திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை யுமாவேன். பொன்னை அழித்த நல் மேனி - அழகிய நிறத்தினால் பொன்னை வென்ற நல்ல திருமேனியையுடைய, புகழின் திகழும் அழ கன் - புகழினால் விளங்குகின்ற அழகனும், மன்னன் - உயிர்க்கு இறை வனும், பரிமிசை வந்த வள்ளல் - குதிரையின்மேல் வந்த அருட் கொடையாளனும், பெருந்துறை மேய தென்னவன் சேரலன் சோழன் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் பாண்டியனும் சேரனும் சோழனும், சீர் புயங்கன் - சிறந்த அரவு ஆபரணனுமாகிய இறைவனை,வர கூவாய் - நீ வரும்படி கூவி அழைப்பாயாக. 862 குயிலே உன்னை உகப்பன்; உனக்குத் தோழியுமாவேன்; பொன்னை அழித்த நல்ல திருமேனியையுடைய புகழினால் விளங்கும் அழகனும் உயிர்க்கு இறைவனும் குதிரைமேல் வந்த வள்ளலும் திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தென்னவனும் சேரனும் சோழ னும் சிறந்த அரவாபரணனுமாகிய இறைவனை இங்கே வரும்படி கூவி அழைப்பாயாக என்பதாம். SON CEATRICA உகத்தல் - விரும்புதல். " தன்னைப் பெரிதும் உகப்பன்" (தே. சுந் 73-2).உன்னை உகப்பன் குயிலே உன் துணைத் தோழியுமாவேன் என் றது ஆராத காதலினால் இறைவனை அழைப்பிக்குமாறு குயிலை நயந்து கூறியதாகும். தோழியுமாவன் என்றதனால் இறைவன்மேற் காதல் கொண்டாள் ஒருத்தியின் கூற்றாக அடிகள் இதனைக் கூறுதல் அறி யப்படும். இறைவன் திருமேனி பொன்னினும் மிக்க நிறமும் ஒளியுமுடை மையால் 'பொன்னையளித்த நன் மேனி' என்றார். "பொன்னே திக ழுந் திருமேனி யெந்தாய்" (சத.59) 'பொன்மேனி நெடுந் தகையே" (நீத். 11) "பொன்னியலுந் திருமேனி" (திருப்படை. 6) என வருவன காண்க. மன்னன் - உயிரிறை. பசுபதி என்றவாறு. பரிமிசை வந்த வள்ளல் - குதிரையின்மேல் ஏறி வந்த வள்ளல். (கீர்த்தி.116) (பாண்டிப்.1) (பண்டாய.2) '"பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்" "பரிமேற் கொண்ட சேவகனார்” 'பரியின் மேல்வந்த வள்ளல்" என அடிகள் அருளியமையுங் காண்க. பரி என்றது வேதக்குதிரையை. வள்ளல் என்றார் தன் திருவருளை வரையாது வழங்குதலின். "அருணிதி தரவரும் ஆனந்த மலையே" (திருப்பள்ளி. 2) என அடி கள் அருளியமை காண்க. பெருந்துறை மேய இறைவனைத் தென்னவன் என்றது இறை வன் சோமசுந்தர பாண்டியனாக அரசாண்டமை பற்றியாகும். "தென் னவன் எனையாளும் சிவனவன்" எனத் தேவாரத்தும் (நாவு. 134-5)
திருவாசக ஆராய்ச்சியுரை யுமாவேன் . பொன்னை அழித்த நல் மேனி - அழகிய நிறத்தினால் பொன்னை வென்ற நல்ல திருமேனியையுடைய புகழின் திகழும் அழ கன் - புகழினால் விளங்குகின்ற அழகனும் மன்னன் - உயிர்க்கு இறை வனும் பரிமிசை வந்த வள்ளல் - குதிரையின்மேல் வந்த அருட் கொடையாளனும் பெருந்துறை மேய தென்னவன் சேரலன் சோழன் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் பாண்டியனும் சேரனும் சோழனும் சீர் புயங்கன் - சிறந்த அரவு ஆபரணனுமாகிய இறைவனை வர கூவாய் - நீ வரும்படி கூவி அழைப்பாயாக . 862 குயிலே உன்னை உகப்பன் ; உனக்குத் தோழியுமாவேன் ; பொன்னை அழித்த நல்ல திருமேனியையுடைய புகழினால் விளங்கும் அழகனும் உயிர்க்கு இறைவனும் குதிரைமேல் வந்த வள்ளலும் திருப் பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தென்னவனும் சேரனும் சோழ னும் சிறந்த அரவாபரணனுமாகிய இறைவனை இங்கே வரும்படி கூவி அழைப்பாயாக என்பதாம் . SON CEATRICA உகத்தல் - விரும்புதல் . தன்னைப் பெரிதும் உகப்பன் ( தே . சுந் 73-2 ) .உன்னை உகப்பன் குயிலே உன் துணைத் தோழியுமாவேன் என் றது ஆராத காதலினால் இறைவனை அழைப்பிக்குமாறு குயிலை நயந்து கூறியதாகும் . தோழியுமாவன் என்றதனால் இறைவன்மேற் காதல் கொண்டாள் ஒருத்தியின் கூற்றாக அடிகள் இதனைக் கூறுதல் அறி யப்படும் . இறைவன் திருமேனி பொன்னினும் மிக்க நிறமும் ஒளியுமுடை மையால் ' பொன்னையளித்த நன் மேனி ' என்றார் . பொன்னே திக ழுந் திருமேனி யெந்தாய் ( சத .59 ) ' பொன்மேனி நெடுந் தகையே ( நீத் . 11 ) பொன்னியலுந் திருமேனி ( திருப்படை . 6 ) என வருவன காண்க . மன்னன் - உயிரிறை . பசுபதி என்றவாறு . பரிமிசை வந்த வள்ளல் - குதிரையின்மேல் ஏறி வந்த வள்ளல் . ( கீர்த்தி .116 ) ( பாண்டிப் .1 ) ( பண்டாய .2 ) ' பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும் பரிமேற் கொண்ட சேவகனார் ' பரியின் மேல்வந்த வள்ளல் என அடிகள் அருளியமையுங் காண்க . பரி என்றது வேதக்குதிரையை . வள்ளல் என்றார் தன் திருவருளை வரையாது வழங்குதலின் . அருணிதி தரவரும் ஆனந்த மலையே ( திருப்பள்ளி . 2 ) என அடி கள் அருளியமை காண்க . பெருந்துறை மேய இறைவனைத் தென்னவன் என்றது இறை வன் சோமசுந்தர பாண்டியனாக அரசாண்டமை பற்றியாகும் . தென் னவன் எனையாளும் சிவனவன் எனத் தேவாரத்தும் ( நாவு . 134-5 )