திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

363 திருத்தசாங்கம் முதி இன்பான் மொழிக்கிள்ளா யெங்கள் பெருந்துறைக்கோன் முன்பான் முழங்கு முரசியம்பாய் - அன்பால் பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை. 877 ப: ரை. இன் பால் மொழி கிள்ளாய் - இனிய பால்போன்ற மொழியினையுடைய கிளியே, எங்கள் பெருந்துறைக் கோன் முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் - எங்கள் திருப்பெருந்துறைக்கரசனாகிய இறைவனது திருமுன்னிலையில் ஒலிக்கும் முரசினைச் சொல்லுதி எனத் தலைவி வினாவ, அன்பால் - இறைவன்மேற்கொண்ட அன்பினால், பிறவி பகை கலங்க - அடியவரது பிறவியாகிய பகை நிலைகலங்கி அழியும்படி பேர் இன்பத்து ஓங்கும் - பேரின்ப வீட்டின்கண் உயர்ந்து ஒலிக்கின்ற, பருமிக்க நாத பறை - பருமை மிக்க நாததத்துவமே அவனது முர சாகும் எனக் கிளி கூறியது. இனிய பால்போலும் மொழியையுடைய கிளியே! எங்கள் திருப் பெருந்துறைக்கரசனாகிய இறைவனது திருமுன்னிலையில் ஒலிக்கும் முர சினைச் சொல்லுதி என்று தலைவி வினாவ, இறைவன் மேற்கொண்ட அன்பினால் பிறவிப்பகை கலங்கி அழியும்படி பேரின்ப வீட்டின் கண் உயர்ந்து ஒலிக்கின்ற நாததத்துவமே அவனது முரசாகும் எனக் கிளி கூறியது. பான்மொழி - பால்போலும் இனியமொழி. 'பாலெ -த்தனைய மொழியாள்" (ஞான. 70-2) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. முன்பால் - திருமுன்னிலையில். அன்பால் ஓங்கும் என இயையும். பிற விப்பகை - பிறவியாகிய பகை. பிறவியைப் பகை என்றது துன்பம் பயத்தல் பற்றி. நாதப்பறையின் முழக்கத்தாற் பிறவிப்பகை நிலை கலங்கி அழிதலின் "பிறவிப்பகை கலங்க" என்றார். பேரின்பத்து பேரின்பத்தையுடைய வீட்டுலகில். ஓங்குதல்- உயர்ந்து ஒலித்தல். பரு -பருமை. நாதப்பறை - நாததத்துவமாகிய பறை. நாதப்பறையே இறைவன் பறையாதல். "நாதப்பெரும்பறை நவின்று கறங்கவும் அழுக்கடையாமல் ஆண்டுகொண் டருள்பவன்” ''செம்மேனியர் நாதப்பறையினர்" என அடிகள் அருளியவாற்றானுமறிக. இதனைத் திருக்கரத்தில் பொருந்திய தமருகம் என உரைப்பினுமமையும். தமருகத்தில் சிருட்டி கூறப்படுதலின், சிருட்டிக்கப்பட்டவுயிர் திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம் என்பவற்றை அடைதல் ஒரு தலையாகலின் அதனைப் 'பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப்பறை" என்றார். இதன்கண், ''பருமிக்க நாதப்பறை" என்பதனால் இறைவன் முரசு கூறப்பட்டது. 8 (கீர்த்தி 108-9) (அன்னைப்பத்து 1)
363 திருத்தசாங்கம் முதி இன்பான் மொழிக்கிள்ளா யெங்கள் பெருந்துறைக்கோன் முன்பான் முழங்கு முரசியம்பாய் - அன்பால் பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை . 877 : ரை . இன் பால் மொழி கிள்ளாய் - இனிய பால்போன்ற மொழியினையுடைய கிளியே எங்கள் பெருந்துறைக் கோன் முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் - எங்கள் திருப்பெருந்துறைக்கரசனாகிய இறைவனது திருமுன்னிலையில் ஒலிக்கும் முரசினைச் சொல்லுதி எனத் தலைவி வினாவ அன்பால் - இறைவன்மேற்கொண்ட அன்பினால் பிறவி பகை கலங்க - அடியவரது பிறவியாகிய பகை நிலைகலங்கி அழியும்படி பேர் இன்பத்து ஓங்கும் - பேரின்ப வீட்டின்கண் உயர்ந்து ஒலிக்கின்ற பருமிக்க நாத பறை - பருமை மிக்க நாததத்துவமே அவனது முர சாகும் எனக் கிளி கூறியது . இனிய பால்போலும் மொழியையுடைய கிளியே ! எங்கள் திருப் பெருந்துறைக்கரசனாகிய இறைவனது திருமுன்னிலையில் ஒலிக்கும் முர சினைச் சொல்லுதி என்று தலைவி வினாவ இறைவன் மேற்கொண்ட அன்பினால் பிறவிப்பகை கலங்கி அழியும்படி பேரின்ப வீட்டின் கண் உயர்ந்து ஒலிக்கின்ற நாததத்துவமே அவனது முரசாகும் எனக் கிளி கூறியது . பான்மொழி - பால்போலும் இனியமொழி . ' பாலெ -த்தனைய மொழியாள் ( ஞான . 70-2 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . முன்பால் - திருமுன்னிலையில் . அன்பால் ஓங்கும் என இயையும் . பிற விப்பகை - பிறவியாகிய பகை . பிறவியைப் பகை என்றது துன்பம் பயத்தல் பற்றி . நாதப்பறையின் முழக்கத்தாற் பிறவிப்பகை நிலை கலங்கி அழிதலின் பிறவிப்பகை கலங்க என்றார் . பேரின்பத்து பேரின்பத்தையுடைய வீட்டுலகில் . ஓங்குதல் உயர்ந்து ஒலித்தல் . பரு -பருமை . நாதப்பறை - நாததத்துவமாகிய பறை . நாதப்பறையே இறைவன் பறையாதல் . நாதப்பெரும்பறை நவின்று கறங்கவும் அழுக்கடையாமல் ஆண்டுகொண் டருள்பவன் ' ' செம்மேனியர் நாதப்பறையினர் என அடிகள் அருளியவாற்றானுமறிக . இதனைத் திருக்கரத்தில் பொருந்திய தமருகம் என உரைப்பினுமமையும் . தமருகத்தில் சிருட்டி கூறப்படுதலின் சிருட்டிக்கப்பட்டவுயிர் திதி சங்காரம் திரோபவம் அனுக்கிரகம் என்பவற்றை அடைதல் ஒரு தலையாகலின் அதனைப் ' பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப்பறை என்றார் . இதன்கண் ' ' பருமிக்க நாதப்பறை என்பதனால் இறைவன் முரசு கூறப்பட்டது . 8 ( கீர்த்தி 108-9 ) ( அன்னைப்பத்து 1 )