திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

492 156 திருவாசக ஆராய்ச்சியுரை பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி யேசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய். ப-ரை. நேர் இழையாய் ஒத்த அணிகலங்களையுடையாய், இரா பகல் பரஞ்சோதிக்கு பாசம் என்பாய் - இரவும் பகலும் எல் லாப் பொருட்கும் அப்பாலாகிய ஒளியையுடைய இறைவனிடம் பத்தியுடையேன் என்று கூறுவாய்; நாம் பேசும்போது எப்போது -நாம் நின்னுடன் உரையாடும் இப்பொழுது எப்பொழுது? இர வும் பகலும் அல்லாத பொழுதா? இ போது ஆர் அமளிக்கே நேசமும் வைத்தனையோ - பரஞ்சோதி யிடத்தன்பல்லாமல் இந்தப் பூக்கள் நிறைந்த படுக்கையினிடத்தும் அன்பு வைத்தனையோ (என்று துயிலெழுப்ப வந்தவர் வினாவுதலும்); நேர் இழையீர் - ஒத்த இழை யினையுடையீர்; சீசி இவையும் சிலவோ - சிச்சீ உங்கள் வாயில் இவ் வாறு இகழ்ந்து கூறும் சொற்களும் சிலவுளவோ? விளையாடி ஏசும் இடம் ஈதோ - விளையாடிக்கொண்டு பழிக்கின்ற காலமும் இதுவோ (என்று துயிலெழுந்தவள் கூற) விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் மலர் பாதம் தந்தருள வந்தருளும் தேசன் - அறிதற்கு அருமை யாலும் கிடைத்தற்கருமையாலும் தேவர்கள் துதித்தற்கு நாணும் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியேங்களுக்குத் தந்த ருளும் பொருட்டு தாமே வலிய இப்பூமியில் எழுந்தருளின ஒளி யுருவனும், சிவலோகன் - சிவலோகத்தையுடையவனும், தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு - தில்லைச்சிற்றம்பலத்துள் ஆனந்தக் கூத்து ஆடுபவனுமாகிய இறைவனிடத்து, அன்பு ஆர் - அன்புடைய நின்போன்றவர் எவ்வளவு உயர்வுடையர்; யாம் ஆர் - யாம் எவ்வளவு தாழ்வுடையோம் (ஆதலால் எங்கள் பிழையைப் பொறுத்தியென எழுப்பியவர் நயமொழி கூறி) எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவீ, இவளை இகழ்ந்து கூறிய பிழை பொறுப்பாயாக (என வேண்டுதல் செய்து அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்) என்பதாம். - நேரிழையாய், இரவும் பகலும் மேலான ஒளிவடிவையுடைய இறைவனிடம் அன்புடையேன் என்று கூறுவாய், நாம் பேசும் இப் பொழுது எப்பொழுது? இரவும் பகலுமல்லாத பொழுதா? பரஞ்
492 156 திருவாசக ஆராய்ச்சியுரை பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி யேசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய் . - ரை . நேர் இழையாய் ஒத்த அணிகலங்களையுடையாய் இரா பகல் பரஞ்சோதிக்கு பாசம் என்பாய் - இரவும் பகலும் எல் லாப் பொருட்கும் அப்பாலாகிய ஒளியையுடைய இறைவனிடம் பத்தியுடையேன் என்று கூறுவாய் ; நாம் பேசும்போது எப்போது -நாம் நின்னுடன் உரையாடும் இப்பொழுது எப்பொழுது ? இர வும் பகலும் அல்லாத பொழுதா ? போது ஆர் அமளிக்கே நேசமும் வைத்தனையோ - பரஞ்சோதி யிடத்தன்பல்லாமல் இந்தப் பூக்கள் நிறைந்த படுக்கையினிடத்தும் அன்பு வைத்தனையோ ( என்று துயிலெழுப்ப வந்தவர் வினாவுதலும் ) ; நேர் இழையீர் - ஒத்த இழை யினையுடையீர் ; சீசி இவையும் சிலவோ - சிச்சீ உங்கள் வாயில் இவ் வாறு இகழ்ந்து கூறும் சொற்களும் சிலவுளவோ ? விளையாடி ஏசும் இடம் ஈதோ - விளையாடிக்கொண்டு பழிக்கின்ற காலமும் இதுவோ ( என்று துயிலெழுந்தவள் கூற ) விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் மலர் பாதம் தந்தருள வந்தருளும் தேசன் - அறிதற்கு அருமை யாலும் கிடைத்தற்கருமையாலும் தேவர்கள் துதித்தற்கு நாணும் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியேங்களுக்குத் தந்த ருளும் பொருட்டு தாமே வலிய இப்பூமியில் எழுந்தருளின ஒளி யுருவனும் சிவலோகன் - சிவலோகத்தையுடையவனும் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு - தில்லைச்சிற்றம்பலத்துள் ஆனந்தக் கூத்து ஆடுபவனுமாகிய இறைவனிடத்து அன்பு ஆர் - அன்புடைய நின்போன்றவர் எவ்வளவு உயர்வுடையர் ; யாம் ஆர் - யாம் எவ்வளவு தாழ்வுடையோம் ( ஆதலால் எங்கள் பிழையைப் பொறுத்தியென எழுப்பியவர் நயமொழி கூறி ) எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதிதேவீ இவளை இகழ்ந்து கூறிய பிழை பொறுப்பாயாக ( என வேண்டுதல் செய்து அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர் ) என்பதாம் . - நேரிழையாய் இரவும் பகலும் மேலான ஒளிவடிவையுடைய இறைவனிடம் அன்புடையேன் என்று கூறுவாய் நாம் பேசும் இப் பொழுது எப்பொழுது ? இரவும் பகலுமல்லாத பொழுதா ? பரஞ்