திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

குயிற்பத்து THIS இன்பந்தருவன் என்பதனை இறைவன்செயலாகக் கூறுவாருமுளர். அவர், முழுதாளி அன்பன் ஆனந்தன் முதலியனபோலப் பெயராகாது அது எதிர்காலத் தன்மையொருமை வினைமுற்றாய் நிற்குமாற்றினை உணரார்.இனி, குயிலே நீ கூவினால் உனக்கு இன்பந் தருவேன் என உரைக்கின் இஃது இரங்கற்றுறையாகாது ஆற்றுப்படையென்னும் புறப்பொருட்டுறையாகும் என்க. ஏழுலகும் எனப் பொதுப்படக்கூறினும் மேல் ஏழுலகும் கீழ் ஏழுல கும் கொள்ளப்படும். ஆளி - ஆள்பவன். அன்பன் - அடியார் செய்யும் அன்புருவானவன். அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 861 எனத் திருமந்திரத்தும் வருதல் காண்க. (270) அமுதின் அமுதளித்தூறும் ஆனந்தன் என்றது உள்ளத்திலே இனிமையைத் தந்து பெருகுகின்ற இன்பவடிவினன் என்றவாறு. ''எய்தினர்க் காரமு தளிப்போன்" (அண்ட. 101) "எங்கு நிறைந்தமு தூறுப ரஞ்சுடர்" (திருப்படை. 8) "அத்தன் ஆனந்தன் அமுதன்'' (திருவெம்பா.3) என அடிகள் அருளியமை காண்க. வான் வந்த - சிதாகாயத்தினின்றும் வந்த '"வான் வந்த வார் கழலே" (அம்மானை.4)என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. தேவன் - ஒளியுருவன். நன்பொன் மணிச்சுவடு - நன் பொன்னினாலும் மாணிக்கத்தினா லும் அமைந்த அங்கி. ஒத்த என்றது அங்ஙனம் அமைந்த அங்கியை அணிந்தாற்போன்ற இயற்கைவடிவினைக் குறித்தது. பரிமேல் வரு வானை என எதிர்காலத்தாற் கூறினும் வந்தானை என்பது பொருளா கக் கொள்க. "பரிமிசை வந்த வள்ளல்''(குயிற். 7) என அடிகள் அருளி யமையுங் காண்க. கொம்பின் மிழற்றுங் குயிலே, இன்பந் தருவன் குயிலே என முகங்கொள்ளுமாறு இருவிளிகள் வந்தன. இதன்கண், "குயிலே கோகழி நாதனைக் கூவாய்" என்பதனால் ஆத் துமவிரக்கம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 6 352 உன்னை யுகப்பன் குயிலே யுன்றுணைத் தோழியு மாவன் பொன்னை யழித்தநன் மேனிப் புகழிற் றிகழு மழகன் மன்னன் பரிமிசை வத்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூவாய். ப - ரை குயிலே உன்னை உகப்பன் - குயிலே உன்னை விரும்பு வேன்; உன் துணை தோழியும் ஆவன் - உனக்குத் துணையாகிய தோழி
குயிற்பத்து THIS இன்பந்தருவன் என்பதனை இறைவன்செயலாகக் கூறுவாருமுளர் . அவர் முழுதாளி அன்பன் ஆனந்தன் முதலியனபோலப் பெயராகாது அது எதிர்காலத் தன்மையொருமை வினைமுற்றாய் நிற்குமாற்றினை உணரார்.இனி குயிலே நீ கூவினால் உனக்கு இன்பந் தருவேன் என உரைக்கின் இஃது இரங்கற்றுறையாகாது ஆற்றுப்படையென்னும் புறப்பொருட்டுறையாகும் என்க . ஏழுலகும் எனப் பொதுப்படக்கூறினும் மேல் ஏழுலகும் கீழ் ஏழுல கும் கொள்ளப்படும் . ஆளி - ஆள்பவன் . அன்பன் - அடியார் செய்யும் அன்புருவானவன் . அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே . 861 எனத் திருமந்திரத்தும் வருதல் காண்க . ( 270 ) அமுதின் அமுதளித்தூறும் ஆனந்தன் என்றது உள்ளத்திலே இனிமையைத் தந்து பெருகுகின்ற இன்பவடிவினன் என்றவாறு . ' ' எய்தினர்க் காரமு தளிப்போன் ( அண்ட . 101 ) எங்கு நிறைந்தமு தூறுப ரஞ்சுடர் ( திருப்படை . 8 ) அத்தன் ஆனந்தன் அமுதன் ' ' ( திருவெம்பா .3 ) என அடிகள் அருளியமை காண்க . வான் வந்த - சிதாகாயத்தினின்றும் வந்த ' வான் வந்த வார் கழலே ( அம்மானை .4 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . தேவன் - ஒளியுருவன் . நன்பொன் மணிச்சுவடு - நன் பொன்னினாலும் மாணிக்கத்தினா லும் அமைந்த அங்கி . ஒத்த என்றது அங்ஙனம் அமைந்த அங்கியை அணிந்தாற்போன்ற இயற்கைவடிவினைக் குறித்தது . பரிமேல் வரு வானை என எதிர்காலத்தாற் கூறினும் வந்தானை என்பது பொருளா கக் கொள்க . பரிமிசை வந்த வள்ளல் ' ' ( குயிற் . 7 ) என அடிகள் அருளி யமையுங் காண்க . கொம்பின் மிழற்றுங் குயிலே இன்பந் தருவன் குயிலே என முகங்கொள்ளுமாறு இருவிளிகள் வந்தன . இதன்கண் குயிலே கோகழி நாதனைக் கூவாய் என்பதனால் ஆத் துமவிரக்கம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 6 352 உன்னை யுகப்பன் குயிலே யுன்றுணைத் தோழியு மாவன் பொன்னை யழித்தநன் மேனிப் புகழிற் றிகழு மழகன் மன்னன் பரிமிசை வத்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூவாய் . - ரை குயிலே உன்னை உகப்பன் - குயிலே உன்னை விரும்பு வேன் ; உன் துணை தோழியும் ஆவன் - உனக்குத் துணையாகிய தோழி