திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

19. திருத்தசாங்கம் அடிமைகொண்ட முறைமை திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது இது தில்லையில் அருளிச்செய்யப்பட்டது. தசாங்கம் என்பது அர சர்க்குரிய பத்து உறுப்புக்களான மலை, ஆறு,நாடு,ஊர்,மாலை. குதிரை, யானை, கொடி, முரசு செங்கோல் என்பவற்றைபத்து நேரிசை வெண்பாவால் பாடும் ஒரு பிரபந்தமாகும். இது தெய்வப் பேரரசராகிய இறைவரது பெயர், நாடு, ஊர், ஆறு,மலை, புரவி, படை, முரசு, தார், கொடி. என்னும் பத்து அங்கங்களையும் அமைத்து பத்து நேரிசை வெண்பாக்களால் இறைவன்மீது அருளிச் செய்யப் பட்ட ஒரு பிரபந்தமாகும். கிளியினைப் இதன் உள்ளுறை அடிமைகொண்ட முறைமை எனக் குறிக்கப்பட் டுள்ளது. இதனை அடிகள் கிளியை முன்னிலைப்படுத்து அதற்குக் கூறும் முறையில் அமைத்துள்ளனர். சோலையிலுள்ள பார்த்துத் தம்மை ஆட்கொண்ட இறைவனது பெயர் முதலியவற் றைக் கூறுமாறு உரைத்தலின் அடிமை கொண்ட முறைமை என்பது தம்மை அடிமைகொண்ட இறைவனது பெயர் முதலியவற்றைக் கூறும் முறைமை எனப் பொருள் கொள்ளவேண்டியதாயுள்ளது. இவ் வாறே திருவாசகச் சிறப்புடையாரும் "பேர்நாடூராறுமலை பெயரூர்தி படைமுரசு தார்கொடியெலாமரற்குச் சாற்றறசாங் கமதாம் எனக் கூறியிருத்தலுங் காண்க. 356 நேரிசை வெண்பா திருச்சிற்றம்பலம் ஏரா ரிளங்கிளியே யெங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமந் தேர்த்துரையாய் ஆரூான் செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிர : னென்று. ARE ப - ரை : ஏர் ஆர் இளங் கிளியே - அழகு பொருந்திய இளங் கிளியே, எங்கள் பெருந்துறைக்கோன் சீர் ஆர் திருநாமம் தேர்ந்து உரையாய் - எங்கள் திருப்பெருந்துறைக்கரசனாகிய இறைவனது சிறப்பாக அவனுக்கு அமைந்த திருநாமத்தினை ஆராய்ந்து சொல் வாயாக என்று தலைவி வினாவ, வெண்மலரான் பாற்கடலான் - வெண் டாமரை மலரை ஆசனமாகவுடைய பிரமனும், பாற்கடலையுடைய திருமாலும், செம்பெருமான் ஆரூரன் செப்புவ போல் - முறையே செம்பெருமான் என்றும் ஆரூரன் என்றும் சொல்வதுபோல, பெருமான் தேவர் பிரான் என்று - எம்பெருமானது சீரார்திருநாமம் தேவர்பிரான் என்று தெளிவாயாக என்று கிளிகூறியது. எம்
19. திருத்தசாங்கம் அடிமைகொண்ட முறைமை திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது இது தில்லையில் அருளிச்செய்யப்பட்டது . தசாங்கம் என்பது அர சர்க்குரிய பத்து உறுப்புக்களான மலை ஆறு நாடு ஊர் மாலை . குதிரை யானை கொடி முரசு செங்கோல் என்பவற்றைபத்து நேரிசை வெண்பாவால் பாடும் ஒரு பிரபந்தமாகும் . இது தெய்வப் பேரரசராகிய இறைவரது பெயர் நாடு ஊர் ஆறு மலை புரவி படை முரசு தார் கொடி . என்னும் பத்து அங்கங்களையும் அமைத்து பத்து நேரிசை வெண்பாக்களால் இறைவன்மீது அருளிச் செய்யப் பட்ட ஒரு பிரபந்தமாகும் . கிளியினைப் இதன் உள்ளுறை அடிமைகொண்ட முறைமை எனக் குறிக்கப்பட் டுள்ளது . இதனை அடிகள் கிளியை முன்னிலைப்படுத்து அதற்குக் கூறும் முறையில் அமைத்துள்ளனர் . சோலையிலுள்ள பார்த்துத் தம்மை ஆட்கொண்ட இறைவனது பெயர் முதலியவற் றைக் கூறுமாறு உரைத்தலின் அடிமை கொண்ட முறைமை என்பது தம்மை அடிமைகொண்ட இறைவனது பெயர் முதலியவற்றைக் கூறும் முறைமை எனப் பொருள் கொள்ளவேண்டியதாயுள்ளது . இவ் வாறே திருவாசகச் சிறப்புடையாரும் பேர்நாடூராறுமலை பெயரூர்தி படைமுரசு தார்கொடியெலாமரற்குச் சாற்றறசாங் கமதாம் எனக் கூறியிருத்தலுங் காண்க . 356 நேரிசை வெண்பா திருச்சிற்றம்பலம் ஏரா ரிளங்கிளியே யெங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமந் தேர்த்துரையாய் ஆரூான் செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிர : னென்று . ARE - ரை : ஏர் ஆர் இளங் கிளியே - அழகு பொருந்திய இளங் கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீர் ஆர் திருநாமம் தேர்ந்து உரையாய் - எங்கள் திருப்பெருந்துறைக்கரசனாகிய இறைவனது சிறப்பாக அவனுக்கு அமைந்த திருநாமத்தினை ஆராய்ந்து சொல் வாயாக என்று தலைவி வினாவ வெண்மலரான் பாற்கடலான் - வெண் டாமரை மலரை ஆசனமாகவுடைய பிரமனும் பாற்கடலையுடைய திருமாலும் செம்பெருமான் ஆரூரன் செப்புவ போல் - முறையே செம்பெருமான் என்றும் ஆரூரன் என்றும் சொல்வதுபோல பெருமான் தேவர் பிரான் என்று - எம்பெருமானது சீரார்திருநாமம் தேவர்பிரான் என்று தெளிவாயாக என்று கிளிகூறியது . எம்