திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

20. திருப்பள்ளியெழுச்சி 22.0 திரோதானசுத்தி திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது இது திருப்பெருந் துறையில் அருளிச் செய்யப்பட்டது. அகப்புற மாகிய கைக்கிளைத் திணைக்குப் புறனாகிய பாடாண் திணையில் "தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் - சூதர் ஏத்திய துயிலெடை நிலை யும்' (புறத்திணை. 36; எனத்தொல்காப்பியத்திற் கூறப்பட்ட துறைக்கு அமைய இத் திருப்பள்ளி எழுச்சிப்பதிகம் பொருந்தியுள்ளது. இறை வன் வேண்டுதல் வேண்டாமையிலனாதலின் அடிகள் இறைவனுக்குத் தாவில் நல்லிசையையும் தமக்குப் பேரருளையும் வேண்டலால் கைக் கிளையாய், "சுட்டியொருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்" என்ற அகத்திணை வழியிலன்றி, 'மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே" என்ற புறத்திணைவழியே பாட்டுடைத்தலைவன் பெயரும் நாடும் ஊரும் முதலியன விரவத் தொடுக்கப்பட்டமையால் புற னாகிய பாடாண்திணையாயிற்று. பெரிய திருக்கோயில்களில் நாள்தோறும் விடியற்காலையில் திருப் பள்ளியறையில் இறைவனுக்கு வழிபாடு செய்யும்போது இறைவனைத் துயிலெழுப்புவதாக இப்பதிகம் அமைந்துள்ளது என எண்ணலாம்? ஆனால் மக்களது ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள் எனக்கொள்ளும் முறையில், மக்களாண்டில் மகரம் முதல் மிதுனம் முடிவான உத்தரா யண மாதங்கள் ஆறும் பகற்காலமாகவும், கற்கடகம் முதல் தனு முடி வான தெட்சணாயன மாதங்கள் ஆறும் இராக்காலமாகவும் கொள் ளப்படும். தெட்சணாயனத்தின் முடிவான தனுமாதம் புவரிக்காலம் ஆகின்றது. அதனாலேயே தனுமாதம் முழுவதும் எல்லாக்கோயில் களிலும் விடியற்காலத்தில் திருப்பள்ளியெழுச்சிப் பூசை நடைபெற்று வருகின்றது. இதனை அனுசரித்தே அடிகள் திருப்பள்ளியெழுச்சிப் பதி கம் அருளிச் செய்திருத்தல் ண்டும். அடிகளது திருவுளக் குறிப் பைக் கருதிப்போலும் தனுமாதத்தில் திருப்பள்ளியெழுச்சிப் பூசைக்கு முன் ஒவ்வொருநாளும் இறைவன் சந்நிதியில் இத்திருப்பதி கம் ஓதப்படுகின்றது. ஆதலால் தனுமாதத்தில் நிகழும் திருப்பள்ளி யெழுச்சிப் பூசைக்கும் இத் திருப்பதிகத்திற்கும் தொடர்புண்டெனக் கொள்வதே பொருந்துவதாகும். இத்திருப்பதிகத்தின் உட்பொருள் திரோதான சுத்தியெனக் கூறப் பட்டுள்ளது. திரோதானம்-மறைப்பு. சுத்தி - நீக்கம். இறைவன் உயிர் களுக்குச் செய்யும் ஐந்தொழில்களில் திரோபவம் (மறைப்பு) ஒன்று. அது உயிர்களைப் போகங்களில் திளைக்கச் செய்வது. அதனால் உயிர்கள் போகங்களை மிகவும் அனுபவித்து உவர்ப்படைந்து அருள் வழியை
20. திருப்பள்ளியெழுச்சி 22.0 திரோதானசுத்தி திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது இது திருப்பெருந் துறையில் அருளிச் செய்யப்பட்டது . அகப்புற மாகிய கைக்கிளைத் திணைக்குப் புறனாகிய பாடாண் திணையில் தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் - சூதர் ஏத்திய துயிலெடை நிலை யும் ' ( புறத்திணை . 36 ; எனத்தொல்காப்பியத்திற் கூறப்பட்ட துறைக்கு அமைய இத் திருப்பள்ளி எழுச்சிப்பதிகம் பொருந்தியுள்ளது . இறை வன் வேண்டுதல் வேண்டாமையிலனாதலின் அடிகள் இறைவனுக்குத் தாவில் நல்லிசையையும் தமக்குப் பேரருளையும் வேண்டலால் கைக் கிளையாய் சுட்டியொருவர்ப் பெயர் கொளப் பெறாஅர் என்ற அகத்திணை வழியிலன்றி ' மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே என்ற புறத்திணைவழியே பாட்டுடைத்தலைவன் பெயரும் நாடும் ஊரும் முதலியன விரவத் தொடுக்கப்பட்டமையால் புற னாகிய பாடாண்திணையாயிற்று . பெரிய திருக்கோயில்களில் நாள்தோறும் விடியற்காலையில் திருப் பள்ளியறையில் இறைவனுக்கு வழிபாடு செய்யும்போது இறைவனைத் துயிலெழுப்புவதாக இப்பதிகம் அமைந்துள்ளது என எண்ணலாம் ? ஆனால் மக்களது ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள் எனக்கொள்ளும் முறையில் மக்களாண்டில் மகரம் முதல் மிதுனம் முடிவான உத்தரா யண மாதங்கள் ஆறும் பகற்காலமாகவும் கற்கடகம் முதல் தனு முடி வான தெட்சணாயன மாதங்கள் ஆறும் இராக்காலமாகவும் கொள் ளப்படும் . தெட்சணாயனத்தின் முடிவான தனுமாதம் புவரிக்காலம் ஆகின்றது . அதனாலேயே தனுமாதம் முழுவதும் எல்லாக்கோயில் களிலும் விடியற்காலத்தில் திருப்பள்ளியெழுச்சிப் பூசை நடைபெற்று வருகின்றது . இதனை அனுசரித்தே அடிகள் திருப்பள்ளியெழுச்சிப் பதி கம் அருளிச் செய்திருத்தல் ண்டும் . அடிகளது திருவுளக் குறிப் பைக் கருதிப்போலும் தனுமாதத்தில் திருப்பள்ளியெழுச்சிப் பூசைக்கு முன் ஒவ்வொருநாளும் இறைவன் சந்நிதியில் இத்திருப்பதி கம் ஓதப்படுகின்றது . ஆதலால் தனுமாதத்தில் நிகழும் திருப்பள்ளி யெழுச்சிப் பூசைக்கும் இத் திருப்பதிகத்திற்கும் தொடர்புண்டெனக் கொள்வதே பொருந்துவதாகும் . இத்திருப்பதிகத்தின் உட்பொருள் திரோதான சுத்தியெனக் கூறப் பட்டுள்ளது . திரோதானம் - மறைப்பு . சுத்தி - நீக்கம் . இறைவன் உயிர் களுக்குச் செய்யும் ஐந்தொழில்களில் திரோபவம் ( மறைப்பு ) ஒன்று . அது உயிர்களைப் போகங்களில் திளைக்கச் செய்வது . அதனால் உயிர்கள் போகங்களை மிகவும் அனுபவித்து உவர்ப்படைந்து அருள் வழியை