திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

359 திருத்தசாங்கம் செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைகேர் ஐயன் பெருந்துறையா னாறுரையாய் - தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் காணுடையா னாறு. 873 ப- ரை. செய்ய வாய் பை சிறகின் செல்வீ - சிவந்த அலகினையும் பசிய சிறகினையுமுடைய செல்வியே, நம் சிந்தை சேர் ஐயன் பெருந் துறையான் ஆறு உரையாய் - நமது உள்ளத்து உறையும் தலைவனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனுமாகிய இறைவனது ஆற்றினைக் கூறுவாயாக எனத் தலைவி வினாவ, தையலாய் - பெண்ணே, சிந்தை மலம் கழுவ வந்து இழியும் - அன்பரது மன மாசினை நீக்கும் பொருட்டு வந்து பாய்கின்ற, வான்வந்த ஆனந்தம் - சிதாகாயத்தி னின்றும் வ பேரின்பப்பெருக்கே, உடையான் ஆறு காண் - நம்மை உடையவனது ஆறு என அறிவாயாக எனக் கிளி கூறியது. செல்வீ! நமது மனத்தில் உறையும் ஐயனும் திருப்பெருந்துறை யில் எழுந்தருளியிருப்பவனுமாகிய இறைவனது ஆற்றினைக் கூறுவா யாக எனத் தலைவி வினாவ, தையலாய், அன்பரது மனமாசினை நீக்கும் பொருட்டு வந்து பாய்கின்ற சிதாகாயத்தினின்றும வந்த பேரின்பப் பெருக்கே நம்மை உடையவனது ஆறு என அறிவாயாக எனக் கிளி கூறியது. செய்யவாய் என்றது சிவந்த அலகினை. ''கிஞ்சுகவா யஞ்சுகமே" (தசாங்.5) என வருதலும் காண்க. பைஞ்சிறகு - பச்சை நிறமு டைய சிறகு. செல்வீ - பெண்கிளிப்பிள்ளையே, செல்வீ என உயர்திணைப்பெய ரால் கிளியை அழைத்தது உவப்புப்பற்றி வந்த திணைவழுவமைதி. வான் வந்த ஆனந்தம் என இயையும். வான் - சிதாகாயம்; இறைவனது இருப்பிடம். சிந்தை மலம் - மனமாசு, என்றது அகப் பற்றுப் புறப்பற்றுக்களை. "சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனை யாண்ட அத்தன்" (அச்சோ. 1) என வருதலுங் காண்க. ஆனந்தம் இறைவனது சொரூப இலக்கணமாதலின் அதன் பெருக்கே இறைவ னது ஆறு எனப்பட்டது. இதன் கண். இறைவனது ஆறு கூறப்பட்டது. ஆனந்தங்காணுடையான் ஆறு" என்பதனால் 360 கிஞ்சுகவா பஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் மஞ்சன் மருவு மலைபகராய் - நெஞ்சத் திருளகல வாள்வீசி யின்பமரு முத்தி யருளுமலை யென்பதுகா ணாய்ந்து. 4 ப - ரை: கிஞ்சுக வாய் அம்சுகமே - முருக்கம்பூப்போன்ற சிவந்த அலகினையுடைய அழகிய கிளியே, கேடு இல் பெருந்துறைக்கோன்- அழிவில்லாத திருப்பெருந்துறைக்குத்தலைவனும், மஞ்சன் மருவும் மலை
359 திருத்தசாங்கம் செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைகேர் ஐயன் பெருந்துறையா னாறுரையாய் - தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் காணுடையா னாறு . 873 ப- ரை . செய்ய வாய் பை சிறகின் செல்வீ - சிவந்த அலகினையும் பசிய சிறகினையுமுடைய செல்வியே நம் சிந்தை சேர் ஐயன் பெருந் துறையான் ஆறு உரையாய் - நமது உள்ளத்து உறையும் தலைவனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனுமாகிய இறைவனது ஆற்றினைக் கூறுவாயாக எனத் தலைவி வினாவ தையலாய் - பெண்ணே சிந்தை மலம் கழுவ வந்து இழியும் - அன்பரது மன மாசினை நீக்கும் பொருட்டு வந்து பாய்கின்ற வான்வந்த ஆனந்தம் - சிதாகாயத்தி னின்றும் பேரின்பப்பெருக்கே உடையான் ஆறு காண் - நம்மை உடையவனது ஆறு என அறிவாயாக எனக் கிளி கூறியது . செல்வீ ! நமது மனத்தில் உறையும் ஐயனும் திருப்பெருந்துறை யில் எழுந்தருளியிருப்பவனுமாகிய இறைவனது ஆற்றினைக் கூறுவா யாக எனத் தலைவி வினாவ தையலாய் அன்பரது மனமாசினை நீக்கும் பொருட்டு வந்து பாய்கின்ற சிதாகாயத்தினின்றும வந்த பேரின்பப் பெருக்கே நம்மை உடையவனது ஆறு என அறிவாயாக எனக் கிளி கூறியது . செய்யவாய் என்றது சிவந்த அலகினை . ' ' கிஞ்சுகவா யஞ்சுகமே ( தசாங் .5 ) என வருதலும் காண்க . பைஞ்சிறகு - பச்சை நிறமு டைய சிறகு . செல்வீ - பெண்கிளிப்பிள்ளையே செல்வீ என உயர்திணைப்பெய ரால் கிளியை அழைத்தது உவப்புப்பற்றி வந்த திணைவழுவமைதி . வான் வந்த ஆனந்தம் என இயையும் . வான் - சிதாகாயம் ; இறைவனது இருப்பிடம் . சிந்தை மலம் - மனமாசு என்றது அகப் பற்றுப் புறப்பற்றுக்களை . சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனை யாண்ட அத்தன் ( அச்சோ . 1 ) என வருதலுங் காண்க . ஆனந்தம் இறைவனது சொரூப இலக்கணமாதலின் அதன் பெருக்கே இறைவ னது ஆறு எனப்பட்டது . இதன் கண் . இறைவனது ஆறு கூறப்பட்டது . ஆனந்தங்காணுடையான் ஆறு என்பதனால் 360 கிஞ்சுகவா பஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் மஞ்சன் மருவு மலைபகராய் - நெஞ்சத் திருளகல வாள்வீசி யின்பமரு முத்தி யருளுமலை யென்பதுகா ணாய்ந்து . 4 - ரை : கிஞ்சுக வாய் அம்சுகமே - முருக்கம்பூப்போன்ற சிவந்த அலகினையுடைய அழகிய கிளியே கேடு இல் பெருந்துறைக்கோன் அழிவில்லாத திருப்பெருந்துறைக்குத்தலைவனும் மஞ்சன் மருவும் மலை