திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வளருதியோ - கண் வளருகின்றனையோ; துயில்கின்றனையோ. அரும் பெருஞ்சோதியைப் பாடக் கேட்டும் எழுந்து வாராமையின் 'வளருதியோ' என்றும் பாடிய பாட்டொலியைக் கேட்கும்தன்மை யில்லாத இரும்புச் செவியோ என்பார் 'வன்செவியோ நின்செவிதான்' என்றும் கூறுவாராயினர். என்செவி இரும்பினும் வலிது என அடி கள் பிறிதோரிடத்துக் கூறுதலும் காண்க. இனி, மரச்செவி என்று மமையும். எஃகுச்செவி, தோற்செவி, மரச்செவி என்னும் மூவகைச் செவிகளுள் மரச்செவி கேட்குந் தன்மையில்லாததென்பது "ஓட்டை மரச்செவியர் கேளார்" (சீவக. 1552) எனப்பிறரும் கூறுதலான் அறியலாம். செவி சாதியொருமையாதலின் செவிதான்என ஒருமை அசை பெற்றது. நின் செவிதான் வன்செவியோ எனமாற்றிக் கூட் டிப் பொருள்கொள்க. 490 மாதேவன் - தேவதேவனாகிய இறைவன். 'தேவதேவன் மெய்ச் சேவகன் தென்பெருந்துறை நாயகன்" (சென்னிப்.1) என அடி கள் பிறாண்டு அருளியமையுங் காண்க. வார்கழல் என்றார் - எண்ணு தற்கும் எட்டாத எழிலார் கழலாதலின். வீதிவாய் வாழ்த்திய வாழ்த் தொலிபோய்க் கேட்டலும் எனமாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க. போதார் அமளி- செங்கழுநீர் முதலியவற்றின் இதழ்கள் பொருந் தின படுக்கை. "தோடமை தூமடி விரித்த சேக்கை ” (நெடுநல்- 135) எனப்பிறரும் கூறுதல் காண்க, போது - அலரும் பருவத்தரும்பு. ' போதவிழ் புதுமலர் '' (மதுரைக் - 564) என வருதலுங் காண்க. ஈண்டு, பூவிதழ்களை உணர்த்தியது. புரண்டு விழுந்து எனச் சொல்வருவித்துரைக்க, இனி 'போதார் அமளி' என்பதற்கு பூப்போன்ற மென்மைத் தன்மை பொருந்திய படுக்கை எனவும் உரைக்கலாம். புரண்டு விம்மி விம்மி மெய்ம்மறந்து இங் ஙன் ஏதேனு மாகாள் கிடந்தாள் என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க. விம்மி விம்மி - பொருமிப் பொருமி; விசும்புற்ற திங்கட் கழு மழப் போன்றினி விம்மி விம்மி, யசும்புற்ற கண்ணோடலறாய் கிடந்து (198) என்னும் திருக்கோவையார் உரையில், விம்மி விம்மி என்ப தற்குப் பொருமிப் பொருமி எனப்பேராசிரியரும் ''இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாண், முலையக நனைப்ப விம்மிக், குழலினை வது போலழுதனள் பெரிதே (143) என்னும் புறநானூற்றுரையில் விம்மி என்பதற்குப் பொருமி என அதன் உரைகாரரும் உரைத்த மையுங் காண்க. பொருமிப் பொருமி அழுது என ஒரு சொல் வரு விக்க. மாதேவன் வார்கழல் வாழ்த்திய வாழ்த்தொலி போய்க் கேட்டவளவில் பத்தியின் மிகுதியால் பொருமிப் பொருமி அழுது தன்னை மறந்து யாதொன்றுஞ் செய்ய இயலாதவளாய் பரவசமாய்க் <
திருவாசக ஆராய்ச்சியுரை வளருதியோ - கண் வளருகின்றனையோ ; துயில்கின்றனையோ . அரும் பெருஞ்சோதியைப் பாடக் கேட்டும் எழுந்து வாராமையின் ' வளருதியோ ' என்றும் பாடிய பாட்டொலியைக் கேட்கும்தன்மை யில்லாத இரும்புச் செவியோ என்பார் ' வன்செவியோ நின்செவிதான் ' என்றும் கூறுவாராயினர் . என்செவி இரும்பினும் வலிது என அடி கள் பிறிதோரிடத்துக் கூறுதலும் காண்க . இனி மரச்செவி என்று மமையும் . எஃகுச்செவி தோற்செவி மரச்செவி என்னும் மூவகைச் செவிகளுள் மரச்செவி கேட்குந் தன்மையில்லாததென்பது ஓட்டை மரச்செவியர் கேளார் ( சீவக . 1552 ) எனப்பிறரும் கூறுதலான் அறியலாம் . செவி சாதியொருமையாதலின் செவிதான்என ஒருமை அசை பெற்றது . நின் செவிதான் வன்செவியோ எனமாற்றிக் கூட் டிப் பொருள்கொள்க . 490 மாதேவன் - தேவதேவனாகிய இறைவன் . ' தேவதேவன் மெய்ச் சேவகன் தென்பெருந்துறை நாயகன் ( சென்னிப் .1 ) என அடி கள் பிறாண்டு அருளியமையுங் காண்க . வார்கழல் என்றார் - எண்ணு தற்கும் எட்டாத எழிலார் கழலாதலின் . வீதிவாய் வாழ்த்திய வாழ்த் தொலிபோய்க் கேட்டலும் எனமாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க . போதார் அமளி- செங்கழுநீர் முதலியவற்றின் இதழ்கள் பொருந் தின படுக்கை . தோடமை தூமடி விரித்த சேக்கை ( நெடுநல் 135 ) எனப்பிறரும் கூறுதல் காண்க போது - அலரும் பருவத்தரும்பு . ' போதவிழ் புதுமலர் ' ' ( மதுரைக் - 564 ) என வருதலுங் காண்க . ஈண்டு பூவிதழ்களை உணர்த்தியது . புரண்டு விழுந்து எனச் சொல்வருவித்துரைக்க இனி ' போதார் அமளி ' என்பதற்கு பூப்போன்ற மென்மைத் தன்மை பொருந்திய படுக்கை எனவும் உரைக்கலாம் . புரண்டு விம்மி விம்மி மெய்ம்மறந்து இங் ஙன் ஏதேனு மாகாள் கிடந்தாள் என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க . விம்மி விம்மி - பொருமிப் பொருமி ; விசும்புற்ற திங்கட் கழு மழப் போன்றினி விம்மி விம்மி யசும்புற்ற கண்ணோடலறாய் கிடந்து ( 198 ) என்னும் திருக்கோவையார் உரையில் விம்மி விம்மி என்ப தற்குப் பொருமிப் பொருமி எனப்பேராசிரியரும் ' ' இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாண் முலையக நனைப்ப விம்மிக் குழலினை வது போலழுதனள் பெரிதே ( 143 ) என்னும் புறநானூற்றுரையில் விம்மி என்பதற்குப் பொருமி என அதன் உரைகாரரும் உரைத்த மையுங் காண்க . பொருமிப் பொருமி அழுது என ஒரு சொல் வரு விக்க . மாதேவன் வார்கழல் வாழ்த்திய வாழ்த்தொலி போய்க் கேட்டவளவில் பத்தியின் மிகுதியால் பொருமிப் பொருமி அழுது தன்னை மறந்து யாதொன்றுஞ் செய்ய இயலாதவளாய் பரவசமாய்க் <