திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பகராய் - சர்வ வல்லமையுடையவனுமாகிய இறைவன் எழுந்தருளி யிருக்கும் மலையைச் சொல்வாயாக எனத் தலைவி வினாவ, நெஞ்சத்து இருள் அகல - மனத்தின்கணுள்ள அஞ்ஞானம் நீங்க, வாள் வீசி - வெள்ளிய ஞான ஒளியினை வீசி, இன்பு அமரும் முத்தி அருளும்மலை - இன்பம் நிலைபெற்ற வீடுபேற்றினை அருளுகின்ற இறைவனது திருக்கை லாசமலையே அவன் மலை என்பதனை, ஆய்ந்து காண் - ஆராய்ந்து அறி வாயாக எனக் கிளி கூறியது. 874 கிஞ்சுக வாயையுடைய அழகிய கிளியே! அழிவில்லாத திருப் பெருந்துறைத் தலைவனும் சர்வவல்லமையுடையவனுமாகிய இறை வன் எழுந்தருளியிருக்கும் மலையினைக் கூறுவாயாக என்று தலைவி வினாவ, நெஞ்சத்து இருள் நீங்க ஞான ஒளியைப் பரப்பி இன்பம் நிலை பெற்ற வீடு பேற்றினை அருளுகின்ற இறைவனது கைலாயமலையே அவன் மலை என்பதனை ஆராய்ந்து அறிவாயாக எனக் கிளி கூறியது. கிஞ்சுகம் - முண்முருக்கு. 'கவிரே கிஞ்சுக முண்முருக் காகும்'' எனப் பிங்கலந்தையில் (9-46) வருதல் காண்க. ஈண்டு அதன் பூவுக்கு ஆகுபெயர். அம் சுகம் - அழகிய கிளி. கேடில் என்பது பெருந்துறைக் கோனுக்கு அடை "கேடிலி யுமைகோன்" (ஞான. 377-3) 'கேடிலி யைக் கீழ்வேளூராளுங்கோவை'" (நாவு.303-6) எனத் தேவாரத்தும் வருவன காண்க. மஞ்சன் - மைந்தன். சர்வவல்லமையுடையவன் என் பது பொருள். எதுகைநோக்கிப் போலியாயிற்று. நெஞ்சத்திருள்- அஞ்ஞானம். வாள் - ஞானவாள். 'ஞானவா ளேந்துமையா '" (திருப் படையெழுச்சி 1) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. நெஞ் சத்து இருளகல வாள் வீசுதலும் இன்பமரு முத்தி அருளுதலும் இறை வற்கும் திருக்கைலாய மலைக்கும் பொதுவாக நின்றன. இறைவன் மலை கைலையாதல், "நெற்றித்தனிக்க ணொருத்தன் பயிலுங் கயிலை மலை" (62) எனத் திருக்கோவையாரில் அடிகள் அருளியமையானும் தெளியப்படும். இதன்கண், "முத்தியருளுமலை" என்பதனால் இறைவன் மலை கூறப் 5 பட்டது. 361 இப்பாடே வந்தியம்பு கூடுபுக லென்கிளியே ஒப்பாடாச் சீருடையா னூர்வதென்னே - எப்போதும் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பண் ணேத்திசைப்ப வான் புரவி யூரு மகிழ்ந்து. ப - ரை. என் கிளியே - என்னுடைய கிளியே, கூடு புகல் - நின் கூட்டினுள் புகற்க; இப்பாடே வந்து இயம்பு - இப்பக்கத்தேவந்து கூறு வாயாக.ஒப்பு ஆடா சீர் உடையான் ஊர்வது என் - ஒப்பில்லாத
திருவாசக ஆராய்ச்சியுரை பகராய் - சர்வ வல்லமையுடையவனுமாகிய இறைவன் எழுந்தருளி யிருக்கும் மலையைச் சொல்வாயாக எனத் தலைவி வினாவ நெஞ்சத்து இருள் அகல - மனத்தின்கணுள்ள அஞ்ஞானம் நீங்க வாள் வீசி - வெள்ளிய ஞான ஒளியினை வீசி இன்பு அமரும் முத்தி அருளும்மலை - இன்பம் நிலைபெற்ற வீடுபேற்றினை அருளுகின்ற இறைவனது திருக்கை லாசமலையே அவன் மலை என்பதனை ஆய்ந்து காண் - ஆராய்ந்து அறி வாயாக எனக் கிளி கூறியது . 874 கிஞ்சுக வாயையுடைய அழகிய கிளியே ! அழிவில்லாத திருப் பெருந்துறைத் தலைவனும் சர்வவல்லமையுடையவனுமாகிய இறை வன் எழுந்தருளியிருக்கும் மலையினைக் கூறுவாயாக என்று தலைவி வினாவ நெஞ்சத்து இருள் நீங்க ஞான ஒளியைப் பரப்பி இன்பம் நிலை பெற்ற வீடு பேற்றினை அருளுகின்ற இறைவனது கைலாயமலையே அவன் மலை என்பதனை ஆராய்ந்து அறிவாயாக எனக் கிளி கூறியது . கிஞ்சுகம் - முண்முருக்கு . ' கவிரே கிஞ்சுக முண்முருக் காகும் ' ' எனப் பிங்கலந்தையில் ( 9-46 ) வருதல் காண்க . ஈண்டு அதன் பூவுக்கு ஆகுபெயர் . அம் சுகம் - அழகிய கிளி . கேடில் என்பது பெருந்துறைக் கோனுக்கு அடை கேடிலி யுமைகோன் ( ஞான . 377-3 ) ' கேடிலி யைக் கீழ்வேளூராளுங்கோவை ' ( நாவு.303-6 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . மஞ்சன் - மைந்தன் . சர்வவல்லமையுடையவன் என் பது பொருள் . எதுகைநோக்கிப் போலியாயிற்று . நெஞ்சத்திருள் அஞ்ஞானம் . வாள் - ஞானவாள் . ' ஞானவா ளேந்துமையா ' ( திருப் படையெழுச்சி 1 ) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . நெஞ் சத்து இருளகல வாள் வீசுதலும் இன்பமரு முத்தி அருளுதலும் இறை வற்கும் திருக்கைலாய மலைக்கும் பொதுவாக நின்றன . இறைவன் மலை கைலையாதல் நெற்றித்தனிக்க ணொருத்தன் பயிலுங் கயிலை மலை ( 62 ) எனத் திருக்கோவையாரில் அடிகள் அருளியமையானும் தெளியப்படும் . இதன்கண் முத்தியருளுமலை என்பதனால் இறைவன் மலை கூறப் 5 பட்டது . 361 இப்பாடே வந்தியம்பு கூடுபுக லென்கிளியே ஒப்பாடாச் சீருடையா னூர்வதென்னே - எப்போதும் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பண் ணேத்திசைப்ப வான் புரவி யூரு மகிழ்ந்து . - ரை . என் கிளியே - என்னுடைய கிளியே கூடு புகல் - நின் கூட்டினுள் புகற்க ; இப்பாடே வந்து இயம்பு - இப்பக்கத்தேவந்து கூறு வாயாக.ஒப்பு ஆடா சீர் உடையான் ஊர்வது என் - ஒப்பில்லாத