திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கோன் - குற்றம் இல்லாத திருப்பெருந்துறைத் தலைவனாகிய இறை வன், மாற்றாரை வெல்லும் படை பகராய்- பகைவரை வெல்லுகின்ற படையினைச் சொல்லுவாயாக எனத் தலைவி வினாவ, ஏற்றார் அழுக்கு அடையா நெஞ்சு உருக - தம்பால் வேண்டிக்கொண்ட அன்பர்களது குற்றமற்ற நெஞ்சம் உருகும் வண்ணம், மும்மலங்கள் பாயும் கழுக் கடை - மும்மலங்களையும் பாய்ந்து அழிக்கும் சூலப்படையே, கைக் கொள் படை - அவர் திருக்கரத்தில் கொள்ளுகின்ற படையாகும் எனக் கிளி கூறியது. 876 தேன்போலும் இனிய மொழிகளைப் பேசுகின்ற கிளியே! திருப் பெருந் துறைக்குத் தலைவனாகிய இறைவன் மாற்றாரை வெற்றிகொள் ளும் படையினைச் சொல்லுவாயாக எனத் தலைவி வினாவ, தன்னை இரந்த அன்பர்களது குற்றமற்ற நெஞ்சம் உருகும்வண்ணம் இவ்வடி யாரது மும்மலங்களையும் பாய்ந்து அழிக்கும் சூலப்படையே அவர் திருக்கரத்தில் கொள்ளுகின்ற படையாகும் என்று அறிவாயாக எனக் கிளி கூறியது.கு கோற்றேன் பொந்துத்தேனினும் சுவைமிகுதியுடைமையான் அது போன்ற இனிமையையுடைய மொழிக்கு உவமையாயிற்று."கோற்றே னெனக் கென்கோ குரைகடல்வா யமுதென்கோ' (உயிருண்ணி 8). "அம்பலவன் மலையிற் கோலாப்பிரச மன்னாட்கு” (திருக்கோ. 110) என அடிகள் பிறாண்டும் இதனைக் கூறுதல் காண்க. கோது - குற்றம். இறைவன் குற்றங்களினீங்கியவனாதலின் "கோதில் பெருந்துறைக் கோன்" என்றார். ஏற்றார் என்றது மும்மல நீக்கத்தினை வேண்டுதல் செய்து நிற்கும் அன்பர்களை அழுக்கடையா நெஞ்சு - குற்றமற்ற தூய உள்ளம். மும்மலம் - ஆணவம் கன்மம் மாயை. கழுக்கடை - திரிசூலம். திரிசூலத்தின் முச்சுடர்களும் இச்சை ஞானம் கிரியை என்ப வற்றை முறையே குறிப்பனவாகும். இச்சாசத்தியால், மாயாமலமும் ஞானசத்தியால் ஆணவமலமும், கிரியாசத்தியால் கன்மமலமும் நீங்குமென்க. என்றது ஆன்மாவின் இச்சை இறைவன்பாற் செல்ல மாயாமலநீக்கமும், ஞானம் இறைவன்பாற் செல்ல ஆணவமல நீக்க மும் கிரியை இறைவன்பாற் செல்ல கன்ம மல நீக்கமும் குறிப்ப தாகும். கழுக்கடை இறைவன் கைக்கொள்படையாதல். 'கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும்' (கீர்த்தி. 110) கதிரை மறைத் தன்ன சோதி சுழுக்கடை கைப்பிடித்து" (பாண்டிப். 2, "சடையானே தழலாடீ தயங்கு சூலப்படையானே" (புலம்பல். 2) என வருவனவற் றாலுமறிக. இதன் கண், 'கழுக்கடை காண் கைக்கொள்படை" என்பதனால் இறைவன் படை கூறப்பட்டது. y
திருவாசக ஆராய்ச்சியுரை கோன் - குற்றம் இல்லாத திருப்பெருந்துறைத் தலைவனாகிய இறை வன் மாற்றாரை வெல்லும் படை பகராய்- பகைவரை வெல்லுகின்ற படையினைச் சொல்லுவாயாக எனத் தலைவி வினாவ ஏற்றார் அழுக்கு அடையா நெஞ்சு உருக - தம்பால் வேண்டிக்கொண்ட அன்பர்களது குற்றமற்ற நெஞ்சம் உருகும் வண்ணம் மும்மலங்கள் பாயும் கழுக் கடை - மும்மலங்களையும் பாய்ந்து அழிக்கும் சூலப்படையே கைக் கொள் படை - அவர் திருக்கரத்தில் கொள்ளுகின்ற படையாகும் எனக் கிளி கூறியது . 876 தேன்போலும் இனிய மொழிகளைப் பேசுகின்ற கிளியே ! திருப் பெருந் துறைக்குத் தலைவனாகிய இறைவன் மாற்றாரை வெற்றிகொள் ளும் படையினைச் சொல்லுவாயாக எனத் தலைவி வினாவ தன்னை இரந்த அன்பர்களது குற்றமற்ற நெஞ்சம் உருகும்வண்ணம் இவ்வடி யாரது மும்மலங்களையும் பாய்ந்து அழிக்கும் சூலப்படையே அவர் திருக்கரத்தில் கொள்ளுகின்ற படையாகும் என்று அறிவாயாக எனக் கிளி கூறியது.கு கோற்றேன் பொந்துத்தேனினும் சுவைமிகுதியுடைமையான் அது போன்ற இனிமையையுடைய மொழிக்கு உவமையாயிற்று . கோற்றே னெனக் கென்கோ குரைகடல்வா யமுதென்கோ ' ( உயிருண்ணி 8 ) . அம்பலவன் மலையிற் கோலாப்பிரச மன்னாட்கு ( திருக்கோ . 110 ) என அடிகள் பிறாண்டும் இதனைக் கூறுதல் காண்க . கோது - குற்றம் . இறைவன் குற்றங்களினீங்கியவனாதலின் கோதில் பெருந்துறைக் கோன் என்றார் . ஏற்றார் என்றது மும்மல நீக்கத்தினை வேண்டுதல் செய்து நிற்கும் அன்பர்களை அழுக்கடையா நெஞ்சு - குற்றமற்ற தூய உள்ளம் . மும்மலம் - ஆணவம் கன்மம் மாயை . கழுக்கடை - திரிசூலம் . திரிசூலத்தின் முச்சுடர்களும் இச்சை ஞானம் கிரியை என்ப வற்றை முறையே குறிப்பனவாகும் . இச்சாசத்தியால் மாயாமலமும் ஞானசத்தியால் ஆணவமலமும் கிரியாசத்தியால் கன்மமலமும் நீங்குமென்க . என்றது ஆன்மாவின் இச்சை இறைவன்பாற் செல்ல மாயாமலநீக்கமும் ஞானம் இறைவன்பாற் செல்ல ஆணவமல நீக்க மும் கிரியை இறைவன்பாற் செல்ல கன்ம மல நீக்கமும் குறிப்ப தாகும் . கழுக்கடை இறைவன் கைக்கொள்படையாதல் . ' கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும் ' ( கீர்த்தி . 110 ) கதிரை மறைத் தன்ன சோதி சுழுக்கடை கைப்பிடித்து ( பாண்டிப் . 2 சடையானே தழலாடீ தயங்கு சூலப்படையானே ( புலம்பல் . 2 ) என வருவனவற் றாலுமறிக . இதன் கண் ' கழுக்கடை காண் கைக்கொள்படை என்பதனால் இறைவன் படை கூறப்பட்டது . y