திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
350
குயிற்பத்து
சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங் சுடியவ ராசை யறுப்பான்
முந்து நடுவு முடிவு மாகிய மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய்.
859
ப - ரை சுந்தரத்து இன்ப குயிலே - அழகினையுடைய இசையால்
இன்பந் தருகின்ற குயிலே, சூழ்சுடர் ஞாயிறு போல - சூழ்ந்த கிர
ணங்களையுடைய சூரியனைப்போல ஒளிபொருந்திய உருவத்தோடும்,
அந்தரத்தே நின்று இங்கு இழிந்து - சிவலோகத்தினின்றும் இவ்வுல
கத்தின்கண் வலிய எழுந்தருளி வந்து, அடியவர் ஆசை அறுப்பான்-
இங்குள்ள அடியார்களுடைய பற்றுக்களை ஒழிப்பவனும், முந்தும் நடு
வும் முடிவும் ஆகிய மூவர் அறியா-உலகத்திற்கு முதல் இடை
கடை என்னும் மூன்றினையும் செய்யும் காரணேசுரர்களாகிய மும்
மூர்த்திகளும் அறியமுடியாத, சிந்துர சே அடியானை - சிவந்த திரு
வடியையுடையவனும், சேவகன் - நம்மை ஆட்கொள்ளும் வீரனுமா
கிய தலைவனை, வர கூவாய் - நீ வரும்படி கூவியழைப்பாயாக.
இன்பக் குயிலே, சூரியனைப்போல ஒளிபொருந்திய திருவுருவத்
தோடும், சிவலோகத்தினின்றும் இவ்வுலகின்கண் வலிய எழுந்தருளி
வந்து இங்குள்ள அடியவர்களின் பற்றுக்களை ஒழிப்பவனும், முந்தும்
நடுவும் முடிவுமாகிய காரணேசுரர்களாகிய மும்மூர்த்திகளும்
அறியமுடியாத சேவடியையுடையவனும், நம்மை ஆட்கொள்ளும் வீர
னுமாகிய தலைவனை நீ வரும்படி அழைப்பாயாக என்பதாம்.
சுந்தரம் - அழகு. "நங்கைமார் சுந்தரவதனமும் மதிக்குத் தோற்
றவே" (கம்ப. நகர் நீங்கு.179) என்புழியும் இப் பொருட்டாதல்
காண்க. இன்பம் - இசைப்பாடலால் உண்டாகும் இன்பம்,சுடர்-
கிரணம். ஞாயிறுபோல இழிந்து எனக் கூட்டி, சூரியனைப்போல ஒளி
யுருவத்தோடு வலிய எழுந்தருளிவந்து எனவுரைக்க. "கரும்பினும்
இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானை' எனத் தேவாரத்தும்
(திருநாவு.74-3) வருதல் காண்க. ஆசை அறுப்பான் -பற்றினை ஒழிப்
பவன், ஆசை ஒழிக்கப்படவேண்டுமென்பது,
வாசியு மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாமே.
"ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே"
எனத் திருமந்திரத்தும் வருவன காண்க.
2613
2615
350
குயிற்பத்து
சுந்தரத்
தின்பக்
குயிலே
சூழ்சுடர்
ஞாயிறு
போல
அந்தரத்
தேநின்
றிழிந்திங்
சுடியவ
ராசை
யறுப்பான்
முந்து
நடுவு
முடிவு
மாகிய
மூவ
ரறியாச்
சிந்துரச்
சேவடி
யானைச்
சேவக
னைவரக்
கூவாய்
.
859
ப
-
ரை
சுந்தரத்து
இன்ப
குயிலே
-
அழகினையுடைய
இசையால்
இன்பந்
தருகின்ற
குயிலே
சூழ்சுடர்
ஞாயிறு
போல
-
சூழ்ந்த
கிர
ணங்களையுடைய
சூரியனைப்போல
ஒளிபொருந்திய
உருவத்தோடும்
அந்தரத்தே
நின்று
இங்கு
இழிந்து
-
சிவலோகத்தினின்றும்
இவ்வுல
கத்தின்கண்
வலிய
எழுந்தருளி
வந்து
அடியவர்
ஆசை
அறுப்பான்
இங்குள்ள
அடியார்களுடைய
பற்றுக்களை
ஒழிப்பவனும்
முந்தும்
நடு
வும்
முடிவும்
ஆகிய
மூவர்
அறியா
-
உலகத்திற்கு
முதல்
இடை
கடை
என்னும்
மூன்றினையும்
செய்யும்
காரணேசுரர்களாகிய
மும்
மூர்த்திகளும்
அறியமுடியாத
சிந்துர
சே
அடியானை
-
சிவந்த
திரு
வடியையுடையவனும்
சேவகன்
-
நம்மை
ஆட்கொள்ளும்
வீரனுமா
கிய
தலைவனை
வர
கூவாய்
-
நீ
வரும்படி
கூவியழைப்பாயாக
.
இன்பக்
குயிலே
சூரியனைப்போல
ஒளிபொருந்திய
திருவுருவத்
தோடும்
சிவலோகத்தினின்றும்
இவ்வுலகின்கண்
வலிய
எழுந்தருளி
வந்து
இங்குள்ள
அடியவர்களின்
பற்றுக்களை
ஒழிப்பவனும்
முந்தும்
நடுவும்
முடிவுமாகிய
காரணேசுரர்களாகிய
மும்மூர்த்திகளும்
அறியமுடியாத
சேவடியையுடையவனும்
நம்மை
ஆட்கொள்ளும்
வீர
னுமாகிய
தலைவனை
நீ
வரும்படி
அழைப்பாயாக
என்பதாம்
.
சுந்தரம்
-
அழகு
.
நங்கைமார்
சுந்தரவதனமும்
மதிக்குத்
தோற்
றவே
(
கம்ப
.
நகர்
நீங்கு
.179
)
என்புழியும்
இப்
பொருட்டாதல்
காண்க
.
இன்பம்
-
இசைப்பாடலால்
உண்டாகும்
இன்பம்
சுடர்
கிரணம்
.
ஞாயிறுபோல
இழிந்து
எனக்
கூட்டி
சூரியனைப்போல
ஒளி
யுருவத்தோடு
வலிய
எழுந்தருளிவந்து
எனவுரைக்க
.
கரும்பினும்
இனியான்
தன்னைக்
காய்கதிர்ச்
சோதியானை
'
எனத்
தேவாரத்தும்
(
திருநாவு.74-3
)
வருதல்
காண்க
.
ஆசை
அறுப்பான்
-பற்றினை
ஒழிப்
பவன்
ஆசை
ஒழிக்கப்படவேண்டுமென்பது
வாசியு
மூசியும்
பேசி
வகையினால்
பேசி
யிருந்து
பிதற்றிப்
பயனில்லை
ஆசையும்
அன்பும்
அறுமின்
அறுத்தபின்
ஈசன்
இருந்த
இடம்எளி
தாமே
.
ஆசை
யறுமின்கள்
ஆசை
யறுமின்கள்
ஈசனோ
டாயினும்
ஆசை
யறுமின்கள்
ஆசை
படப்பட
ஆய்வருந்
துன்பங்கள்
ஆசை
விடவிட
ஆனந்த
மாமே
எனத்
திருமந்திரத்தும்
வருவன
காண்க
.
2613
2615