திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கிளியே! எங்கள் பெருந்துறைக் கோனது சிறப்பாக அமைந்த திருநாமத்தினை ஆராய்ந்து சொல்வாயாக என்று தலைவி வினாவ. பிரமனும் திருமாலும் முறையே செம்பெருமான் என்றும் ஆரூரன் என்றும் சொல்லுவதுபோல, எம்பெருமானது சீரார் திருநாமம் தேவர் பிரான் என்று தெளிவாயாக என்று கிளி கூறியது. 870 ஏர் - அழகு, இலங்கே ரெல்வளை" (கலி. 46 -27) என்புழிப் போல. ஏரார் இளங்கிளியே என விளித்தது அதனை முகங்கொண்டு மகிழ்வித்துக் கேள்விக்கு விடை கூறுவிக்கும் பொருட்டாகும். பெருந் துறைக்கோன் என்றது பரமாசாரியராய்த் திருப்பெருந்துறையில் எழுந்தருளிவந்த இறைவனைக் குறித்தது. 'சீரார்' என்னும் அடை இறைவனுக்கே உரிய சிறப்புப் பெயரைக் குறித்தது. தேர்ந்து- ஆராய்ந்து. வெண்மலரான் செம்பெருமான், பாற்கடலான் ஆரூரன் செப்புவ போல் என எதிர் நிரைநிறையை முறை நிரைநிறையாக்கிப் பொருள் கொள்க. திருமாலின் உந்திக்கமலத்துதித்த நான்முகனைச் *செம்மல ரான் என்னாது வெண்மலரான் என்றது அவன் படைத்தற் றொழிலைத் தொடங்கும்போது வெண்டாமரை மலரில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியொடு கூடியவனாதல் பற்றியென்க. அவன் படைத்தற்றொழில் செய்யும்போது பசுமேனி உமையோடு கூடிய பவளவண்ணனாகத் தியா னித்தலின் அவன் 'செம்பெருமான்' எனக் கூறுவானாயினன். பாற்கடலிற் பள்ளிகொள்ளும் திருமால் காத்தற்றொழிலைப் பெற்றுக்கொள்ளுங்கால் தமது திருமார்பில் வைத்து வழிபட்ட சோமாஸ்கந்த மூர்த்தியைத் தியானிப்பவராதலால் அம்மூர்த்தி இந் திரன் வாயிலாக முசுகுந்தச் சக்கரவர்த்தியிடத்து வந்து அவனால் திருவாரூரில் தாபிக்கப்பெற்ற தொடர்புபற்றி 'ஆரூரன்' எனக் கூறு வானாயினன். தேவர்பிரான் என்பது இந்திரனைக் குறியாது தேவர்களுக்கெல் லாம் தலைவராகிய மகாதேவனையே குறித்தது. இதனை இப்பதிகத்து முதற்பதிகத்தின் இறுதியில் "செந்தழல்போற் றிருமேனித் தேவர் பிரான்'" (குயிற்பத்து 10) என அடிகள் அருளியதும் வற்புறுத்தும். செப்புவது என்பது செப்புவ என இடைக் குறைந்து நின்றது. என்று என்பதற்கு என்று தெளி என ஒருசொல் வருவித்துரைக்க. இதன்கண் 'தேவர்பிரான் என்று' என்பதனால் இறைவனது திரு நாமம் கூறப்பட்டது. 1 * பிரமன் செந்தாமரையில் வீற்றிருத்தல்.
திருவாசக ஆராய்ச்சியுரை கிளியே ! எங்கள் பெருந்துறைக் கோனது சிறப்பாக அமைந்த திருநாமத்தினை ஆராய்ந்து சொல்வாயாக என்று தலைவி வினாவ . பிரமனும் திருமாலும் முறையே செம்பெருமான் என்றும் ஆரூரன் என்றும் சொல்லுவதுபோல எம்பெருமானது சீரார் திருநாமம் தேவர் பிரான் என்று தெளிவாயாக என்று கிளி கூறியது . 870 ஏர் - அழகு இலங்கே ரெல்வளை ( கலி . 46 -27 ) என்புழிப் போல . ஏரார் இளங்கிளியே என விளித்தது அதனை முகங்கொண்டு மகிழ்வித்துக் கேள்விக்கு விடை கூறுவிக்கும் பொருட்டாகும் . பெருந் துறைக்கோன் என்றது பரமாசாரியராய்த் திருப்பெருந்துறையில் எழுந்தருளிவந்த இறைவனைக் குறித்தது . ' சீரார் ' என்னும் அடை இறைவனுக்கே உரிய சிறப்புப் பெயரைக் குறித்தது . தேர்ந்து ஆராய்ந்து . வெண்மலரான் செம்பெருமான் பாற்கடலான் ஆரூரன் செப்புவ போல் என எதிர் நிரைநிறையை முறை நிரைநிறையாக்கிப் பொருள் கொள்க . திருமாலின் உந்திக்கமலத்துதித்த நான்முகனைச் * செம்மல ரான் என்னாது வெண்மலரான் என்றது அவன் படைத்தற் றொழிலைத் தொடங்கும்போது வெண்டாமரை மலரில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியொடு கூடியவனாதல் பற்றியென்க . அவன் படைத்தற்றொழில் செய்யும்போது பசுமேனி உமையோடு கூடிய பவளவண்ணனாகத் தியா னித்தலின் அவன் ' செம்பெருமான் ' எனக் கூறுவானாயினன் . பாற்கடலிற் பள்ளிகொள்ளும் திருமால் காத்தற்றொழிலைப் பெற்றுக்கொள்ளுங்கால் தமது திருமார்பில் வைத்து வழிபட்ட சோமாஸ்கந்த மூர்த்தியைத் தியானிப்பவராதலால் அம்மூர்த்தி இந் திரன் வாயிலாக முசுகுந்தச் சக்கரவர்த்தியிடத்து வந்து அவனால் திருவாரூரில் தாபிக்கப்பெற்ற தொடர்புபற்றி ' ஆரூரன் ' எனக் கூறு வானாயினன் . தேவர்பிரான் என்பது இந்திரனைக் குறியாது தேவர்களுக்கெல் லாம் தலைவராகிய மகாதேவனையே குறித்தது . இதனை இப்பதிகத்து முதற்பதிகத்தின் இறுதியில் செந்தழல்போற் றிருமேனித் தேவர் பிரான் ' ( குயிற்பத்து 10 ) என அடிகள் அருளியதும் வற்புறுத்தும் . செப்புவது என்பது செப்புவ என இடைக் குறைந்து நின்றது . என்று என்பதற்கு என்று தெளி என ஒருசொல் வருவித்துரைக்க . இதன்கண் ' தேவர்பிரான் என்று ' என்பதனால் இறைவனது திரு நாமம் கூறப்பட்டது . 1 * பிரமன் செந்தாமரையில் வீற்றிருத்தல் .