படி கூவுவாயாக. 'வாவா மணிவாயால் மாவின் தளிர் கோதிக் கூவா திருந்த குயீற்பிள்ளாய் ஓவாதே பூமாம் பொழில் உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக் கோமான் வரஒருகாற் கூவு" (11ந் திருமுறை) எனக் கயிலைபாதி காளத்திபாதி யந்தாதியினும் வருதல் காண்க. இதன்கண், மணாளனை வரக்கூவாய்' என்பதனால் ஆத்தும இரக் கம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 4
திருவாசக ஆராய்ச்சியுரை தேன் பழம் - தேனையுடைய பழம் எனினுமாம் . சோலை பயிலுங் குயில் - சோலையிற் சஞ்சரிக்கின்ற குயில் ' கடிபொழில் வாழுங் குயிலே ' ( குயிற் . 9 ) கொந்தணவும் பொழிற்சோலைக் கூங்குயிலே ( குயிற் .10 ) ' திருந்துசோலைக் கருங்குயில் ( சீவக .1661 ) என வருவன காண்க . சோலை - மாமரச்சோலை . 858 ' அடைகரை மாஅத் தல்குசினை யொலியத் தளிர்கவி னெய்திய தண்ணறும் பொதும்பிற் சேவலொடு கெழீஇய செங்கணிருங்குயில் அந்தளிர் மாஅத் தலங்கன் மீமிசைச் ( அக .229 : 18-9 ) செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம் ' ' என வருவன காண்க . சிறு குயில் - உருவிற் சிறிய குயில் . இளங்குயில் எனினுமாம் . வான் பழித்து என்றது வானினுள்ளார் ஆட்கொள்ளுதற்குப் பக்குவமுடையரல்லாமையின் அவரை இகழ்ந்து நீக்கி என்றவாறு . ' புவனியிற் போய்ப்பிறவாமையில் நாள்நாம் ( நற் . 118 : 1-5 ) போக்குகின் றோமவ மேயிந்தப்பூமி nåréð tjum சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி ( திருப்பள்ளி .10 ) எனவும் ' வானிடத்தவரும் மண்மேல் வந்து அரன்றனை அருச்சிப்பர் என சிவஞானசித்தியாரில் வருவனவும் காண்க . ஊன் - ஊனுடம்பு . ஒருத்தன் -ஒப்பற்றவன் . ' ' தில்லைச் சிற்றம் பலத்தொருத்தன் ( கோவை . 9 ) என் உணர்வதுவாய ஒருத்தன் என்றது என் அறிவின் கண் அறிவாய் அத்துவிதமாய்க் கலந்த ஒப்பற் றவன் என்றவாறு . D மட மானின் மருண்ட நோக்கினும் மிக்க மருண்ட நோக்கினையுடை மையால் அதனைக் குறைவுபடுத்தித் தன்னுட்படுத்தியமையின் உமையம்மையை மான்பழித் தாண்ட நோக்கி என்றார் . மான் பிணையியல் வென்றாய் ( கலி . 131-12 ) எனப் பிறரும் கூறுதல் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது . மெல் நோக்கி - மெல்லிய நோக் கினையுடைய உமையம்மை . மாழை மென் னோக்கி தன் பங்க எனப் பதினொராந் திருமுறையிலும் ( கோயில் திருப்பண் . 37 ) வருதல் காண்க . மணாளனை வரக்கூவாய் - மணவாளனை வரும்படி கூவுவாயாக . ' வாவா மணிவாயால் மாவின் தளிர் கோதிக் கூவா திருந்த குயீற்பிள்ளாய் ஓவாதே பூமாம் பொழில் உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக் கோமான் வரஒருகாற் கூவு ( 11 ந் திருமுறை ) எனக் கயிலைபாதி காளத்திபாதி யந்தாதியினும் வருதல் காண்க . இதன்கண் மணாளனை வரக்கூவாய் ' என்பதனால் ஆத்தும இரக் கம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 4